சனி, 31 டிசம்பர், 2011

ஆரணமும் அருளிச் செயலும்

அன்று தூப்புல் ஸ்வாமி தேசிக அவதார விசேஷத்தினால் பெரும்புகழ் அடைந்தது என்றால் இன்று அவர் புகழைப் பரக்கப் பாடி, பல்வகையால் அவர் ஸ்ரீஸூக்திகளைப் பாரெங்கும் உள்ளோர் உய்யும் வண்ணம் ப்ரவசநங்கள் செய்து தேசிகனல்லால் வேறோர் தெய்வமில்லை என்று வாழ்கின்ற வேதமோதுமுத்தமர்களால் தூப்புல் புகழ் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அப்படி ஸ்வாமி தேசிகன் திருவடித் தொண்டே தலையாய பேறு என்று வாழ்வோர் பலருள்ளும் ஸ்ரீ உ.வே. சடகோப தாதாசாரியார் ஸ்வாமி அடிக்கடி இணையத்தின் வழியாயும் பல அற்புதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு நம் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். ஆசார்ய அனுக்ரஹத்தால் இந்த நிர்மூடன் மீதும் அவருக்கு அளவற்ற ப்ரீதி, அதனால் அடிக்கடி பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். அப்படி நேற்று அடியேனுக்கு அனுப்பிய ஒரு கட்டுரையை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


ஆரணமும் அருளிச்செயலும்.
தாஸஸ்ய விஞ்ஞாபநம்.
 ,
தேவர்கள் யாகத்தில் எதை செய்தார்களோ அதையே அஸுரர்களும் செய்தார்கள் என்ற பொருளில்
வேதத்தில்  தேவா வை யத்யஞ்ஞேகுர்வதததஸுரா அகுர்வத என அநேக இடங்களில் ஓதப்படுகிறது.
இதுபோல் யதேவாத்வர்யுஃ கரோதிதத்ப்ரதிப்ஸ்தாதா கரோதி,  ,
.யாகத்தில் அத்வர்யு என்கிற ரித்விக்கு செய்வதை ப்ரதிப்ஸதாதா எனகிற ரித்விக்கும்
செய்கிறார்,அத்வர்யுகணத்தில் அத்வர்யு பெரியவர் ஆவார்ப்ரதிப்ரஸ்தாதா சிறியவர் ஆவார்.பெரியவர் செய்வதையே
சிறியவரும் செய்வதை லோகத்திலும் காணலாம் என்பதை  வேதம் கூறுகிறதுதஸ்மாத் யத் ச்ரேயான் கரோதி தத் பாபீயான்கரோதி,
இதையே யத்யதாசரதி ச்ரேஷ்டஃ தத்ததேவேதரோ ஜனஃஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததனுவர்ததே,
லோகத்தில்  உயர்ந்தவன் எதை அனுஷ்டிக்கிரானோ,அதை ப்ரமாணமாக கொண்டு மற்றவர்களும் அதை பின்பற்றுகிறார்கள் என
ஸ்ம்ருதியில் கீதாசார்யன் குறிப்பிடுகிறார்..
,இதையே சற்று வேறுவிதமாக  பூர்வாசார்யர்கள் ஸாதித்த விஷயத்துக்கு விரோதமில்லாமல் பின்புள்ளவர்கள்  விஷயத்தை ஸாதிக்கவேணும் என
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனைப்பேசாதே.
 தம்நெஞ்சில் தோன்றியதே சொல்லி இது சுத்த உபதேசவரவார்தை என்பர் மூர்கராவார்  என ஸ்ரீரம்யஜாமாத்ருமுனி-ஸ்ரீமணவாளமுனி ஸாதித்தார்.
முன்பு கூறிய க்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் செய்ததை ஸ்ரீமணவாளமுனியும் செய்ததாக அமைந்தவிதத்தை நாம் சிறிது அனுபவிப்போம்
ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில்
ஆழ்வார்கள் அவதரித்த நாள் ஊர் திங்கள் அடைவுதிருநாமங்கள் அவர்தாம் செய்த
வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின் வகையான தொகையிலக்கம் மற்றுமெல்லாம்.
வீழ்வாக மேதினிமேல் விளங்கநாளும் விரித்துரைக்கும் கருத்துடனே ,,,,,,  என ஆழ்வார்கள் அவதரித்த
மாதம் நக்ஷத்ரம் திவ்யதேசம்  மற்றும் அவர்கள் செய்த பாசுரத்தின் தொகை முதலியவற்றை ஒரு பாட்டில் குறிப்பிட்டு 
ஆழ்வார்களை வரிசை படுத்தி அனுக்ரஹித்தார்பிறகு 15,16 பாட்டுகளில் பாசுரங்களை கூட்டி கணக்கிட்டு நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே  என ஸாதித்து பிறகு  வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார் என முன்பு ஸாதித்தக்ரமத்தில்  வரிசையாக ஸாதிக்கிறார்.இங்கு எம்பெருமானார்  ஆழ்வாரில்லை,ஆயினும் அவர் விஷயமாக இராமானுசநூற்றந்தாதி உள்ளபடியால் அதையும் சேர்த்தே 4000 பாசுரம் என கணக்கிடுவதால் அவருக்கும்  பாசுரத்தை சேர்த்துள்ளார்,ஸ்ரீமதுரகவியாழ்வார்  நம்மாழ்வார் விஷயமாக கண்ணினும் சிறுத்தாம்பு ப்ரபந்த்தை அனுக்ரஹித்தாலும் அதுவும் ப்ரபந்தத்தில்  சேர்ந்ததாலும்,அவரையும் மற்றும் ஆண்டாளையும் சேர்த்து ஆறிருவரோடொருவர் அவர்தாம் செய்த,துய்யதமிழ்மாலை இருபத்துநான்கின் பாட்டின் தொகை என ஸாதித்தார்.மற்றுமுள்ள ஆசார்யர்களை இங்கு குறிப்பிடவில்லை.ஸம்ப்ரதாய வரலாறையும் குறிப்பிடவில்லை.
இனி ஸ்ரீமணவாளமுனி ஸாதித்த உபதேசரத்நமாலையை அனுபவிப்போம்,
ஸ்வாமி தேசிகன் பரமபதஸோபானக்ரந்தத்தில்
1,யதிவரனார் மடப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்தையுள்மன்னியதே என எம்பெருமானாரின் சிஷ்யரான மடப்பள்ளி ஆச்சான் வழியாக கிடைத்த ரஹஸ்யார்தங்கள் கிடாம்பி அப்பிள்ளார் அநுக்ரஹித்த க்ரமத்தில்  தன் ஸ்ரீஸூக்தியில்  அமைந்ததை ஸாதிப்பதாக அனுக்ரஹித்த க்ரமத்தில்  ஸ்ரீமணவாளமுனி தமது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையின் அனுக்ரஹத்தால்  வந்த உபதேசத்தை பேசுவதாக ப்ரதிஞ்ஞை செய்கிறார்.ஸ்வாமி தேசிகன் பெற்றது ரஹஸ்யார்தம்,ஸ்ரீமணவாளமுனி பெற்றது ஸம்ப்ரதாயவரலாறு.,

2.ஸ்வாமி தேசிகன் அதிகாரஸங்க்ரஹத்தில் 52 வது பாட்டில் கோதற்றமனம் பெற்றார் கொள்வார் நம்மைஎன்றும் கூனுளநெஞ்சுகளால் குற்றமென்னு இகழ்ந்திடினும் என ஸாதித்தக்ரமத்தில் மற்றோர்கள் மாச்சர்யத்தால் இகழில்வந்ததெந்னெஞ்சே என ஸ்ரீமணவாளமுனி குறிப்பிடுகிறார்..

3.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார் மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவிபொய்யில் புகழ் கோழியர்கோன்  விட்டுசித்தன் பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்ஐயனருள் கலியன்என ஸாதித்தபடி,
பொய்கையார் பூதத்தார் பேயார்,புகழ்மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர்கோன்,துய்யபட்டநாதனன்பர்தாள்தூளி நற்பாணன் நன்கலியன்என ஸாதித்தார்.

4.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் மேதினிமேல் விளங்கநாளும் விரித்துரைக்கும் கருத்துடனே  என ஸாதித்தபடி
ஆழ்வார்கள் இந்தவுலகிலிருள் நீங்க வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாமென்றார்.ஆக இங்கு ப்ரதிஞ்ஞை செய்தது மாதமும் நாளும் மாத்ரமாகும் அவதரித்த ஊரை சொல்லவில்லை என்பது விசேஷம்..
 பிறகு பொய்கை பூதம் பேய்  என மூவரும் அவினாபூதர்களாதலால் ஆகலாம் மூவரையும் ஒரே பாட்டில் ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் என குறிப்பிடுவது,அடுத்து வரவேண்டியது பொய்கையார் பூதத்தார் பேயார்,புகழ்மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர்கோன் கணக்கில்  மழிசைப்பிரான் , ஆயினும் முன்பு சொன்னக்ரமத்தை மாற்றி  மாதகணக்கில் ஐப்பசிக்கு அடுத்ததான கார்திகை மார்கழி தை மாசி வைகாசி ஆனி என அம்மாதங்களில் அவதரித்த மங்கையர்கோன்,  பாணர் , தொண்டரடிப்பொடியாழ்வார்,மழிசைப்பிரான்,குலசேகரன்,சடகோபர்பெரியாழ்வார்,வரையில் ஸாதித்து மீண்டும்
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள்,மதுரகவியாழ்வார் எதிராசராமிவர்கள்வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும் இந்தவுலகோர்க்குரைப்போம் யாம். என குறிப்பிடுகிறார்.இங்கு ஓர் ஸமசயம் பிறக்கும்,முன்பு சொன்ன க்ரமம் வேறு தற்சமயம் கூறுவது வேறு,இது முகத்தில் வேறுவிதமாக ஊர்த்வபுண்ட்ரம் தரித்து மற்ற அங்கங்களில் வேறுவிதமாக தரிப்பது போல் உள்ளது.மேலும் ஆழ்வார்களில் மதுரகவியும் உண்டு எனில் முன்பே ப்ரதிஞ்ஞை செய்தபடியால் இங்கு மீண்டும் அவரை தனியே குறிப்பிடுவதும்  முன்பு கூறிய கோஷ்டியில் இவரை சேர்க்காததும் ஏன் என. பதிலை ஓரான் வழியாக உபதேசம் பெற்ற ஸம்ப்ரதாயமறிந்தவர்கள் கூறுவர்.

