ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப்பிரகாசிகைக் கீர்த்தனைகள்
தரு இராகம் - தோடி - தாளம் - ஆதி
பல்லவி
தரிசனபரம்பரைகளின்னந் - தெரியச்சொல்கிறேன்.
அனுபல்லவி
தரணிமீதினி லரங்கமாநகர் வருமெதீந்த்ரரைப்பரவிவந்திடும் (தரிசன)
சரணங்கள்
உபயவேதாந்த விபவங்களெல்லா
மபிவிர்த்தியாகிச் சுபகுணந்தந்து
நிபிடசீடர்கள் ப்ரபலமேகொண்ட
சபையெதீந்த்ர தபோநிதியவர் (தரிசன)
மாம்பலாக்கனி தேன்பொழிவைப்போற்
றாம்ப்ரசாதிக்குஞ் சாம்பிரதாயமே
லாம்பிரகாசர்கி டாம்பியாச்சானென்
றாம்பிரபாகர ராம்புராதன (தரிசன)
ஆத்திரேயர்தன் கோத்திரத்தினில்
வாய்த்தனர்பிரண தார்த்தியபஞ்சனர்
சாத்திரரீதிகள் பார்த்தெதிராச
நேத்திரராகவே காத்திருந்தவர் (தரிசன)
விருத்தம்
மண்டலமெலாம்புகழுமெதீந்த்திரர்க்கே
மகாநசிகராகவந்தகிடாம்பியாச்சான்
தொண்டுசெய்துரகசியத்தின்பொருளையெல்லாஞ்
சொலக்கேட்டுத்தமக்குற்றகுமாரபாக்யம்
கண்டிடவிராமானுஜன்றானென்றே
கருணையாய்த்திருநாமஞ்சாத்திப்பின்னும்
பண்டையுடையவர்பிரசாதித்ததெல்லாம்
பாலிப்பார்மிகவுமனுகூலிப்பாரே.
இதுவுமது விருத்தம்
மேதாவிராமா நுஜப்புள்ளானும்
மேதினியிற் ப்ரசித்தராயுபயமான
வேதாந்தப்ரவர்த்தராமவர் குமாரர்
விபுதர்பத்மநாபரென்போர்கருணைதன்னா
லேதாரணியில் வந்துபிரபலங்கொண்டா
ரேராமாநுஜப்புள்ளானென் றோர்மைந்தன்
தோதாநாயகியெனுங்குமாரத்தியாருஞ்
ஜொலிக்கின்றார்பிறந்துபிரபலிக்கின்றாரே.
இதுவுமது
கண்ணிகள் -இராகம் -- சௌராஷ்டிரம் -- தாளம் - ஆதி
பூமாதிருக்குங்கிடாம்பிபற்பநாபர்
புண்ணியசாலிகுமாரர் -- எங்கும்
ராமாநுஜப்புள்ளானென்றுசொல்லுந்திரு
நாமந்தரித்தவர்பேரர்.
வாலவயதுதொடங்கிச்சதுரராய்
மண்டலமீதினிலோங்கத் -- தந்தை
பாலிற்சகலங்களானகலைஞான
பாரங்கதப்பெயர்தாங்க.
சந்தமுந்தர்க்கமுமீமாஞ்சாதியாஞ்
சாஸ்திரமதிகரித்தாரே -- தம்மைப்
பெற்றவராலேயறிந்தபின்வேதாந்தா
பேக்ஷையுடனிருந்தாரே.
இங்கிதைக்கண்டுமங்குள்ள பெரியோ
ரிவருமப்புள்ளாரோவென்றே - அரு
ளங்ஙனேசெய்தாரேயன்றுமுதலாக
வப்புள்ளாராயினரன்றே.
இங்கிப்படித்தாமேசீரங்கப்புள்ளா
ரெனும்பத்மநாபர்க்குவாய்த்த -- வேத
புங்கவரப்புள்ளார் தாமுமிருந்தார்
பொருந்துங்கதையின் ஞ்சைசாற்ற. (மூலத்தில் உள்ளபடி.)
செய்ய எதீந்திரர்க்குஞானபுத்திரரான
திருக்குருகைப்பிரான்புள்ளான் -- அவர்
துய்யவனாகிய எங்களாழ்வானுக்குச்
சொல்லவுமேமனதுள்ளான்.
மாறாதபாஷ்யமுதலானவேதாந்த
மார்க்கந்திருவாய்மொழிக்குத் -- துன்னு
மாறாயிரப்படியிட்டாரேயின்ன
மநேகபிரபந்தம்விழிக்கு
பாத்திரராக்கிரகசியமெல்லாம்
பரிந்துபிரசாதித்தாரங்கே -- மன
தேத்திப்பணிவிடைசெய்துமிருந்தாரே
யெங்களாழ்வானவரிங்கே.
எம்பெருமானாருடன்பிறந்தாள்பிள்ளை
யென்றுஞ்சரஸ்வதிபீடம் -- தானே
யம்புவிமீதினிற்பாஷ்யஸிம்ஹாஸன
வாதிக்கம்பெற்றவிசேடம்.
தேசப்பிரசித்தநடாதூ ராழ்வானுக்குச்
சேருந்திருப்பேரனாராம் - தேவ
ராஜப்பெருமாளுடையகுமாரர்
நடாதூரம்மாளென்னும்பேராம்.
சகலசாத்திரபாரங்கதத்துவமே
தாவிநடாதூராழ்வாரே -- உயர்
ஜெகப்பிரசித்தருமாகியிருந்து
சிறந்துபாரில்வாழ்வாரே.
அவர்தமையனாங்கந்தாடைத்தோழப்ப
ரனுமதிதானேகண்டு -- வெகு
சவரணையாகஎங்களாழ்வானுக்கே
தானபுத்திரகிர்த்தியமுங்கொண்டு
சந்தேகநீங்கும்ஸ்ரீபாஷ்யமுதலான
தத்துவதரிசனரீதி -- இன்ன
மந்திரமுமாகியவாறாயிரப்படி
மற்றுமெல்லாந்தாமேயோதி
எங்களாழ்வானைநடாதூ ரம்மாளவ
ரிப்படியாசிரயித்தாரே -- புவி
யெங்கும்பிரசித்ததரிசனரரகி
யிருந்துமகிமைபெற்றாரே.
நடாதூரம்மாள் -- தரிசனம் -- விருத்தம்
சீராகுநடாதூரம்மாளுந்தாமே
சிறந்திடுங்கிடாம்பியப்புள்ளார்தமக்குஞ்
சீராமப்பிள்ளைதிருப்பேரனாராஞ்
ஜெயவாக்கால்வென்றபட்டர்திருக்குமாரர்
பேரானதிசைவியாசபட்டருக்குப்
பின்னும் ஸ்ரீபாஷ்யமப்பங்கார்க்குந்தாமே
நாராயணன்றிருவடிப்பிரவர்த்தி
நாட்டினார்ஸகலகலைநாட்டினாரே.
இதுவுமது விருத்தம்
செப்பமாநடாதூரம்மாள்சீர்பாதஞ்
சேர்ந்துவே தாந்தமெல்லாந்தெளிந்தேயெங்க
ளப்புள்ளார்தரிசனத்தைவளர்க்குநாளி
லவனியெங்குங்கொண்டாடவிருந்தாரிப்பால்
மைப்புயலிற்றிருமேனிமுதல்வனெங்கள்
வரதராஜப்பெருமாள்மகிழ்ச்சிபொங்கி
யெப்பொழுதும்வளர்பதியேகாஞ்சியென்ன
வேத்துவார்முனிவரெல்லாம்போற்றுவாரே.
Search from any Web page with powerful protection. Get the FREE Windows Live Toolbar Today! Try it now!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக