புதன், 7 அக்டோபர், 2009

சந்தவசந்தத்தில் படித்து சிரித்தது

மரபில் நகைச்சுவை -- நம் "சிங்காரச் சென்னை" பற்றி

in reference to:

"சென்னைச் சிறப்பு <>* திரிவிக் கிரமன் திரும்பக் குறளாய்த் திரிந்ததுபோல் செம்மைத் தமிழ்தன் - உருமாறி 'இன்னாப்பா, இஸ்துகினு' என்பனபோல் ஆனவிதம் சென்னைக்கே ஆன சிறப்பு. 1 காலையில் கேட்கும் ‘கசுமாலம், எந்திரி!' சாலையில் ‘சாவுக் கிராக்கியிது' -மாலையில் 'துன்றான்பார் சோமாரி' இன்னபல சொல்லழகு சென்னைக்கே ஆன சிறப்பு. 2 'நாஷ்டாவை முட்ச்சுகினு' நாமேறும் ஆட்டோக்கள் கோஷ்டியாய்ச் சேர்ந்து குரலெழுப்ப - 'ராஷ்டா'வில் மின்னல் எனவிரையும் விந்தைக்கண் காட்சியெங்கள் சென்னைக்கே ஆன சிறப்பு. 3 (கோஷ்டி=கோட்டி, கூட்டம்; ஒருவரோடு ஒருவர் கூடியிருத்தல்; ராஷ்டா=ரஸ்தா: வீதிக்கான பெயரின் மரூஉ) செல்லுகின்ற ஊர்தி சிறிதும்அலுங் காதிருந்தால் நல்லதல்ல நம்முடலுக் கென்பதனால் - கொல்வதுபோல் சென்றுகுழி யுள்புகுந்து சிந்திக்க வைத்தல்நம் சென்னைக்கே ஆன சிறப்பு. 4 கையிலே காசுடன் காய்கறி வாங்கையில்நாம் செய்கின்ற பேரம் பிடிக்காமல் - வைபவரின் கன்னாபின் னாமொழியைக் காதுகுளி ரக்கேட்டல் சென்னைக்கே ஆன சிறப்பு. 5 கற்றபின் நிற்கக் கடற்கரையில் கல்லாக நிற்கின்ற வள்ளுவர்தம் நீதிகளைச் - சுற்றிஇரை தின்னவரும் காக்கைக்குச் செப்புகின்ற சீர்மையிந்தச் சென்னைக்கே ஆன சிறப்பு. 6 மல்லிகைப் பூமணத்தில் மாட்டின் இடுகையொடு பொல்லாப்பே ருந்தின் புகைகலந்து - நில்லாமல் என்றுமுள கூவமணம் ஏற்றுநமை ஊக்குவித்தல் சென்னைக்கே ஆன சிறப்பு. 7 வெய்யிலின் சூட்டில் மெழுகாகும் சாலையிலே ஐயய்யோ என்றலரும் ஆட்களெல்லாம் - தையலாள் சென்றதிசை நோக்கித் திரும்பித் துயர்மறத்தல் சென்னைக்கே ஆன சிறப்பு. 84 மழைத்திவலை கண்டவுடன் மாநகர்ச் சாலை குழைசேற்றுக் குட்டையாய்த் தம்மை - விழவைத்தும் என்றுமதைச் சீர்செய்ய எண்ணா மதியுடையோர் சென்னைக்கே ஆன சிறப்பு. 9 சூரியனோ ஈரிலையோ இங்குநமைத் துன்புறுத்த யாரிருந்தால் தானென்(று) அடுத்தடுத்துத் - தேர்தலிலே என்ன முடிவெனினும் ஏற்கும் பெருந்தன்மை சென்னைக்கே ஆன சிறப்பு. 10"
- Marabil nagaiccuvai-34; மரபில் நகைச்சுவை - 34 - சந்தவசந்தம் | Google Groups (view on Google Sidewiki)

தென்னாட்டுச் செல்வங்கள்

ஆனந்த விகடனில் நான் சிறுவனாக இருந்த காலத்தே வந்த தொடர் இது. திரு சில்பி அவர்கள் கைவண்ணத்தால் அமரத்துவம் பெற்ற அந்த ஓவியங்களில் கிடைத்த சிலவற்றை முடியும்வரை இங்கு பகிர்ந்நு கொள்கிறேன்.
silpi_0005
silpi_0006
silpi_0007  silpi_0008
silpi_0009

செவ்வாய், 6 அக்டோபர், 2009

சில்பி

இன்று 50 வயதைத் தாண்டி வாழ்பவர்களில் பலருக்கு மிகவும் பரிச்சயமான – இல்லை பேரைச் சொன்னாலே மயங்க வைக்கின்ற – ஒரு பெயர் “சில்பி”. கல்லூரி நாட்களிலே இராமேஸ்வரத்தில் அவருக்குத் தொண்டு செய்த பாக்யம் அடியேனுக்கு உண்டு. அந்த நாட்களிலே ஆனந்த விகடனில் அவரது சித்திர மேதமையைக் கொண்டு, அன்றே அழிந்துபடத் தொடங்கியிருந்த பல திருக்கோவில்களிலிருந்த அற்புதமான சிற்பங்களை வரையவைத்து அவற்றை “தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற தொடராக வெளி வந்தது இன்னும் பலருக்கு பசுமையான நினைவுகளாக இருக்கும். அந்தக் கட்டுரைகளை ஒரு புண்ணியவான் தொகுத்து வைத்திருக்கிறார். ஆனால் முறையான பராமரிப்பின்றி அதில் 111வது தொடர் முதல் சில அத்தியாயங்கள் அடியேனுக்குக் கிடைத்தன. அவற்றை முடியும்போதெல்லாம் இங்கு பகிர்ந்து கொள்வேன். தெய்வ உருவங்களை அந்தப் புனிதம் மாறாமல் திரு சில்பி அளித்திருப்பதைக் கீழே காணலாம்.

Silpi_0001 

Silpi_0002 Silpi_0003

Silpi_0004

திங்கள், 5 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை

30. சித்திரப்பத்ததி

வழியெதுகை

911. தலப்பல நிலைப்பரி தனிப்பரி யரிப்பேர்
           நிலைத்தெதி னலத்திரு நிலத்தலை நிலைத்தான் 
           கலைத்திரு விசித்திர கவித்திர னனைத்தின்
           னிலைப்புகழ் மணிப்பத நிலைப்புக லடைந்தேன்.
     1

வழியெதுகை, வழுப்போலி, பொருட்சித்திரம்.

912. கேட்டிதிவி சித்திரமு னீட்டியுக நீதிப்
         பாட்டிலரி காட்டுபகு பாட்டிலரி பாதூ!
         கூட்டுமணி சித்திரகு ருத்திருபொ றித்துன்
         பாட்டடிந லப்பலப யப்புறுன யப்பாம்.               2

கோமூத்திரி

913. சுரா சுரா திகை தொழு 
         மிரா மசே மபா லிகை
         சரா சரா ளுகை செழு
         முரா ரிசே டபா துகை                                     3

 TPmalai 913

(படம் ஸ்ரீ கேசவ அய்யங்கார் வரைந்தது)

கூடசதுர்த்தம்

914. போதம லர்த்திரு மாமகள் போல
         மாதகை மங்கல நாழிநி ரப்பிப்
        பாதக கோடிது டைத்தெழு வாரிப்
        போதரி மாதிரு பாதுகை வாழி                    4

நிரோட்டியம்

915. கரைந் தகங் கடந் தரத்
         திரைக் கடற் கணே ழையே
        னிரங் கரங் கன்தா ணிலைச்
        சரண் செறிந் தடைந் தனன்                      5

Broad Band sucks in India

இந்தியா கிரிக்கெட்டில் மட்டும் பாகிஸ்தானுடன் தோற்கவில்லை ! அகலக்கற்றை (Broadband) விஷயத்திலும் அவர்கள் நம்மைக் காட்டிலும் மேலாகத்தான் இருக்கிறார்களாம். இன்று நான் படித்த இந்த அறிக்கையை நீங்களும் படியுங்கள்.

நன்றி;-- "Think Digit " computer magazine


Reports confirm what we already knew; Indian Broadband sucks!
Digit by Kshitij Sobti / Oct 05, 2009 12:59:31 IST / Tags: india, report, oxford, broadband quality
Rate this article
3
IncreaseDecrease

It's not like we needed convincing, but India is one of the crappiest places in terms of broadband quality. When Google Docs seems like a heavy RIA, you have to know something is wrong!

Now in a Global Broadband Quality Study by University of Oxford, India has ranked 62 of 66 total entries. Since such comparisons traditionally call for a comparison with our infamous neighbours, no, we didn't beat Pakistan, who are snug at 60. We still managed to beat Nigeria, Kenya, Egypt, and Indonesia though, if that even means anything.