வெள்ளி, 24 ஆகஸ்ட், 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

                      விருத்தம்

செங்கமலநயனருறையரங்கமென்னுங்
      திவ்யநகர்தனைநோக்கிவந்தனந்தான்

செங்கமலநயனர்தந்தவனந்தசூரி
       செல்வர்வேங்கடநாதாசார்யர்செய்தார்

அங்குள்ளசிஷ்யவர்க்கத்துடனேகூடி
        யவனியெல்லாம்புகழவந்தாரமுதந்தானே

பொங்குவடதிருக்காவிரியையுள்ளன்பு
      பூண்கின்றாரங்குவந்துகாண்கின்றாரே.

 

இராகம் - கலியாணி --  தாளம் -  ஆதி

          பல்லவி.

திருக்காவேரிகண்டின்னந்  திருக்காவென்றுவேதாந்த

குருக்கானந்தரசமே   பெருக்காகவுங்கொண்டதே.

          அனுபல்லவி

     மருக்கமழும்பூஞ்சோலை  நெருக்கமிருபுறமு

     மிருக்கத்தேமாங்கதலி   வருக்கைமுதலாம்பல

விருக்கநன்கனி    மாமதுகூடவே

யுருக்கங்களி      தேனுகள்பாடவே

யருக்கன்முன்பனி  போல்வினையோடவே

தருக்குமந்திர   மாமுரையாடவே

    திருக்குஇசைமன   வருக்குமனதொடு

    திருக்கண்வளரிட    மருத்திரதையெனுந்   (திருக்)

 

                     சரணங்கள்

ஆரங்கதிர்மணிய       பாரங்களிருகரை

யோரங்களும்பரவி    நீரங்கமலமாக

வாரங்கடோறுமேமந்     தாரங்களண்டரிடு

காரங்கமேனித்திருச்     சீரங்கநாயகரா

     மணியரிநாரண         மாலையே

     பணிவதுமாகிய            மாலையே         (திருக்)

ஆவியே  தேவியே    பூவிரி காவிரி

காருயபாவலர்          கூவியேசேவைசெய்

மூவர்கு லாவிய            பூவுயர் மாவள

மேவியு மாவிகள்     கூவமிவையாவையும்

      அமுதநிறைவுதரு      சுமுகவிஜயநதி

      திமிதமுறுகடல்கள்   குழகுமுவெனவரு    (திருக்)

வையகமெங்குஞ்சொல்லுஞ்   சய்யபருவதத்தின்

வமயமகத்தியராந்     துய்யதபோதனரின்

கையின்கடத்தினின்று   செய்யும்பிரவாகினிநீ

யையமில்லாதவளே    மெய்யன் கவேரன்பெண்ணே

      மகிதலமிகவிளை     சாலியே

      வைபவமுளகுண      சாலியே                  (திருக்)

மந்தர முந்த               வெழுந்து கடைந்திடு

ஸந்சிதந் ர்தமர*        யுவந்து குளிர்ந்திட

யிந்திர னுய்ந்திட     வந்தமு  தந்தக

வென்றன் முகுந்தன்    சிறந்து வளர்ந்திட

     வருமுத்தியைநிகர்      தரும்பிரபலமே

      சுருதிசொரிநலமே      கருணைபெருகிவரு   (திருக்)

சொன்னேர்தருமங்கட்கு   முன்னேயுரைப்பதுவு

நின்னேயல்லாது இன்னம்    பின்னேது கொல்வதம்மா

பொன்னே  கொழிக்குநல்ல   மின்னேயெனுந்தெய்வப்ர

சன்னேவுலகுயிருக்       கன்னேநதியரசே

       சுரநதியிலுயர்கலி     யாணியே

        துதிபரவுமிசைகலி    யாணியே

துங்கதரங்க கரங்களி       லங்கவே

சங்குமுழங்கிடவங்கு        நெருங்கிய

குங்குமபங்கதனங்க         ளெனுங்கன

பங்கயசங்குமுதங்கள்     விளங்கிய    

சுலபமதனில் வருநலமே  சுகிர்தப்ர

பலமேவெகுபுண்ணியதலமே  வியபெரிய (திருக்)         

 

 *என்ன முயன்றும்  இது என்ன வார்த்தை என்று தெரியவில்லை. அச்சுப்பிழை எனத்தெரிகின்றது. ஆனால் திருத்த அடியேனுக்கு ஞானமில்லை.

1 கருத்து:

  1. I see a lot of space between the photo of andavan and links to other sites such as Padhukamaalai, namperumal e.t.c. Why can't try to make these links appear right below the image of andavan.

    பதிலளிநீக்கு