சனி, 6 அக்டோபர், 2007

வேதாந்த தேசிக வைபவ ப்ரகாசிகை கீர்த்தனைகள்

விருத்தம்

மொய்த்துக்கண்பனிசோரவெனும்படிக்கே
     முராரியெனுங்கோயில்வளர்முகுந்தன்சேவை
யுற்றுமிகப்புளகிதராய்க்கொண்டுமங்கே
      யுன்னுவரையாதரவாயுகந்தேபார்வை
வைத்துநம்மிராமானுஜன்போலிந்த
        மண்டலத்திலிருமெனமண்டபத்தில் வந்தார்
பத்திராலம்பனம் பண்ணினவன்வந்து
       பார்க்கின்றான்  கக்ஷிசொல்லித் தோற்கின்றானே.

தரு-இராகம்-ஆனந்தபைரவி-தாளம்-ஆதி.

                  பல்லவி

ஆதிசிங்கரருள்கவி - வாதிசிங்கர்மகிமையை-யாராகிலுமறிவாரா

                      அனுபல்லவி

மேதினிபுகழ்த்தூப்புல் --  மீதினில்  வருந்திரு

    வேங்கடநாதாரிய -- ராங்கண்டாவதாரரே.      (ஆதி)

                    சரணங்கள்

நாற்றிசையிலும்புகழ்    திருவரங்கத்திற்பண்டு
     நாடிப்பத்திராலம்பனஞ்     செய்தவன்வரக்கண்டு
கீர்த்திநெடிலாகாரங்    குறிலென்றசொல்லைக்கொண்டு
      கெலித்தேயிவர்கக்ஷியும்   பலித்தேசெயித்ததுண்டு  (ஆதி)

இதிவர்க்குமவனுக்கும்  வெகுநாள்வாதமாய்த்தொந்த
      மேவையுங்கண்டிதஞ்செய்து     எழுதிவந்தாரேகிரந்தஞ்
சததூஷணியென்றும்பேர்    தரித்தாரிந்தப்ரபந்தந்
      தானேவிளங்குமது    சகலர்க்குமேயானந்தம்           (ஆதி)

நூறுகக்ஷியுஞ்சொல்லித்    தோல்வியேயாகிநின்று
       நுணுக்கஞ்சொல்கிறேன்றீர்த்தமுமக்குப்பின்னெனக்கென்று
கூறுகாலத்திற்பரிக    லங்கட்குப்பின்னேசென்று
      கொண்டசேஷத்வத்தாலும்  மக்கினம்செய்தாரேநன்று. (ஆதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக