ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

கோயிற்கெழுந்தருளியது

விருத்தம்

வரம்பிலாப்புகழ்சிறந்துவளமேயோங்கு

       வடதிருக்காவிரியினீராட்டஞ்செய்து

கரம்பனூருத்தமனைத்தொழுதுகண்டே

      கனகமயகோபுரஞ்சூழ்கோயில்கொண்டே

நிரம்பியவானந்தவெள்ளம் பெருகக்கொண்டு

        நிறையவேயாராதவருளன்றேத்திப்

பரம்பியவங்குளவரெதிர்கொண்டுகாணப்

        பரிசிப்பார்  பொன்னரங்கந் தரிசிப்பாரே.

தரு- இராகம்-- நாதநாமக்ரியை-- தாளம்-- ஆதி

பல்லவி

தெரிசனநிகமாந்ததேசிகன்  செய்தார்

தென்னரங்கத்திற் றெரிசனம்

    அனுபல்லவி

தெரிசனநிகமாந்த                    தேசிகபீடஞ்

செகத்திற்பவக்கடலுக்           கொருவோடம்

பெரியதிருவடியின்                    மந்திரபாடம்

பிரபலர்திருவரங்கர்       கருணைக்கோர்கூடம்       (தெரிச)

                                            சரணங்கள்

ஆதிகேசவனைப்             போற்றி

வேதவசனங்கள்                சாற்றி

மேதினியெங்கெங்குங்      கீர்த்தி

யோதுதாமோதர                னேர்த்தி

யடுத்தகோபுரத்தை     நாடியே -- பணிந்துஞ்சூடிக்

கொடுத்தநாச்சியாரைப்   பாடியே -- மன்னனாரையுந்

தொடுத்தபெரியாழ்வாரைத்  தேடியே -- தொண்டரடிப்பொடியென்

றெடுத்தவாழ்வாரைக்கொண்   டாடியே - பார்த்தசாரதியென்னு

மன்னவர்பொன்னடிமுன்னதமாய்ப்ப  ணிசைந்து -- பாஷ்யகாரர்தம்

சன்னதிதன்னதின்   முன்னதாகப்புகுந்து -- வந்தேதமியேனா

மென்னவேபன்னிய   சொன்னயச்சுலோகம்பகர்ந்து -- காதாதாவென்

றின்னவைவன்னனையென்னெதிமன்னர்க்குயாந்து -- அனுசந்தித்தே

யரியதபோநிதிபுருஷகாரமாய்ப்  பண்டு -- தென்னரங்கத்திற்

பெரியபெருமாளைத்திருவடிதொழுவராய்க்கொண்டு--கோபுரநைனார்களை

வரிசையாய்க்கிட்டித்திருவாழியாழ்வானைத்தொண்டு-- செய்வோமென்றசு

தரிசனாஷ்டகஞ்சமர்ப்பித்துத்துதிமிக  விண்டு-- வந்தனஞ்செய்தே

ஆரெங்கும்புகழே           சொன்ன

சீரங்கநாச்சியார்          முன்னன்

ரேரங்கநகரின்        மன்ன

னாரங்கருள்சேர்ப்ர         சன்ன                               (தெரிச)

எடுத்தகையழகியநைனாரை       யன்பாலே

தொடுத்தங்கேதொழுதுமத்திரு      வாசலாலே

அடுத்தபின்னுள்ளேபுகுந்தும்      பாவாறே

திடத்துடன்வலமாகவந்ததின்     மேலே

யேற்றசந்திரபுஷ்கரணியிலே      வேதி--யர்சிகாமணியிவர்

தீர்த்தஞ்சுவீகரித்திசைமந்ந்த்ர     மோதி- அக்கரையில் விளங்கிய

தீர்த்தரக்ஷகர்களானகுமு              தாதி--களையுமின்னஞ்

சூத்திரகாரவேதவியாசபகவா       னாதி--யிவர்களையும் வணங்கி

யேகிருஷ்ணபதரிகாசிரமவாசிநாராயண   ரான-- வைகுந்தநாதர்

பாகத்தினாழ்வார்கள் திருமழிசையாழ்வார்முதல் ஞான-- மிகுந்தவரை

யோகத்தினுடனிவர்திருவடிதொழுதுகொண்டே-- நல்லருளைபெற்று

மேகத்தர்பெரியதிருவடியைநோக்கியங்   கான---- பிரணாமஞ்செய்தன்

பிருக்கவேண்டியுமங்குநின்றுயர்திருக்கொட்டாரந்-- தனிலேசென்று

பெருக்கமொங்குசெங்கமலநாச்சியாரை  யந்நேரஞ்-- சுற்றிக்கொண்டன்பு

பருக்குமுதலாழ்வாரையுந்துதிசெய்து நமஸ்காரங் - கைக்கொண்டுமன

துருக்கமாகவே வரிசைசெய்தார்     பிரகாரம் -- பரவாசுதேவனையு

மிலங்குதிருமங்கையாழ்வார்    கோபுரஞ்சுற்றும்

துலங்கவேயாரியபட்டர்திரு    வாசல்பெற்றும்

நலங்கோளணியரங்கர்திரு      முற்றத்திலுற்றுந்

தலங்கள்புகழ்பாஷியகாரர்      குறட்டைக்குறித்துந்              (தெரிச)

பலிபீடத்துக்குத்தெற்கே       சாஷ்டாங்கவந்தனம்

நலியாமனத்தினிற்பத்தி       சேர்ந்தாங்கிசைந்தனஞ்

சொலியேபிரதக்ஷிணமாய்ப்    பார்த்தாங்குயர்ந்தன

மலைநேர்கோபுரமதி             லாஸ்தானபந்தனம்

பலபலமண்டபகோபுர  நேர்த்தி-- யைப்பணிந்தேதிருச்சுற்றி

யிலுள்ளஞானப்பிரானையுந்தச      மூர்த்தி--  லக்ஷ்மிநாராயணர்கள்

சொலுமிவர்களைமங்களாசாஸனஞ்  சாத்தி-- அயக்ரீவரைக்கிட்டி

நலப்பிரசீத்துநிகமசதமென      வேத்தி-- இன்னமுந்திருமடப்

பள்ளியரவிந்த  நாச்சியார்சங்கநிதிபத்மநிதி மேலே -- கூடப்பாண்டிய

வள்ளல்கோபுரத்தைக்கிட்டித்துவாரபாலரனுமதியாலே -உட்சென்றுதூப்புல்

பிள்ளை கிழக்கேநாலடி நடந்துதண்டன்சமர்ப் பித்துயர்நூலே-   

                                                                             சொன்முறைகண்டு

விள்ளுவர்திருக்கருகூலநாச்சியாரைமிகு பரிவாலே-- வணங்கித் 

                                                                              திருமாலை

பலகையருகேதொண்டரடிப்பொடியாழ்வாரையுமுன்பு--                                                           பரவாசுதேவனையும்

நலப்ரணவாகாரவேதசிருங்கவிமானத்தையும் பின்பு-                                                          விபீஷனாழ்வானை 

வலமாகச்சேனாமுதலாழ்வானைத்தொழுததே யன்பு - உறையூர்நாச்சியா

தலமேவுகிருஷ்ணனையுஞ்சேவித்ததுவும்வெகுதென்பு-- அழகியமணவாளன்

பருமண்டபத்திலே  பாங்காகவேறிக்

திருவணக்கந்திரு     வாசன்மேற்றேறிப்

பெரியதிருவடிகை    னாந்துதிமீறி

வரிசைத்துவாரபாலர்    ஜயவிஜயரைக்கூறித்         (தெரிச)

நயனத்தானந்த          கருணாரசம்வைத்து

ஜயவிஜயர்களனு        மதியுந்தான்பெற்று

வயனமாய்த்திரி           வுடைமாளிகையுற்று

உயர்வுள்ளசேர்த்தியி    லெழுந்தருளுங்கிரமத்து

நாபிநளினநாகசயனநர    சிங்கர் - நாராயணர்களைச்சொல்

லாபமுடன்றொழுதுதிருமணத்தூணருகேயெங்க-- ளனந்தாரியகுல

தீபர்விளங்கிநின்றேழையெய்திலேனெனவேதுலங்க-- பாட்டனுசந்தனைப்

                                                                                                  பிர

தாபமுடன்றிருவடிகளின்மிகுந்து   வணங்க -- அமலனாதிப்பிரானை

நாட்டியிப்படிப்பாதாதிகேசமாகவரங்கத்தம்மான்றிருக்க -- மலபதமென்று

பாட்டுத்தொடங்கியாழ்வாரனுபவித்தார்போலிவரன்புபெருக்கத்--திருக்

                                                                         கணைக்கால்களையும்

பூட்டுமுழந்தாடித்திருத்தொடையுந்தியுயர்மார்பு வலத்திருக்கை --

                                                                  ஆசானுலம்பியாகக்

கூட்டிமற்றதிருக்கையுமுகமண்டலமுமணிநெருக்க--ஆதிராச்சியசூசகமாம்

நல்லாபிஷேகத்தையுந்தனித்தனியாகவனுபவித்தார்-- பாதாம்போஜமென்

சொல்லியிசைவடமொழிதனிற்றுதிபரவவுற்பவித்தார்-- வாசனாமௌலி

யெல்லையாகமீளவங்கேசேர்த்தனுபவித்துக்கைகுவித்தார்-- பாயுநீரரங்கம்

வல்லவர்தொடுத்துப்பின்னுங்காந்தோதாரையென்னுங்கவித்தார்--

                                                                   அழகியமணவாளன்

அங்கநாதன்மேனியாகதிலக       மென்றார்க்கு

மங்கேசேர்த்தியிலனுபவித்த       துண்டாக்கு

மெங்கள்தீவினையாகியபாவங்கள்    போக்கும்

பொங்குபுண்ணியர்திருவுள்ளத்திற்  றேக்கும்              (தெரிச)

                                         

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

                      விருத்தம்

செங்கமலநயனருறையரங்கமென்னுங்
      திவ்யநகர்தனைநோக்கிவந்தனந்தான்

செங்கமலநயனர்தந்தவனந்தசூரி
       செல்வர்வேங்கடநாதாசார்யர்செய்தார்

அங்குள்ளசிஷ்யவர்க்கத்துடனேகூடி
        யவனியெல்லாம்புகழவந்தாரமுதந்தானே

பொங்குவடதிருக்காவிரியையுள்ளன்பு
      பூண்கின்றாரங்குவந்துகாண்கின்றாரே.

 

இராகம் - கலியாணி --  தாளம் -  ஆதி

          பல்லவி.

திருக்காவேரிகண்டின்னந்  திருக்காவென்றுவேதாந்த

குருக்கானந்தரசமே   பெருக்காகவுங்கொண்டதே.

          அனுபல்லவி

     மருக்கமழும்பூஞ்சோலை  நெருக்கமிருபுறமு

     மிருக்கத்தேமாங்கதலி   வருக்கைமுதலாம்பல

விருக்கநன்கனி    மாமதுகூடவே

யுருக்கங்களி      தேனுகள்பாடவே

யருக்கன்முன்பனி  போல்வினையோடவே

தருக்குமந்திர   மாமுரையாடவே

    திருக்குஇசைமன   வருக்குமனதொடு

    திருக்கண்வளரிட    மருத்திரதையெனுந்   (திருக்)

 

                     சரணங்கள்

ஆரங்கதிர்மணிய       பாரங்களிருகரை

யோரங்களும்பரவி    நீரங்கமலமாக

வாரங்கடோறுமேமந்     தாரங்களண்டரிடு

காரங்கமேனித்திருச்     சீரங்கநாயகரா

     மணியரிநாரண         மாலையே

     பணிவதுமாகிய            மாலையே         (திருக்)

ஆவியே  தேவியே    பூவிரி காவிரி

காருயபாவலர்          கூவியேசேவைசெய்

மூவர்கு லாவிய            பூவுயர் மாவள

மேவியு மாவிகள்     கூவமிவையாவையும்

      அமுதநிறைவுதரு      சுமுகவிஜயநதி

      திமிதமுறுகடல்கள்   குழகுமுவெனவரு    (திருக்)

வையகமெங்குஞ்சொல்லுஞ்   சய்யபருவதத்தின்

வமயமகத்தியராந்     துய்யதபோதனரின்

கையின்கடத்தினின்று   செய்யும்பிரவாகினிநீ

யையமில்லாதவளே    மெய்யன் கவேரன்பெண்ணே

      மகிதலமிகவிளை     சாலியே

      வைபவமுளகுண      சாலியே                  (திருக்)

மந்தர முந்த               வெழுந்து கடைந்திடு

ஸந்சிதந் ர்தமர*        யுவந்து குளிர்ந்திட

யிந்திர னுய்ந்திட     வந்தமு  தந்தக

வென்றன் முகுந்தன்    சிறந்து வளர்ந்திட

     வருமுத்தியைநிகர்      தரும்பிரபலமே

      சுருதிசொரிநலமே      கருணைபெருகிவரு   (திருக்)

சொன்னேர்தருமங்கட்கு   முன்னேயுரைப்பதுவு

நின்னேயல்லாது இன்னம்    பின்னேது கொல்வதம்மா

பொன்னே  கொழிக்குநல்ல   மின்னேயெனுந்தெய்வப்ர

சன்னேவுலகுயிருக்       கன்னேநதியரசே

       சுரநதியிலுயர்கலி     யாணியே

        துதிபரவுமிசைகலி    யாணியே

துங்கதரங்க கரங்களி       லங்கவே

சங்குமுழங்கிடவங்கு        நெருங்கிய

குங்குமபங்கதனங்க         ளெனுங்கன

பங்கயசங்குமுதங்கள்     விளங்கிய    

சுலபமதனில் வருநலமே  சுகிர்தப்ர

பலமேவெகுபுண்ணியதலமே  வியபெரிய (திருக்)         

 

 *என்ன முயன்றும்  இது என்ன வார்த்தை என்று தெரியவில்லை. அச்சுப்பிழை எனத்தெரிகின்றது. ஆனால் திருத்த அடியேனுக்கு ஞானமில்லை.

புதன், 8 ஆகஸ்ட், 2007

श्रिवॆदान्त दॆशिक वैभवप्रकाशिका

काञ्चयां नभस्यश्रॊणायाम् अनन्तार्यगुरॊस्सुत:।
जातॊ यॊ जनभाग्यॆन श्रिमन्तं तमहं भजॆ:॥
जातकर्मादिकं सर्वम् पिता यस्याकरॊद् गुरॊ:।
तं वॆङ्कदॆशमनिशाम् तॊतारम्भसुतं भजॆ:॥
अस्माकं भवसञ्जार शान्तयॆ विबुधाधिप:।
पद्म्यां चचार यॊभूम्याम् तं वन्दॆ वॆंकटाधिपम्॥
तृतीयाब्दॆ गुरॊर्यस्य चूडाकर्माकरॊत् पिता।
पुण्डरीकाक्षपौत्रं तम् पुरुषश्रॆष्टमाश्रयॆ॥
अश्रराणि तत: सर्वाण्याचायार्त् गुरुरग्रहीत्।
यस्तं वॆङ्कटनाथार्यम् वन्दॆ मतिमतां वरम्॥

Sri Vedantha Desika Vaibava Prakasika

॥श्रि:॥

श्रिचॊळसिम्हपुर वास्तव्यॆन चण्डमारुताख्य ग्रन्थप्रणॆत्र

दोड् डयाचार्यॆण विरचिता

श्रिवॆदान्तदॆशिक वैभवप्रकाशिका
वाथूलश्रिनिवासार्य तनयं विनयॊज्वलम्

प्रज्ञानिधिम् प्रपध्यॆऽहम् श्रिनिवास महागुरुम्

श्रिनिवासमहाचार्य प्राप्तवॆदान्तसंपदम्

लक्ष्मणार्य दयापात्रं श्रिनिवासगुरुं भजॆ ।

ग्रन्थारम्भ:

कविवादि शिरॊरत्नं कल्याणगुण भूषणम्।
विश्वामित्रान्वयाब्धीन्दुं वॆदान्तगुरुमाश्रयॆ ॥
वॆङ्कटॆशस्य संकल्पात् विश्वामित्र कुलाम्बुधौ ।
घण्टावतीर्ण यनुमूर्त्या तं दॆशिकवरं भजॆ ॥

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

 

தரு -- இராகம் -- உசேனி -- தாளம் -- ரூபகம்

பல்லவி

சிங்கமிருக்கிறபோது -- நமக் - கிங்கிந்தயோசனையேது

அனுபல்லவி

தங்கங்கருணையாம்  வங்கம்  வேதாந்தப்ர
சங்கம்பரமத பங்கங்கவிவாதி                                      (சிங்கம்)

சரணங்கள்

வெண்ணெயிருக்கவுநெய்யை           விரைந்துதேடுவானேன்
       விளக்கிருக்கவக்கினியை              வேண்டிக்கூடுவானேன்
கண்ணின்முன்னேகைப்புண்ணுக்கு   கண்ணாடிபோடுவானேன்
      காஞ்சிபுரமிருக்கநாம்சங்கைகள்    படுவானேன் -- அவர்
பண்ணுமதங்களைக்கண்ணுநா          வுள்ளவர்
       கண்ணுள்ளகர்த்தர்களெண்ணும்படி       தூப்புற்    (சிங்கம்)
சாமியெம்பெருமானார்தாமே                யவதாரம்
       ஸர்வதந்திரஸ்வாதந்திரஸ்வாமிவேத   ஸாரம்
பூமிமேலவர்மகிமையளவிடவேய              பாரம்
        புதஜனங்கள்திலகரிவர்புண்ணியவார   வாரம்--அவர்
தாமேகமலாக்ஷ - சோமயாஜி                பேரர்
      மாமலையார்தம்கண்டாமணி          ரூபக                  (சிங்கம்)
தர்க்கிகளாங்குன்றுகளைத்தகர்க்குஞ்        சதகோடி
       தலைமைராமானுஜசித்தாந்தமது        நீடிக்
கற்கியுருவாகிவந்தார்கமலசரண்               பாடிக்
      கவிவாதியானைகட்குக்கண்டீரவ          நாடித்--தொண்டர்
வர்க்கங்களின்முன்னேநிற்குங்                  கவலைத
        விர்க்குஞ்சகலமுங்கற்குங்                குருமணி           (சிங்கம்)

வெண்பா

திருவரங்க   மேவுந்  தெரிசனத்த ரெல்லா
மொருமையா யோசனை செய்து -- பெருமையாய்ச்
சாதனமொன்  றேயெழுதத்  தக்கவராந்  தேசிகர்சீர்
பாதமே  நாயடியேன் பற்று.

கொச்சகம்

பொங்கோதஞ்சூழ்ந்தவிந்தப்புவனியோடு விண்ணுலகு
மங்காதஞ்சேராமேயாள்கின்ற  வெம்பெருமான்
செங்கோலுடைய பொன்னந்திருவரங்கற்   செல்வர்வளர்
தங்கோயிற் சேனையர்கோன் சாதனமாயிட்டனரே

விருத்தம்

திருவரங்கச்செல்வனார்  தமது கோயிற்
          சேனையர்கோன்சாதனத்தைக்கண்டே தூப்புல்
வருவரங்கம்   புளகிதராய்ச்சிரமேலாக
           வகித்தருளிவரதரருள்செய்துபண்டே
தருவரங்கைக்கொண்டு  மெதீந்திரரைப் போலே
           தாமுமெழுந்தருளிவந்தாரரங்கநோக்குந்
துருவரங்கந் தவளமிகுநகரை  யென்றுஞ்
            சொல் லுவார்வினைகளெல்லாம் வெல்லுவாரே.

தரு - இராகம் - சவுராஷ்டரம் - தாளம் -சாப்பு
பல்லவி
செங்கனகமதில் சூழ்ந்து செழிப்புமிகுந்தகோயிற்
திருவரங்கர்கண்வளரச்சேர்ந்தகோயிலே.
அனுபல்லவி

கங்கையிற்புனிதமாயகாவிரிநடுவுப்பாட்டுப்
பொங்குநீர்பரந்துபாயும் பூம்பொழிலரங்கர்  கோயிற்             (செங்)

சரணங்கள்

ஆராதவருளமு                               தம்பொதிந்தகோயிலாம்
      அம்புஜத்தோனயோத்திமன்      னற்களித்தகோயிலாம்
தோராததனிவீரன்                     றொழுதிசைந்தகோயிலாம்
         துணையானவீஷணற்கே    துணையானகோயிலாம்         (செங்)
சேராதபயனெல்லாஞ்                    சேர்க்கின்றகோயிலாம்
       செழுமறையின்முதலெழுத்தைச்  சேர்ந்ததிருக்கோயிலாம்
தீராதவினையனைத்துந்                    தீர்க்குநல்லகோயிலாம்
          திருவரங்கமெனவேதாந்த    தேசிகன்சொல்கோயிலாம்   (செங்)
பதிமரானவாழ்வார்கள்                பாடல்பெற்றகோயிலாம்
            பாஷியக்காரர்முதலானோர்      பரவுகின்றகோயிலாம்
மதிவிளங்குந்தேசிகனை                 வளர்த்தருளுங்கோயிலாம்
            வணங்குந்தொண்டர்யாவர்கட்கும்    வாழ்வுதருங்கோயிலாம்  (செங்)
சந்திரபுஷ்கரிணியே                                     தான்விளங்குங்கோயிலாம்
             தாரணியின்மீதுவைகுந்                  தமிதென்னுங்கோயிலாம்
இந்திராதியாமிமையோ                            ரெவர்களும்பணிகோயிலாம்
           எம்பெருமான்பூர்ணகலை                யேவிளங்குங்கோயிலாம்.      (செங்)