5.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் எண்ணின் முதலாழ்வார்கள் என 15,16 பாட்டுகளில்  ஆழ்வார்கள் அனுக்ரஹித்த பாசுரங்களை கூட்டி கணக்கிடுவதை போல் ஆழ்வார்கள் அவதரித்த ஊர்களை 30 முதல் 33 வரையில் 4 பாட்டுகளில் குறிப்பிடுகிறார்.
எண்ணரும் சீர்ப்பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர் வண்மைமிகு  கச்சிமல்லைமாமயிலை,மண்ணியினீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்.,ஓங்குமுறையூர் பாணனூர்,30,

தொண்டரடிப்பொடியாழ்வார் தோன்றியவூர் தொல்புகழ்சேர் மண்டங்குடியென்பர் மண்ணுலகில்,எண்டிசையுமேத்தும் குலசேகரனூரெனவுரைப்பர் வாய்த்த திருவஞ்சிக்களம்,31.

மன்னுதிருமழிசை மாடத்திருக்குருகூர்மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்,நன்னெரியோர் எய்ந்த பக்திசாரர் எழில் மாறன் பட்டர்பிரான்.வாய்ந்துதித்தவூர்கள்வகை.32.

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத்திருக்கோளூர்,ஏரார் பெரும்பூதூரென்னுமிவைபாரில் மதியாருமாண்டாள் மதுரகவியாழ்வார்,எதிராசர் தோன்றியவூரிங்கு,33,
இங்கு ஓர் ஸமசயம் பிறக்கும்,இங்கு ஆழ்வார்களின் அவதாரஸ்தலங்களை கூறுவதாக ப்ரதிஞ்ஞை இல்லை.மேலும் வெண்பாவானபடியால் அவரவர்கள் பாட்டில்  ஊரையும் சேர்க்கமுடியாது என தனியாக கூட்டினாரோ என,பதிலை ஸம்ப்ரதாயமறிந்தவர்கள் கூறுவர்.

6.ஸ்வாமி தேசிகன் அதிகாரஸங்க்ரஹத்தில்
என்னுயிர் தந்தளித்தவரை சரணம் புக்கு என தனது ஆசார்யர்முதலாக ஸாதித்த க்ரமத்தில்
தெருளுற்றவாழ்வார்கள் சீர்மையரிவாரார்,அருளிச்செயலையறிவாரார். அருள் பெற்றநாதமுநிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமநமே யுண்டோ பேசு என  நாதமுனி முதலாக தேசிகன் என ப்ரஸித்திபெற்ற நம் ஸ்வாமிதேசிகன் பர்யந்தமாக ஸாதிக்கிறார்.

ஆழ்வார்களையும்  அருளிச்செயல்களையும்,தாழ்வாக நினைப்பவர்கள்தாம். நரகில் வீழ்வார்களென்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீயவர்பால்.சென்றணுகக்கூசித்திரி. என ஸாதிப்பதால் ஆழ்வார்களைப்போல் அநேகம் ப்ரபந்தத்தை அனுக்ரஹித்த ஸ்வாமி தேசிகனை தாழ்வாக நினைப்பவரிடம் செல்லவேண்டாமென்றும் உபதேசித்தபடி.

 ஸத்யமிப்படியிருக்க சிலர்  ஸ்வாமிதேசிகனுக்கு முன்பாக இருந்த ஆசார்யர்கள் ஸ்வயம் த்ராவிடப்ரபந்தத்தை ஸாதிக்கவில்லை ,ஸ்வாமிதான் தமிழ்ப்ரபந்தத்தை முதன்முதலாக ஸாதித்தார்,ஸ்வாமி தேசிகன் ஸ்ரீஸூக்தியை copy  அடித்து ரம்யஜாமாத்ருமுனி-ஸ்ரீமணவாளமுனி ஸாதித்தார் என்றும் .ஸ்வாமிதேசிகன் வாழித்திருநாமத்தை copy அடித்து மற்ற வாழித்திருநாமம் வந்தது என குற்றம் கூறுவது தவறாம்,ஏற்றத்தாழ்வை மத்யஸ்தர்கள் அறிவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக