தரு -- இராகம் -- உசேனி -- தாளம் -- ரூபகம்
பல்லவி
சிங்கமிருக்கிறபோது -- நமக் - கிங்கிந்தயோசனையேது
அனுபல்லவி
தங்கங்கருணையாம் வங்கம் வேதாந்தப்ர
சங்கம்பரமத பங்கங்கவிவாதி (சிங்கம்)
சரணங்கள்
வெண்ணெயிருக்கவுநெய்யை விரைந்துதேடுவானேன்
விளக்கிருக்கவக்கினியை வேண்டிக்கூடுவானேன்
கண்ணின்முன்னேகைப்புண்ணுக்கு கண்ணாடிபோடுவானேன்
காஞ்சிபுரமிருக்கநாம்சங்கைகள் படுவானேன் -- அவர்
பண்ணுமதங்களைக்கண்ணுநா வுள்ளவர்
கண்ணுள்ளகர்த்தர்களெண்ணும்படி தூப்புற் (சிங்கம்)
சாமியெம்பெருமானார்தாமே யவதாரம்
ஸர்வதந்திரஸ்வாதந்திரஸ்வாமிவேத ஸாரம்
பூமிமேலவர்மகிமையளவிடவேய பாரம்
புதஜனங்கள்திலகரிவர்புண்ணியவார வாரம்--அவர்
தாமேகமலாக்ஷ - சோமயாஜி பேரர்
மாமலையார்தம்கண்டாமணி ரூபக (சிங்கம்)
தர்க்கிகளாங்குன்றுகளைத்தகர்க்குஞ் சதகோடி
தலைமைராமானுஜசித்தாந்தமது நீடிக்
கற்கியுருவாகிவந்தார்கமலசரண் பாடிக்
கவிவாதியானைகட்குக்கண்டீரவ நாடித்--தொண்டர்
வர்க்கங்களின்முன்னேநிற்குங் கவலைத
விர்க்குஞ்சகலமுங்கற்குங் குருமணி (சிங்கம்)
வெண்பா
திருவரங்க மேவுந் தெரிசனத்த ரெல்லா
மொருமையா யோசனை செய்து -- பெருமையாய்ச்
சாதனமொன் றேயெழுதத் தக்கவராந் தேசிகர்சீர்
பாதமே நாயடியேன் பற்று.
கொச்சகம்
பொங்கோதஞ்சூழ்ந்தவிந்தப்புவனியோடு விண்ணுலகு
மங்காதஞ்சேராமேயாள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய பொன்னந்திருவரங்கற் செல்வர்வளர்
தங்கோயிற் சேனையர்கோன் சாதனமாயிட்டனரே
விருத்தம்
திருவரங்கச்செல்வனார் தமது கோயிற்
சேனையர்கோன்சாதனத்தைக்கண்டே தூப்புல்
வருவரங்கம் புளகிதராய்ச்சிரமேலாக
வகித்தருளிவரதரருள்செய்துபண்டே
தருவரங்கைக்கொண்டு மெதீந்திரரைப் போலே
தாமுமெழுந்தருளிவந்தாரரங்கநோக்குந்
துருவரங்கந் தவளமிகுநகரை யென்றுஞ்
சொல் லுவார்வினைகளெல்லாம் வெல்லுவாரே.
தரு - இராகம் - சவுராஷ்டரம் - தாளம் -சாப்பு
பல்லவி
செங்கனகமதில் சூழ்ந்து செழிப்புமிகுந்தகோயிற்
திருவரங்கர்கண்வளரச்சேர்ந்தகோயிலே.
அனுபல்லவி
கங்கையிற்புனிதமாயகாவிரிநடுவுப்பாட்டுப்
பொங்குநீர்பரந்துபாயும் பூம்பொழிலரங்கர் கோயிற் (செங்)
சரணங்கள்
ஆராதவருளமு தம்பொதிந்தகோயிலாம்
அம்புஜத்தோனயோத்திமன் னற்களித்தகோயிலாம்
தோராததனிவீரன் றொழுதிசைந்தகோயிலாம்
துணையானவீஷணற்கே துணையானகோயிலாம் (செங்)
சேராதபயனெல்லாஞ் சேர்க்கின்றகோயிலாம்
செழுமறையின்முதலெழுத்தைச் சேர்ந்ததிருக்கோயிலாம்
தீராதவினையனைத்துந் தீர்க்குநல்லகோயிலாம்
திருவரங்கமெனவேதாந்த தேசிகன்சொல்கோயிலாம் (செங்)
பதிமரானவாழ்வார்கள் பாடல்பெற்றகோயிலாம்
பாஷியக்காரர்முதலானோர் பரவுகின்றகோயிலாம்
மதிவிளங்குந்தேசிகனை வளர்த்தருளுங்கோயிலாம்
வணங்குந்தொண்டர்யாவர்கட்கும் வாழ்வுதருங்கோயிலாம் (செங்)
சந்திரபுஷ்கரிணியே தான்விளங்குங்கோயிலாம்
தாரணியின்மீதுவைகுந் தமிதென்னுங்கோயிலாம்
இந்திராதியாமிமையோ ரெவர்களும்பணிகோயிலாம்
எம்பெருமான்பூர்ணகலை யேவிளங்குங்கோயிலாம். (செங்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக