சனி, 4 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் - 2



தசாவதாரம்.

திருமால், 
(1) மச்சம் (2) கூர்மம் (3) வராகம் (4) நரசிங்கம் (5) வாமநம் (6) பரசுராமர் (7) பலராமர் (8) ஸ்ரீ ராமர் (9) கிருஷ்ணன் (10) கற்கி என்று சொல்லப்பட்ட தசாவதாரமுஞ் செய்தருளினர். இந்தப்பத்து அவதாரங்களுள்ளே, வேதத்தைத் திருடிக் கடலிலொளித்த சோமுகாசுரனைக் கொல்லும்பொருட்டு மச்சாவதாரமும், திருப்பாற்கடல் கடையும் போது மந்தரமலையைத் தாங்கும் பொருட்டுக் கூர்மாவதாரமும், இரணியாக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டின போது அதை விரிக்கும் பொருட்டும், அவனைக் கொல்லும் பொருட்டும் வராகாவதாரமும், தமையன் பழிவாங்க சருவதேவ வணக்கத்தை விலக்கின இரணியனைக் கொல்லும்பொருட்டு நரசிங்காவதாரமும், மாவலியை யடக்கும் பொருட்டு வாமனாவதாரமும், அரசரால் தாழ்த்தப் பட்ட வேதியர் நிமித்தமாக அவ்வரசரைக் கொல்லும் பொருட்டுப் பரசுராமாவதாரமும், இராவணன் முதலி யோரைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீ ராமாவதாரமும், பிரலம்பன் முதலியபல ராக்ஷஸரை வதைக்கும் பொருட்டுக் கிருஷ்ணாவதாரமும், தருமத்தை நிலை நிறுத்தும் பொருட்டுக் கற்கி யவதாரமும் செய்தருளுவர்.
 
இத்தசாவதார வைபவத்தை,
தேவுடைய மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூவுருவி னிராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பான் கோயில்
- (பெரியாழ்வார் திருமொழி 4-9-9)

என்று விட்டுசித்தனும்;

“ மீனோடாமை கேழலரி குறளாய் முன்னுமிராமனாய்த்
தானாய்ப் பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்
--(பெரிய திருமொழி 8-8-10)

என்று திருமங்கைமன்னனும் ,
"மீனாமை கோலநெடு நரசிங்கமாகி
நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை
யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு
மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு
நாராயணாய நமவே
(மகாபாரதம், சல்லிய பருவம். 1)

என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.
 
ஸ்ரீ வேதாந்த தேசிகன் அமைத்துப் பாடிய அடைவினைக்
கண்டு களிமின்.
" மீனோடாமை கேழல் கோளரியாய்
வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில்
துன்னியபரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும்
மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர்
வானாரின்ப மிங்குறவருதி.''
(மும்மணிக்கோவை. 4)

[கேழல் - வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி - பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)
மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்கவுற்றனை.
- (நவமணிமாலை. 2)


(மகரம் - மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் - இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் - இரணியகசிபு, மதலை - பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் - அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் - இராவணன் ; வரை - கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)

நம் வேதாந்தவாரியன் "ஸ்ரீ தசாவதார ஸ்தோத்திரம் '' பாடியுள்ளார். இத் தோத்திரம் பொதுவாக அவதாரங்களைப் பற்றிய ஒரு சுலோகமும், பகவதவதாரங்களில் பிரதானமாக வெண்ணப்பெற்றுவரும் பத்து அவதாரங்களைப்பற்றிப் பத்து சுலோகங்களும், அனைத்தையுஞ் சேர்த்தநுஸந் திக்கிற ஒரு சுலோகமும், பல ச்ருதியாக, ஒரு சுலோகமும் ஆக பதின்மூன்று சுலோகங்கள் கொண்டது.
இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://

இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.''
- (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)


"தயாசதகம் " எனுந் தோத்திரத்தில் 81 முதல் 90 வரை
யுள்ள சுலோகங்கள் திருவவதாரப் பதிகமே; முறைவைப்பும்
முன்னர்க் கூறியாங்கே.
"ஸ்ரீ ஸங்கற்ப சூரியோதயம்" எனும் அரிய நாடகம் சுபாசிரய நிர்த்தாரணம் (தியானத்திற்குரிய பகவத் விக்ரஹத்தை நிச்சயித்தல்) என்னும் ஏழாமங்கம் தசாவதார வைபவத்தைப் பரக்கக் காட்டுகின்றது.

பரமபத ஸோபாநம். 

"பரமபத ஸோபாநம்" என்ற ரஹஸ்ய கிரந்தத்தில் ஶ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் பரமபதமென்னும் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கு ஒன்பது விஷயங்களைப் படிகளாகக் கற்பித்து விளக்கியிருக்கிறார். 

அவற்றின் வரிசை இவர் தாமே 
 "விவேக நிர்வேத விரக்தி பீதய: ப்ரஸாதஹேதூத் க்ரமணார்ச்சிராதய: ப்ரக்ருத்ய திக்ராந்த பதாதிரோஹணம் பராப்திரித்யத்ரது பர்வணாக்ரம: " . என அருளிச்செய்துள்ளார். 
 அதாவது :- இக்கிரந்தத்திலே பகுத்தறிவு, வெறுப்பு, வைராக்கியம், பயம், பகவானுடைய அநுக்ரஹத்திற்குக் காரணமான பக்தி, ப்ரபத்தி, சரீரத்தை விட்டு ஆத்மா வெளியேறுதல், அர்ச்சிராதிமார்க்கம், ப்ரகிருதி மண்டலத்திற்கு மேற்பட்டதான பரமபதத்தையடைதல், அங்கு பரமாத்மாவை அநுபவித்தல் என்பன படிகளுடைய வரிசை. 
எனவே இதிலுள்ள ஒன்பது பர்வங்களாவன -- 
 (1) விவேகபர்வம் (தத்துவங்கள் முதலியவற்றை அறிதல்); (2) நிர்வேத பர்வம் (ஸம்ஸாரத்தில் வெறுப்பு); (3) விரக்திபர்வம் (உலக சுகங்களில் ஆசையறுதல்) ; (4) பீதி பர்வம் (தன் பாபங்களின் மிகுதியால் இனி வரக்கிடக்கும் நரகாநுபவம் முதலிய துன்பங்கட்கு அஞ்சுதல்); (5) ப்ரஸாதநபர்வம் (எம்பெருமான் மோக்ஷத்தை அருள் வதற்குக் காரணமான உபாயங்களை அநுஷ்டித்தல்); (6) உத்க்ரமண பர்வம் (இச்சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறு தல்); (7) அர்ச்சிராதிபர்வம் (அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்); (8) திவ்ய தேச ப்ராப்திபர்வம் (ஸ்ரீ வைகுண்ட மென்னும் திவ்யலோகத்தைச் சேர்தல்); (9) ப்ராப்திபர்வம் (அங்கு பகவானைக் கண்ணாரக்கண்டு, களித்து, அநுபவித்து, அந்த அநுபவத்திலேயே மூழ்கிக்கிடத்தல்) 

 “தேனேறு தாமரையாள் திருமார்பன்றன் 
     திண்ணருளால வனடியில் விவேகம் பெற்றிங்கு 
 ஊனேறு பவக்குழியை வெறுத்ததற்பின் 
     ஊர் விரத்தியுடன் வினையின் திரளுக்கஞ்சிக் 
 கூனேறு பிறை யிறையோன் சாபந் தீர்த்தான் 
     குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு 
 வானேறும் வழிப் படிகளடைவே கண்ட 
 வண்புகழ்த் தூப்புல் வள்ளலருள் பெற்றோமே." 
 என்ற தனியனும் காண்க. இங்கு ஸோபாந அடைவு அமைக்கப்பெற்றுள்ளது குறிக்கொள்க. 
 இக்கிரந்தத்தின் இருபதாவது பாசுரமான , 

" மண்ணுலகில் மயல் தீர்த்து மனந்தளும்பி 
     மன்னாத பயனிகந்து மாலேயன்றிக் 
 கண்ணில தென்றஞ்சி யவன் கழலே பூண்டு 
     கடுஞ்சிறை போய்க்கரையேறுங் கதியே சென்று 
 விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு 
     விண்ணவர்தங் குழாக்களுடன் வேதம் பாடிப் 
 பண்ணுலகிற்படியாத விசையாற் பாடும் 
     பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே.'' 

 [(1) மண் உலகில் மயல் தீர்ந்து (விவேகம்); (2) மனந் தளும்பி (நிர்வேதம்); (3) மன்னாத பயன் இகந்து (விரக்தி); (4) மாலே யன்றிக் கண் இலதென்று அஞ்சி (பீதி); (5) அவன் கழலே பூண்டு (ப்ரஸாதநம்); (6) கடும் சிறைபோய் (உத்க்ரமணம்); (7) கரையேறும் கதியே சென்று (அர்ச்சிராதி); (8) விண் உலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு (திவ்யதேச ப்ராப்தி) ; (9) விண்ணவர்தம் குழாங்களுடன் வேதம் பாடி (ப்ராப்திபர்வம்).)
என்பதில் இக்கிரந்த பர்வங்களின் அர்த்தத்தை அடைவாக அமைத்துள்ள அழகு அறிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளவல்லது.

அயிந்தைச் செல்வன் விஷயம். 

திருவயிந்தைமா நகரமர்ந்துள்ள செல்வத் தெய்வநாயகன் விஷயமாக ப்ராக்ருத பாஷையில் ஸ்ரீ அச்யுத சதகம், (101 சுலோகங்கள்), ஸம்ஸ்க்ருத பாஷையில் ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் (53 சுலோகங்கள்), த்ரமிட பாஷையில் மும்மணிக் கோவை, பந்துப்பா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா, நவமணிமாலை முதலியன நம் வேதாந்த குரு அருளிச்செய்துள்ளார். இதனை, இவர்தாமே, 

 அந்தமில் சீரயிந்தை நகரமர்ந்த நாத 
     னடியிணைமேல் அடியுரையாலைம்ப தேத்திச் 
 சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச் 
     செந்தமிழ் மும்மணிக்கோவை செறியச்சேர்த்துப் 
 பந்து கழலம்மானை யூசலேசல் 
     பரவு நவமணிமாலை யிவையுஞ் சொன்னேன் 
 முந்தைமறை மொய்ய வழிமொழி நீயென்று 
     முகுந்தனருள் தந்தபயன் பெற்றேன் நானே."
 - (நவமணிமாலை 10) 
 என அடைவு அமைத்து அற்புதமாக அருளிச் செய்திருத்தல் நோக்கி இன்புறற்குரியது.

வியாழன், 2 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன்.



திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தின் 15 ஆவது வெளியீடு
24-9-1944 தாரண ௵ புரட்டாசி ௴கேட்டை நன்னாளில்
திருவயிந்தை ஶ்ரீதேசிகன் திருவடி வாரத்தில்
வெளியிடப்பட்ட

அடைவு அமைக்கும் அற்புதன்

||ஶ்ரீ:||
ஶ்ரீமதே ராமானுஜாய நம:




அடைவு அமைக்கும் அற்புதன்


வித்தகன் வேதியன் வேதாந்ததேசிக னெங்கள் தூப்புல்
மெய்த்தவன் உத்தமன் வேங்கடநாதன் வியன் கலைகள்
மொய்த்திடு நாவின் முழக்கொடு வாதியர் மூலமறக்
கைத்தவ னென்றுரைத்தேன் கண்டிலேனென் கடுவினையே.
                                                                                                     (பிள்ளையந்தாதி)

அவதாரிகை


"செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளிற்சீரிய 
கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்" --- (பாலகாண்டம், நகரப்படலம்)
என்றும்,
கோதாவரியை வருணிக்கின்ற இடத்தில்,

"புவியினுக் கணியாயான்ற பொருடந்து புலத்திற்றாகி
அவியகத்துறை கடாங்கி யைந்திணை நெறியளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்க முந்தழுவிச் சான்றோர்
கவியெனக்கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்."
                                            (ஆரணிய காண்டம், சூர்ப்பனகைப் படலம்)
எனக் கவி லக்ஷணத்தை ஆற்றின் மேலேற்றிக் கூறியவாற்றானும், பம்பைப் பொய்கையை வர்ணிக்குங்கால்,
"கற்பக மனையவக்க விஞர் நாட்டிய
சொற்பொருளா மெனத் தோன்றல் சான்றது."
                       (கிட்கிந்தா காண்டம், பம்பாநதிப் படலம்)

எனக் கூறியவகையாலும், கல்வியிற் பெரிய கம்பர் கருத்திற்கொண்ட கவிபாவம் இன்னதென்பது வெளிப்படை. அவர் கொண்ட விலக்கணத்துக்கு விலக்கியமாய் நிற்பதே இராமாவதாரம் என்பதோர் பேருண்மை.

        கம்பர் கவிச் சக்கரவர்த்தி. தூப்புல் வேதாந்ததேசிகன் என்ற சந்தமிகு தமிழ்மறையோன் தென்வடமொழி நாவலராய்த் திகழ்ந்த கவி வாதி சிங்கர். இவர் பற்பல கலை வல்ல பாவலர். பத்தரேத்தும் அற்புதர். அற்புதரே அறியும் மெய்த்தவர். இவரது தமிழ்க்கவிகள் உவமையற்றன. அவற்றில் அடைவு அமைக்கும் பெற்றியினைச் சற்றுக் காட்டுவாம் இங்கு.

ஆழ்வார்கள் அடைவு.

ஆழ்வார்கள் பதின்மர் என்று,

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வருங்குருகேசன் விட்டுசித்தன்
துய்ய குலசேகரன் நம்பாண நாதன்
தொண்டரடிப் பொடி மழிசை வந்தசோதி
வய்யமெலா மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர் கோன் .........
-(அதிகாரச் சுருக்கு 1)


[(1)பொய்கைமுனி--பொய்கையாழ்வார்; (2) பூதத்தார்- பூதத்தாழ்வார்; (3)பேயாழ்வார்; (4) தண் பொருநல் வருங்குருகேசன் - நம்மாழ்வார் ; (5) விட்டுசித்தன் - பெரியாழ்வார் ; (6) துய்ய குலசேகரன் - குலசேகராழ்வார் ; (7)நம்பாணநாதன் - திருப்பாணாழ்வார்; (8) தொண்டரடிப்பொடி- தொண்டரடிப் பொடியாழ்வார்; (9) மழிசைவந்த சோதி திருமழிசையாழ்வார்; (10) வய்யமெலா மறை விளங்க வாள்வேலேந்தும் மங்கையர்கோன் திருமங்கையாழ்வார் ]
என்ற பாசுரத்தில் அமைத்துள்ளார்.

அவர்கள் பன்னிருவர் என்பதை,
வையகமெண் பொய்கை பூதன் பேயாழ்வார்
மழிசையர்கோன் மகிழ் மாறன் மதுரகவி
பொய்யில் புகழ்க் கோழியர்கோன் விட்டுசித்தன்
பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்
அய்யனருட் கலியன் ..................
- (பிரபந்த சாரம் 17)

(மகிழ்மாறன் - நம்மாழ்வார் ; கோழியர்கோன்--குலசேகராழ்வார் ; கோதை ஆண்டாள் ; கலியன்-திருமங்கையாழ்வார்.) இங்குற்ற அடைவுவருமாறு :-
(1) பொய்கையாழ்வார் (2) பூதத்தாழ்வார் (3) பேயாழ்வார் (4) திருமழிசையாழ்வார் (5) நம்மாழ் வார் (6) மதுரகவியாழ்வார் (7) குலசேகராழ்வார் (8) பெரியாழ்வார் (9) ஸ்ரீ ஆண்டாள் (10) தொண்டரடிப்பொடியாழ்வார் (11) திருப்பாணாழ்வார் (12) திருமங்கையாழ்வார்.
முன்னர்க் கூறியதில் நம்மாழ்வாரைக் கூறவே மதுரகவியாரும், பெரியாழ்வாரைக் குறிக்கவே
ஸ்ரீ ஆண்டாளும் குறிக்கப் பெற்றார் என்ப. எனவே, "பதின்மர்” பின் வருமாறுஅடைவு அமைக்கப் பெற்றுள்ளனர்.

அதிகாரச் சுருக்கு                                               பிரபந்தசாரம்

1. பொய்கையாழ்வார்                              1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்                                          2. பூதத்தாழ்வார்`
3. பேயாழ்வார்                                              3. பேயாழ்வார்
4. நம்மாழ்வார்                                             4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்                                         5. நம்மாழ்வார்
6. குலசேகராழ்வார்                                    6. குலசேகராழ்வார்
7. திருப்பாணாழ்வார்                                7. பெரியாழ்வார்
8. தொண்டரடிப்பொடியாழ்வார்          8. தொண்டரடிப்பொடியாழ்வார்
9. திருமழிசையாழ்வார்                            9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்                         10. திருமங்கையாழ்வார்

ஶ்ரீ மணவாளமாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை நான்காவது பாசுரம் 

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன்அருள் மாறன் சேரலர்கோன் -- துய்யபட்ட
நாதன் அன்பர் தாள்தூளிநற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாம் இங்கு. 

என்பதிற் காணப்படும் அடைவு மேலே காட்டப் பெற்றுள்ள பிரபந்தசார அடைவை அப்படியே கொண்டுள்ளது.

இராமாநுச நூற்றந்தாதியிலுள்ள "அடைவுஅமைப்பு" பின்வருமாறு.

1. பொய்கைப்பிரான் (பொய்கையாழ்வார்) 2. பூதத்தாழ்வார் 3. தமிழ்த் தலைவன் (பேயாழ்வார்)
4. பாண்பெருமாள் (திருப்பாணாழ்வார்) 5. மழிசைக்கிறைவன் (திருமழிசையாழ்வார்) 6. தொண்டரடிப் பொடியாழ்வார் 7. கொல்லி காவலன் (குலசேகராழ்வார்) 8. பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் (பெரியாழ்வார்) 9. மாலை சூடிக் கொடுத்தவள் (ஶ்ரீ ஆண்டாள்) 10. தண்தமிழ்செய்த நீலன் (திருமங்கையாழ்வார்) 11. சடகோபன் (நம்மாழ்வார்). 12. மதுரகவி யாழ்வார்.

ஶ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத
ஶ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிச்ராந்
ஶ்ரீமத் பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

இங்கு காட்டிய அடைவு வருமாறு.

1. பூதம் (பூதத்தாழ்வார்) 2. ஸரஸ்யர் (பொய்கையாழ்வார்) 3. மஹதாஹ்வயர் (பேயாழ்வார்) 4. பட்டநாதர் (பெரியாழ்வார்) 5. பக்திசாரர் (திருமழிசையாழ்வார் 6. குலசேகரர் (குலசேகராழ்வார்) 7. யோகிவாஹர் (திருப்பாணாழ்வார்) 8. பக்தாங்க்ரி ரேணு (தொண்டரடிப்பொடியாழ்வார்) 9. பரகாலர் (திருமங்கையாழ்வார்) 10. யதீந்த்ரமிச்ரர் (எதிராசர்) 11. ஶ்ரீமத் பராங்குசமுநி (நம்மாழ்வார்).

ஆழ்வார்கள் அருளிச்செயல்கள்

        ஆழ்வாராதிகள் அருளிச் செய்த பிரபந்தங்கள் இருபத்து நான்கு என்றும், அவற்றின் பாசுரத் தொகை நாலாயிரம் என்றும் "பிரபந்த சாரம்" என்னும் பிரபந்தத்தில் அறுதியிட்டுள்ளார் மறைமுடித் தேசிகனார்.

"எண்ணில் முதலாழ்வார்கள் மூன்று நூறும்
எழில் மழிசைப்பிரானிரு நூற்றொரு பத்தாறும்
உண்மை மிகுமாறன் மறையாயிரத்தோ
டுற்றவிரு நூற்றுத் தொண்ணூறுமாறும்
வண்மையுடை மதுரகவி பத்துமொன்றும்
வஞ்சியர் கோனூற்றைந்தும் பட்டநாதன்
பண்ணிய நானூற்றேழு பத்துமூன்றும்
பார்க்கோதை நூற்றெழுபத்து மூன்றே" 

பத்தரடிப்பொடி பாட லைம்பத்தைந்தும்
பாணர் புகழ்பத்துடனே பரகாலன்சொல்
அத்தனுயர் வேங்கடமாற் காயிரத்தோ
டானவிரு நூற்றோரைம்பத்து மூன்றும்
முத்திதரு மெதிராசர் பொன்னடிக்கே
மொழிந்த வமுதனார் பாடல் நூற்றுமெட்டும்
எத்திசையும் வாழவிவை பாடிவைத்த
வென்பவை நாலாயிரமுமெங்கள் வாழ்வே."

கீழ்க்கண்ட அட்டவணை இதனை நன்குவிளக்குதல் காண்க










ஆசார்யர்கள்.

முமுக்ஷுவுக்கு ஆசார்ய வம்சம் பகவானளவுஞ்செல்ல அநுஸந்திக்க வேணுமென்றோதப்பட்டது" என்று ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரமாகிய நன்னூற்கு முகவணியாகவுள்ள குருபரம்பராஸாரத்தில் வேதாந்தகுரு கூறுவதுடன் அக்குரு பரம்பரையின் அடைவை அவர்கள் திருநாமங்கள், செய்தருளிய பிரபந்தங்கள், முதலியவற்றுடன் பின்வருமாறு விவரிக்கின்றார்:-

“ஸர்வலோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் ..... பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக வொரு தசாவதாரம் பண்ணி மேகங்கள் ஸமுத்ர ஜலத்தை வாங்கி ஸர்வோபஜீவ்யமான தண்ணீராக வுமிழுமாப் போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கு மதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்.... பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்றுஞ் சொல்லுகிறபடியே அகஸ்த்ய ஸேவித தமான தேசத்திலே அநேக தேசிகாபதேசத்தாலே யவதரித்தருளினான்...

இவ்வாசார்யர்களில் ஈச்வரமுநிகள் பிள்ளை நாதமுநிகள். இவர் ந்யாயதத்வம் என்கிற சாஸ்த்ரமும் யோகரஹஸ்யமும் அருளிச்செய்தார். இவருக்கு ஸ்ரீ மதுர கவிகள் முதலாகவுண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும், போகதசையிலே ஸாக்ஷாத் க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்ய ரானார். 
நாதமுநிகள் பிள்ளை ஈச்வரபட்டாழ்வான். ஈச்வரபட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார். இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள். (1) ஆகமப்ராமாண்யம் (2) புருஷ நிர்ணயம் (3) ஆத்மஸித்தி (4) ஈச்வரஸித்தி (5) ஸம்வித்ஸித்தி (என்கிற ஸித்தித்ரயமும்) (6) ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் (7) ஸ்தோத்ரம் (8) சதுச்லோகி. ஆக எட்டு. 

ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டைநம்பி பிள்ளை என்னாச்சான்.. என்னாச்சான் பிள்ளைகள் நால்வர். இவர்களிலொருவர் பிள்ளையப்பர். பிள்ளையப்பர் பிள்ளைதோழப்பர். தோழப்பருக்குப் பெண் பிள்ளைகளிருவர். நாதமுநிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள் (1) உய்யக் கொண்டார் (2) குருகைக்காவலப்பன் (3) நம்பி கருணாகரதாஸர் (4) ஏறு திருவுடையார் (5) திருக்கண்ணமங்கையாண்டான் (6) வானமாதேவியாண்டான் (7) உருப்பட்டூ ராச்சான் பிள்ளை. (8) சோகத்தூராழ்வான். ஆக எண்வர்.

உய்யக்கொண்டார் ஸ்ரீ பாதத்தையாச்ரயித்தவர்கள் ஐவர் . அவர்களாகிறார் :- (1) மணக்கால் நம்பி (2) திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர் (3) சேட்டலூர் செண்டலங்காரர் (4) ஸ்ரீ புண்டரீகதாஸர் (5) உலகப்பெருமாள் நங்கை. 

மணக்கால் நம்பி ஸ்ரீ பாதத்தை யாச்ரயித்தவர்கள் ஐவர். அவர்களாகிறார்:- (1) ஆளவந்தார் (2) தெய்வத்துக் கரசுநம்பி (3) கோமடத்துத் திருவிண்ணகரப்பன் (4) சிறுப்புள்ளூராவுடையபிள்ளை (5) ஆச்சி. 

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தையாச்ரயித்தவர்கள் பதினைவர். அவர்களாகிறார் (1) பெரியநம்பி (2) திருக்கோட்டியூர் நம்பி (3) திருமாலையாண்டான்(4) ஆளவந்தாராழ்வார் (5) திருமலைநம்பி (6) ஈசாண்டான் (7) தெய்வவாரி யாண்டான் (8) சிறியாண்டான் (9) திருமோகூரப்பன் (10) திருமோகூர் நின்றார் (11) தெய்வப்பெருமாள் (12)திருமங்கையாளியார் (13) பிள்ளை திருமாலிருஞ் சோலைதாஸர் (14) மாறனேர் நம்பி (15) ஆள் கொண்டி.

பெரியநம்பி ஸ்ரீபாதத்தையாச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார் :- (1) எம்பெருமானார் (2) மலை குனிய நின்றார் (3) ஆர்ய ஸ்ரீ சடகோபதாஸர் (4) அணியரங்கத்தமுதனார் (5) திருவாய்குலமுடையான் பட்டர் (6) திருக்கச்சி நம்பி. 

எம்பெருமானார், திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் ரஹஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்; திருமாலையாண்டான் ஸ்ரீ பாதத்திலே திருவாய்மொழி கேட்டார் ; ஆளவந்தாராழ்வார் ஸ்ரீ பாதத்திலே திருவாய்மொழியுமோதி ஸ்தோத்ரமும் அருளிச்செய்யும் நல்வார்த்தைகளுங் கேட்டருளினார்; திருமலை நம்பி ஸ்ரீபாதத்திலே ஶ்ரீமத் ராமாயணங் கேட்டருளினார். இவர் அருளிச்செய்த ப்ரபந்தங்கள் :- 1. ஸ்ரீ பாஷ்யம் 2. தீபம் 3. ஸாரம் 4. வேதார்த்த ஸங்க்ர ஹம் 5. ஸ்ரீ கீதாபாஷ்யம் 6. சிறிய கத்யம் 7. பெரிய கத்யம் 8. ஸ்ரீவைகுண்டகத்யம் 9. நித்யம். ஆக ஒன்பது. இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளைத் தந்தாம் ஸம்ப்ரதாயப் படிகளிலே யறிந்து கொள்வது.

'' ஸ்ரீ பாஷ்யகாரர் தொடக்கமாக எம்பெருமானளவும் உள்ள ஆசாரியர்களின் அடைவை அநுசந்தாநக்கிரமத்தில் ஸ்ரீதேசிகன் அருளியுள்ள அழகு அழியாவழகு. அப்பாசுரம் ஈதே.

" என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே யவர்குருக்கணிரை வணங்கிப்
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை யவர்க்குரைத்த வுய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுதத் திருமகளென் றிவரை முன்னிட்
டெம்பெருமான் திருவடிகளடைகின்றேனே.'

                                                -(அதிகாரச் சுருக்கு 3) 

 (பெரும்பூதூர் வந்தவள்ளல் - எம்பெருமானார் ;சடகோபன் -- நம்மாழ்வார் ; சேனை நாதன் - விஷ்வக்ஸேநர்.)

இங்குற்ற அடைவு. 1. ஸ்ரீ பாஷியகாரர், 2. பெரியநம்பி, 3. ஆளவந்தார், 4. மணக்கால் நம்பி, 5. உய்யக்கொண்டார், 6. நாதமுனி, 7. சடகோபன், 8. சேனை முதலியார், 9. பெரிய பிராட்டியார், 10. எம்பெருமான்.

இங்கு குறிக்கப்பெற்றுள்ள பூருவாசாரியர்கள் பதின்மர் என்பது குறிக்கொள்ளத் தக்கது.


---- தொடரும் --




ஞாயிறு, 26 ஜூலை, 2020

Desika ashtothram

66. नवमैकरसाश्रयः

अत एव नवमैकरसाश्रयः । एकः = मुख्यः ; नवमस्य एकरसस्य आश्रयः रसान्तरोत्कृष्ट शान्तिरसाश्रय इत्यर्थः । तदुक्तं सङ्कल्पसूर्योदये 'असभ्यपरिपाटिकामधिकरोति श्रृङ्गारिता
    परस्पर तिरस्कृति परिचिनोति वीरायितम् ।
विरुद्धगतिरद्भुतस्तदलमल्पसारैः परैः

    शमस्तु परिशिष्यते शमित-चित्तखेदो रसः ।।' इति ।

நவமைக- ரஸாஶ்ரய :-- 

நவம் -- ஒன்பதாவதும், ஏக = முக்யமானதுமான, ரஸ = சாந்தி ரஸத்துக்கு, ஆஶ்ரய: = இருப்பிடமானவர். ச்ருங்காரம் முதலான நவரஸங்களுக்குள்ளே சாந்திரஸம் ப்ரதானமானதென்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் "அஸப்ய பரிபாடிகா" என்கிற ச்லோகத்திலே அருளிச் செய்தார். அந்த ச்லோகத்தின் பொருள்:-- "ச்ருங்கார ரஸமானது ஸபைக்கு போக்யமன்று. வீரரஸமானது ஒருவரையொருவர் அவமதியா நிற்பது. அத்புத ரஸமானது பொய்யான வேடிக்கையைக் காண்பிப்பது. இப்படியே மற்றவைகளும். ஆகையால் மனதுக்கு துக்கத்தை நீக்குமது சாந்திரஸமே" என்று. இப்படி தேசிகன் சாந்திரஸத்தைக் கைக்கொண்டவரென்றபடி. 

67. दश-तात्पर्य-विज्ञाता मूलमन्त्रस्य दशविध तात्पर्यं, विशेषण (= प्रमाण-संप्रदायमूलकत्वेन) जानाति इति दशतात्पर्य-विज्ञाता । तद्यथा एक वाक्यत्वे कृत्स्नस्य उपायपरत्वं वृत्तिपरत्वं वा । वाक्य द्वयत्वे स्वरूपपरं उपायपरं पुरुषार्थपरं वा । वाक्यत्रय पक्षे आद्य वाक्यद्वयं स्वरूपपरं, तृतीय वाक्यं पुरुषार्थ-प्रार्थनापरं इति वा । आद्यं स्वरूपपरं उत्तर वाक्यद्वयं क्रमेण अनिष्टनिवृत्तिः इष्टप्रार्थनापरं इति वा । आद्यं स्वरूपपरं उत्तरवाक्यद्वयं उपायपरं इति वा । आद्यं समर्पणपरं उत्तरपदद्वयं फलप्रार्थनापरं इति वा । पदत्रयं क्रमेण स्वरूप-उपाय-पुरुषार्थपरं चेति । अत्र करणान्तरान्वेषण देवतान्तरादि स्पर्श महाभागवतापचार - प्रयोजनान्तराभिलाष - निवृत्तिश्च 'वि' शब्दाभिप्रेतेति ।

67. தச-தாத்பர்ய-விஜ்ஞாதா - 

தச = பத்துவிதமான, தாத்பர்ய = கருத்தை, விஜ்ஞாதா = நன்றாக அறிந்தவர். இங்கு திருமந்திரத்தில் பத்துவித யோஜனைகளை ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலே திருமந்திராதிகாரத்தில் அருளிச்செய்தாரென்றபடி. 



திங்கள், 6 ஜூலை, 2020

ஸ்ரீ தேசிக‌ அஷ்டோத்த‌ர‌ ச‌த‌ம்–உத்த‌ர‌ பாக‌ம்

63. षडङ्गयोग-निर्णेता षडङ्गयोगस्य (= आनुकूल्यादि अङ्गपञ्चक युक्तस्य अङ्गिनो न्यासस्य), पूर्वपक्षनिरासपूर्वकं निक्षेपरक्षायां निर्णयात् षडङ्गयोग-निर्णेता ।
तत्र एवं पूर्वपक्ष-सङ्ग्रह उक्तः - भक्ति-व्यतिरिक्तं उपायान्तरं नास्ति;
कुतः
‘स्वरूप-लक्ष्मानुष्ठान विध्यदृष्टेनिषेधतः ।
ऐक्यादशक्तेरख्याते: संप्रदाय विरोधतः ।। इति ।

राद्धान्तस्तु - अस्त्येव भक्ति-व्यतिरिक्त उपायान्तरं, स्वरूपलक्षणादि दर्शनात्; निषेधाद्यभावाच्च । तथा हि साध्यरूपमेव प्रपदनं न सिद्धरूपं अविधेयत्व प्रसङ्गात्; अत एव

“फलादिभ्यो विभिन्नत्वात् प्रपत्तिः विध्यनन्वयात्।
विधेयान्तर हानेश्च नाधिकारि-विशेषणम् ।।'

विध्यनन्वयादिति । “व्रज" इति विध्यनन्वयप्रसङ्गात् इत्यर्थः । तच्च, वाक्यान्तरार्थ ज्ञानमूलकम् । हेत्वन्तरं च न योगाभ्यासादिरूपं, सौकर्याभाव-प्रसङ्गात्; किं तु सहकारि - विशेष - सहकृत मन एवेति पूर्वमेव उक्तम् । इदं च न अनुभवरूपं अलौकिक-विषयत्वेन अर्वाचीन-प्रत्यक्षादि फलत्वायोगात्, शास्त्रफलत्वे अविधेयत्व प्रसङ्गात्; किं तु, असमर्थस्य समर्थं प्रति स्वाभिमतं फलं त्वयैव साध्यं इति इष्टप्रकाशनरूप - प्रार्थनात्मकं स्मृतिरूपम् । सकृत् प्रत्यय - रूपायास्तस्याः श्रवणजनित संस्कारेण स्वतः संभवेऽपि गुरूपसति मन्त्रनियम-विशेषित्वेन विधिविषयत्वम् । न च अस्यापि स्मृतेः अनुकूलरूपत्वात् फलरूपत्वात् न विध्यत्वं इति वाच्यं; तदनुकूल-व्यापारस्य आज्यावेक्षणादाविव विधेयत्व-उपपत्तेः, तस्मात् प्रपदनस्वरूपं ज्ञातुं शक्यत एव । नापि लक्षणानुपपत्तिः; तथा हि - रक्षापेक्षापूर्वक- भरन्यासत्वं तल्लक्षणम् । कपोत-वृत्तान्तादौ गेहागत्यादिमात्रे औपचारिकश्शरणागति शब्द: यद्वा, नानार्थ इति न तत्र अव्याप्तिर्दोषाय । वस्तुतस्तु अनन्यसाध्ये स्वाभीष्ट-साधन-समर्थ-वशीकरणं कपोत-वृत्तान्त - साधारणं प्रपत्ति-लक्षणं इति न अव्याप्ति प्रसङ्गः । नापि अनुष्ठानादर्शनं विभीषण-मुचुकुन्द-क्षत्रबन्ध्वादि-अनुष्ठान - दर्शनात्, विधौ सति अनुष्ठान-दर्शनाकांक्षणस्य अतिमन्दत्वात् च । यत्तु उक्तं; विधिरेव न दृश्यत इति । तन्न; 'मुमुक्षुर्वे शरणमहं प्रपद्ये। इति मन्त्रस्य यच्छब्दानुपहतविधि-शक्तित्वे न विधिपरत्व-स्थापनात, 'ओमित्यात्मानं युञ्जीत2 इति विधिप्रत्यय श्रवणञ्च । तस्य च

'तेषां तु तपसां न्यासमतिरिक्तं तपः श्रुतम् ।
इदं महोपनिषदं देवानां गुह्यमुत्तमम् ।।

इति भगवच्छास्त्रे स्पष्टतरं उपब्रह्मणेन शरणागति-परत्वौचित्यात् इति । यत्तु उक्तं निषेधादिति तन्न; नान्यः पन्थाः' इति उत्सर्गापवाद-न्यायेन विहितव्यतिरिक्तस्य एव निषेधात्, प्रपदन-विधेश्च समर्थितत्वात्; अन्यथा प्रकृतविद्या न्यासविद्यादेरपि निषेध प्रसङ्गात् । यद्वा, 'तमेवं विद्वान्' इति सर्वविद्यापूर्वरङ्ग वाक्यार्थ ज्ञानपरं । अथवा, सर्वविद्यास्वरूपं वेदनत्वेन अविशेषात्-अनूद्य उत्तर-पूर्वाघ-अश्लेक्ष-विनाश - लक्षणं अमृतत्वं वदति । एवं - शब्दः प्रकृतमाहात्म्येन सह तत्तत् विद्या-वेद्याकारं समुपस्थापयति । वस्तुतः तु "नान्यः पन्थाः' इत्यत्र न अन्यत्व प्रतियोगि' वेदनं; अपि तु तमिति प्रकृत: परमपुरुषः "तमेव विदित्वा' इति श्रुत्यन्तरैकार्थ्यात् । वेदनेतर-निषेध- भाष्यं तु फलिताभिप्रायेण इति आचार्यः अधिकरणदर्पणे प्रपञ्चितत्वात् इति।

ऐक्यं तु भगवच्छास्त्रे भक्ति-प्रपत्योः पृथक् प्रपञ्चितत्वात् निरस्तम् । न च गुरुविधि-वैय्यर्थ्य; अशक्तं प्रत्येव न्यासविधानात् । अशक्तस्य शक्तं उद्दिस्य अनन्यसाध्य स्वाभीष्ट रक्षाभरसमर्पणं हि प्रपदनम् । 'नाना शब्दादि भेदात्। इत्युक्त शब्दभेदस्य न्यासोपासनयोः एव मुख्यत्वात् च । तदुक्तं न्यासविंशत्यां

'नाना शब्दादि भेदादिति तु कथयता सूत्रकारेण सम्यक्

न्यासोपासे विभक्ते यजनहवनवच्छब्द भेदादभाक्तात्' इति ।

उक्तं च अस्मदाचार्यः श्रीवत्सकुलतिलक श्रीनिवाससूरिभिः सारार्थसङ्ग्रहे 'न्यासभक्तयोश्शब्दभेदो मुख्यो भक्तिद्वये तु न' इति । नापि अशक्यानुष्ठानत्वं अस्मदुक्त प्रपदनस्य शक्यानुष्ठानत्वात् । सर्व व्यापार-उपरमस्य अनभ्युपगमात् । न हि यः कश्चित् प्रपन्नः अत्यन्तं निर्व्यापारो दृष्टः श्रुतो वा । भगवत्प्रवृत्तिविरोधिस्वप्रवृत्ति - निवृत्तिः प्रपत्तिरिति प्राचीनैः अभिहितम् । भगवत्प्रवृत्तिविरोधि स्वप्रवृत्तिश्च स्वरक्षणार्थं स्वातन्त्र्येण स्वव्यापारो वा, देवतान्तराश्रयणं वा, दुस्सह ब्रह्मविदपचारोवेति तदखिलं परित्याज्यं इति तेषां अभिप्रायः इति । यत्तु अख्यातेरिति तत्त्वैवाख्यानं अभिव्यक्ति, अस्य चोद्यस्य विध्यभावचोद्य परिहारेण दत्तोत्तरत्वात् । पृथगुपायत्वस्यापि अहिर्बुध्न्यादिषु प्रसिद्धत्वात् । कापिलादिषु अस्य उपादानं न दृश्यत इति चेत्; न नहि सर्वं सर्वत्र उपादीयते; कापिले कर्मयोगस्य, पातञ्जले ज्ञानयोगस्य अनुपादानात् इति । यत्तु संप्रदायविरोध इति तन्न; श्रुतिस्मृत्यादि-अनुसारेण उपदेशानुष्ठान-पारंपर्यस्य महात्मसु दर्शनात्, पृथगुपायत्व निबन्धनाभावेऽपि उपदेशेनैव संप्रदाय सिद्धेः, स्वातन्त्र्यं नास्तीति विपरीत निबन्धनाभावात्, स्तोत्र-गद्यादिषु पृथगुपायत्वस्य स्पष्ठं अभिधानात् चेति न कापि अनुपपत्तिः । विस्तारश्च निक्षेपरक्षायां द्रष्टव्यम् । अनुष्ठान प्रकारस्तु श्रीमति रहस्यत्रयसारे द्रष्टव्यः । तत् प्रदर्शनार्थमेव हि तदारम्भः । रहस्यत्वात् न अत्र लिखितः, तत एव मन्त्रार्थोऽपि ।

அவதாரிகை
அங்கியின் ஸ்வரூபாதிகளைச் சொல்லுகிறார்.

63.

63. ஷடங்கயோக நிர்ணேதா - ஷட் = ஆறுவிதங்களான, அங்க = முன்சொன்ன அங்கங்களையுடைய, யோக = ப்ரபத்தியாகிற யோகத்துக்கு, நிர்ணேதா = உறுதியைச் செய்யுமவர். ஷடங்க யோகமென்னுமது ஐந்து அங்கங்களோடு சேர்க்கையாலே சொன்ன தாகவுமாம். இங்கு ப்ரபத்தியை யோகமாகச் சொன்னது பக்தி போல இதுவுமொரு ஸ்மிருதி விசேஷமென்கிற கருத்தாலே; ஆனால், அங்கு இடைவிடாமல் உள்ளனவும் நினைக்கவேணும்; இங்கு ஒருதடவையே போதும்; இதுதான் பேதம்.

இங்கு சிலர், பக்தியை நீக்கி வேறொரு உபாயமில்லையே யென்ன; பக்தியினாலே அல்லது ப்ரபத்தியினாலே என்று சொல்லிற்றே யென்ன; ஆனால் ப்ரபத்தியின் ஸ்வரூபம் இவ்விதமென்று அறியக்கூடாததே, விதிக்கவுமில்லையே, அநுஷ்டானமுமில்லையே, செய்யத்தக்கதுமில்லையே என்று இதுமுதலாக சங்கிப்பார்கள். அவர் களை ப்ரபத்தி ஸ்வரூபம் இன்னதென்றும், 'வ்ரஜ' என்று விதியுளதென்றும், விபீஷணாழ்வான் முதலானோர் செய்தார்களென்றும், அநுஷ்டிக்க வேண்டியதே என்றும், அதிகாரி விசேஷணத்துக்குச் சொன்ன லக்ஷணத்தோடு சேராதது என்றும், இது ஸாத்தியமான உபாயமென்றும், வ்யாஜமாத்திரமாகையால் உபாயத்வித்துவ மில்லை" என்றும், ஸித்தோபாயத்துக்குக்கொற்றையும்' வாராதென்றும், இது வைதிகமானாலும் ஸத்தியவசனாதிகள் போலே எல்லாருக்குங்கூடுமென்றும், இதுமுதலானதுகளால் நிக்ஷேப ரக்ஷாதிகளில் பரக்க அருளிச்செய்து தெளிவித்தாரென்றபடி.

64: सप्ततन्तुकृदुत्तमः

अत एव सप्ततन्तुकृतां अध्वरकृतां उत्तमः सप्ततन्तुकृदुत्तमः

'समित्साधनकाधीनां यज्ञानां न्यासमात्मनः ।
नमसा योऽकरोद् देवे स स्वध्वर इतीरितः ।। इति वचनात् ।

64.

64. ஸப்ததந்து க்ருதுத்தம: - ஸப்ததந்து = யாகத்தை, க்ருத் = செய்தவர்களுள், உத்தம: = மேலானவர். இங்கு யாகமென்று ப்ரபத்தியைச் சொல்லுகிறது. இது யாகமானபடியை 'ஸமித்ஸாதந காதீநாம்' (145") என்கிற ச்லோகம் முதலானதுகளில் கண்டுகொள்வது.

இச்லோகத்தின் பொருள் - 'நெய், ஸமித்து முதலான த்ரவ்யங்களைக்கொண்டு செய்யும் யஜ்ஞங்களைக்காட்டிலும் நம: என்று சொல்லி சரணாகதி பண்ணுவது மேலான யாகம்' என்று. இப்படிச் செய்தவனை 'செய்த வேள்வியன்' என்றும், 'நூறு யாகம்' பண்ணினவன்' என்றும் புகழப்பட்டது. இப்படி அருளிச்செய்து அநுஷ்டித்தவரென்றபடி.

65. अष्टाक्षरैक – निरत : व्यापकमन्त्रेषु श्रीमदष्टाक्षरस्यैव तत्व-हित-पुरुषार्थ-कण्ठोक्तित्वेन भगवन्मूर्ति साधारणत्वेन प्रधानत्वात् अष्टाक्षरैकनिरतः । तदुक्तं,

'सिद्धे महति पाण्डित्ये सनिर्वेदश्चतुर्विधे ।
प्रणव द्विचतुष्काद्यैः प्रशान्तैरेव मोक्ष्यते ।।' इति ।

प्रशान्तैः, शान्तिरसजनकैः इत्यर्थः । सर्व मन्त्रापेक्षया अष्टाक्षरस्यैव प्राधान्यं ऋषिभिः एव उक्तं -

'बहवोऽपि महात्मानो मुनयः सनकादयः ।

अष्टाक्षरं समाश्रित्य ते जग्मुर्वैष्णवं पदम् ।।
'यथा सर्वेषु देवेषु नास्ति नारायणात्परः ।
तथा सर्वेषु मन्त्रेषु नास्ति चाष्टाक्षरात्परः ।।
'भूत्वोर्ध्वबाहुरत्राद्य सत्यपूर्वं ब्रवीमि वः ।
हे पुत्रशिष्याः श्रुणुत न मन्त्रोऽष्टाक्षरात्परः ।।
तदर्चनपरो नित्यं तद्भक्तस्तं नमस्कुरु ।
तद्भक्ता न विनश्यन्ति ह्यष्टाक्षरपरायणाः ।।
'आसीना वा शयाना वा तिष्ठन्तो यत्र कुत्र वा ।
नमो नारायणायेति मन्त्रैकशरणा वयम् ।।
'किं तत्र बहुभिर्मन्त्रैः किं तत्र बहुभिर्वतैः ।
नमो नारायणायेति मन्त्रस्सर्वार्थसाधकः ।।
इत्यादिभिः ।

65. அஷ்டாக்ஷரைக-நிரத: - அஷ்டாக்ஷர = திருமந்திரத்தில், ஏக = முக்கியமாக, நிரத: = விசேஷமான ரதியை உடையவர். அஷ்டாக்ஷரம், வாஸுதேவத்வாதசாக்ஷரம், விஷ்ணுஷடக்ஷரம் என்கிற வ்யாபகத்ரயத் தில் அஷ்டாக்ஷரம் முக்கியமானது. இது முக்கியமாம்படி எங்ஙனே என்னில் - தத்துவம் - ஹிதம் - புருஷார்த்தம் இதுகளைத் தெளிவாக வெளியிடுகையாலும், எல்லா பகவந் மூர்த்திகளுக்கும் ஸாதாரண மாகையாலும், எல்லா ஆசார்யர்களும், ஆழ்வார்களும், மஹர்ஷிகளும் விரும்பிப்போந்தார்களாகையாலும் இம்மந்திரம் ஸர்வ மந்திரங்களுள் முக்கியமானது, என்றிப்படி பல ப்ரமாண ஸம்ப்ரதாயங்களை அருளிச் செய்து அதிலேயே ஊன்றிப்போந்தவ ரென்றபடி.

ஞாயிறு, 10 மே, 2020

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம் நாமம் 62

62.

सम्यक्ज्ञाताङ्ग – पञ्चकः

सम्यक् (= स्वरूपतः प्रमाणत: उपयोगतो हेतुतश्च), ज्ञातं आनुकूल्य-संकल्पादि अङ्गपञ्चकं येन सः सम्यक्- ज्ञाताङ्ग- पञ्चकः । यथोदाहृतं निक्षेपरक्षायां -

'आनुकूल्यमिति प्रोक्तं सर्वभूतानुकूलता'
'तथैव प्रातिकूल्यं च भूतेषु परिवर्जयेत्'
'त्यागो गर्वस्य कार्पण्यं श्रुतशीलादि-जन्मनः ।
'रक्षिष्यत्यनुकूलान्न इति या सुदृढा मतिः ।
स विश्वासो भवेच्छक सर्व-दुष्कृत-नाशनः ।।
'अप्रार्थितो न गोपायेदिति तत्प्रार्थनामतिः ।
गोपायिता भवेत्येवं गोप्तृत्व-वरणं स्मृतम् ।।

एतेषां उपयोगोऽप्युक्त: -

'आनुकूल्येतराभ्यां तु विनिवृत्तिरपायतः ।
कार्पण्येनाप्युपायानां विनिवृत्तिरिहोदिता ।। (i)
रक्षिष्यतीति विश्वासात् अभीष्टोपायकल्पनम् ।।
गोप्तृत्व-वरणं नाम स्वाभिप्राय-निवेदनम् ' इति । (ii)

प्रमाणन्तु -

'आनुकूल्यस्य संकल्पः प्रातिकूल्यस्य वर्जनम् ।
रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्व-वरणं तथा ।
आत्मनिक्षेप-कार्पण्ये षड्विधा शरणागति:'
'न्यासः पञ्चाङ्गसंयुतः
'प्रपत्तिं तां प्रयुञ्जीत स्वाङ्गैः पञ्चभिरावृताम् ‘ इति ।

हेतुस्तु, आनुकूल्यसंकल्प-प्रातिकूल्यवर्जनसंकल्पयोः शास्त्रवशंवदं मनः करणम् । शास्त्रेण ईश्वरो रक्षिष्यतीति अनुभूतस्य अनुष्ठानकाले स्मृतिरूपो विश्वास: संस्कार-सहकृत मन: करणकः । प्रार्थनारूप गोप्तृत्व-वरणस्य प्रबलगुणवत् दर्शन-सहकृतं मनः करणम् । आत्मनिक्षेपस्य चोदना-सहकृतं मनः करणम्। गत्यन्तराभावरूपस्य कार्पण्यस्य योग्यानुपलंभ-सहकृतं मनःकरणमिति । ननु – 'प्रपत्तेः क्वचिदप्येवं परापेक्षा न विद्यते। इति वचनात् प्रपत्तेः अङ्गापेक्षा नास्तीति चेत्, न; आनकल्यादि अङ्गानामपि विहितत्वेन तस्य वचनस्य कर्माद्यपेक्षाभावमात्रपरत्वात् अङ्गमात्रानपेक्षत्वे करणत्वानुपपत्तेः । तदुक्तं -

'न हि तत् करणं लोके वेदे वा किंचिदीदृशम् ।
इति कर्तव्यता साध्यो यस्य नानुग्राहोत्थिते।।'  इति ।

அவதாரிகை மேலிரண்டு திருநாமங்களால் த்வயத்தின் பூர்வகண்டத்தில் சொன்ன அங்கங்களோடு கூடிய ப்ரபத்தியின் ஸ்வரூபாதிகளை நன்றாக உணர்ந்தவரென்கிறது. இதில் முதல் திருநாமத்தால் அங்கங்களைத் தெளிவாக உணர்ந்தவர் என்கிறது.

62. ஸம்யக் ஜ்ஞாதாங்கபஞ்சக:-
       ஸம்யக் = நன்றாக, ஜ்ஞாத = அறியப்பட்ட, அங்கபஞ்சக: = ஐந்து அங்கங்களையுடையவர்.

இப்பிரபத்தியின் ஐந்து அங்கங்களாவன - (i) ஆநுகூல்ய ஸங்கல்பம், (ii) ப்ராதிகூல்ய வர்ஜனம், (iii) கார்ப்பண்யம், (iv) மஹா விச்வாசம், (v) கோப்த்ருத்வ வரணம்.

ஆநுகூல்ய ஸங்கல்பமாவது, பகவானிடத்தில் அல்லது ஸர்வபூதங்களிடத் தில் அநுகூலனாய் வர்த்திக்கக்கடவேன் எனப்படுமது. ப்ராதிகூல்யவர்ஜந மாவது, முன்சொன்ன இரண்டிலும் விரோதமான செய்கையைப் பண்ணக் கடவேனல்லேன் எனப்படுமது. கார்ப்பண்யமாவது, என் கையிலொரு கைமுதலில்லை என்று கொண்டு வேறு உபாயத்திலே நசையற்று அதடியாக வந்ததும், பகவத் க்ருபையை உண்டுபண்ணத் தக்கதுமான கர்வஹாநி என்னப்படுமது. மஹா விச்வாசமாவது, ஈச்வரன் ரக்ஷிப்பன் என்கிற உறுதி. கோப்த்ருத்வ வரணமாவது, நாம் வேண்டாவிடில் ரக்ஷிக்க மாட்டானென்று கொண்டு ரக்ஷிக்கவேணுமென்று வேண்டுகை.

இங்கு சிலர் (i) இவ்வுபாயத்துக்கு அங்கங்கள் வேணுமோ, (i) வேணுமானால், இவ்வுபாயத்துக்கு ஒன்றும் வேண்டாமென்கிறது விரோதி யாதோ, (iii) அது வேறு அங்கங்கள் வேண்டாதென்றபடியென்னில்; வேணுமானாலும் அவச்யமாக வேண்டுவதில்லை, இருந்தாலுமிருக்கலா மென்னில்; (iv) அங்கமில்லாவிடில் அங்கி நிறைவேறாதென்னில்; (v) ஆனால் ஐந்தும் வேணுமோ, சிலது போதாதோ, வரிசைக்ரமமும் வேணுமோ என்றும் - இது முதலிய சங்கைகள் வர, அவைகளை சுருதி, ஸ்மிருதி, ஆசாரங்களைக்கொண்டு ஸ்ரீரஹஸ்யத்ரயஸாராதிகளில் நிவர்த்தி செய்து அங்கங்களையும், அதன் ப்ரயோஜநங்களையும் நன்றாக உணர்ந்து அருளிச் செய்தாரென்றபடி