நிறைவுப் பகுதி
வெள்ளி, 1 ஜூன், 2012
புதன், 30 மே, 2012
வைத்தமாநிதி 34
மன்னிக்க வேண்டுகிறேன்.
இந்த வலையைத் தொடர்பவர்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். சில நாட்களாகவே (வாரங்களாகவே) அடியேனால் தினசரி பதிவிட முடியவில்லை. தினசரி என்றில்லாவிட்டாலும்கூட ஒரு ஒழுங்கான கால இடைவெளியில்கூட பதிவுகளை இடமுடியவில்லை. தட்டச்சிட்டு பதிவுகளை இட, அடியேனை ஆட்கொண்டிருக்கும் ஒருவிதமான சோம்பேறித்தனம் பெரும் இடைஞ்சலாயுள்ளது. தவிரவும், இன்னொரு முக்கியமான நூலை இட வேண்டியுள்ளது. வைத்தமாநிதி போன்ற நூல்கள் இலக்கிய ரசனையுடன் படித்து இன்புறத் தக்கவை. ஆனால் இனி இடப்போவதோ நாம் அவசியம் தெரிந்து கொண்டே ஆக வேண்டிய விஷயங்களை எளிமையாகச் சொல்லும் நூல். அதை உடனே வெளியிட வேண்டுமென்று அடியேன் பெரிதும் மதிக்கின்ற திரு வி. எஸ். ஸ்வாமி விருப்பம் தெரிவித்திருந்தார். தானே நூல் முழுவதையும் தட்டச்சிட்டுத் தருவதாக, நம் எல்லாருக்கும் வைதிக விஷயங்களிலும், தர்ம சாஸ்திரங்களிலும் வழிகாட்டி வரும் ஸ்ரீ என்.வி.ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி முன்வந்து ஒரு பெரும்பகுதியைத் தட்டச்சிட்டு அனுப்பியும் விட்டார். எனவே, இந்த வைத்தமாநிதியின் இறுதிப் பகுதிகளை ஸ்கான் செய்தே இங்கு இட்டிருக்கிறேன். வரும் ஜூன் 3ம் தேதி முதல் புதிய நூலினை (வழக்கம்போல் 50 வருடத்திற்கு முன் வெளியான பழைய நூல்தான்) இங்கு இட ஆரம்பிக்கிறேன். “வைத்தமாநிதி”யை அனுபவிக்கும் அன்பர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன்.
………..நாளை நிறைவுறும்
செவ்வாய், 29 மே, 2012
நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸம் 28-5-2012
ஸ்ரீமத் சின்னாண்டவனின் சரிதத்தை நிறைவு செய்து அதன் தொடர்ச்சியாக ஸ்ரீமத் காடந்தேத்தி ஆண்டவனின் அற்புத வரலாற்றை ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி உபந்யஸிப்பதைக் கேட்டு மகிழ, ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம வரலாற்றிலும், ஸ்ரீ அஹோபில மட வரலாற்றிலும் ஆசார்யர்கள் இல்லாமல் சில வருடங்கள் இருந்ததையும் அறிய.
http://www.mediafire.com/?o1wqu2ddly6d3nb
நேரடியாகக் கேட்டு இன்புற
வியாழன், 24 மே, 2012
வைத்தமாநிதி 33
ருக்மிணி கல்யாணம்
இன்துணை பதுமத்து அலர்மகள் உருப்பிணி நங்கை, அவ்வூர்த் துவரைத் திருநாமம் கற்றதன் பின்னையே, சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும், தேவபிரானையே அவரைப் பிராயம் தொடங்கி, தூராத மனக்காதல் கொண்டு, கரங்கள் கூப்பித் தொழும், அத்திசை உற்றுநோக்கியே இருந்து நாள்தொறும் அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்கும்; துன்பக் கடல்புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழன்று, பெருமையும் நாணும் தவிர்த்து, வடமொழி மறைவாணரை, தன் தூதாய், தாமரைக்கண் பெருமானார்க்கு வாயில் தூது மொழிந்து, “வைதிகரே! தொண்டீர் வம்மின்! தொழுது இரந்தேன்! முன்னம் அவரிடம் நீர் செல்வீர்கள்! மறவேல்மினோ” என் கனிவாய்ப் பெருமாளைக் கண்டு, பாதம் கைதொழுது, பணியீர்; உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே! பிரானார் புனைந்துழாய் மலர்க்கே மாலாகி மெலியும் என்னைச் சொல்லி இசைமின்கள்
……….தொடரும்….
(எதிர்பாராத வேலைப் பளுவின் காரணமாக, ஒரே தடவையாக இந்த ருக்மிணி கல்யாணத்தை இங்கு இடமுடியவில்லை. தொடர்பவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.) .
செவ்வாய், 22 மே, 2012
வைத்தமாநிதி 32
குரு தக்ஷிணை கொடுத்ததும்
முதுதுவரைக் குலபதி ஆனதும்
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும், முந்து நூலும் முன் ஈந்த அந்தணாளன் ஒருவன், “காதல் என் மகன் புகலிடம் காணேன். கண்டு நீ தருவாய்” என்று கோதுஇல் வாய்மையினான் வேண்ட; குற்றம் இன்றிக் குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய், மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை; ஓதுவித்த தக்கணையா அஞ்ஞான்று உருவுருவே கொடுத்து; குறை முடித்தான் கோவலர் குரிசில்.
வட மாமதுரை நாட்டில் தலைப்பழி எய்தி நன்மை இழந்து தலையிடாதே சமரில் தோற்றுச் சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் பொங்கு முந்நீர்க்கடல் சூழ், நித்திலங்கள் பவ்வத்திரை உலவு துவராபதி சென்றான்; அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ, இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப, ஒரு நாயகமாய் உலகு ஆண்டான் ஆயர்தம் பெருமான்.
[ நாளை “ருக்மணி கல்யாணம்” மிக விரிவாக]