சனி, 10 டிசம்பர், 2022

உத்தர ராமாயணம் 3

எட்டாவது ஸர்க்கம்

[ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் மால்யவான் சுமாலீ தோற்று ஓடுவதும்.

அரக்கர்களுடன் பாதாளம் அடைவதும்,

ஒருவருமற்ற லங்கையில் குபேரன் குடிபுகுதலும்.)

இப்படியாக ஓடும் அரக்கர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் நாராயணனைப் பார்த்து, கரைமீது மோதித் திரும்பும் கடலலை போல, மால்யவான் சடக்கெனத் திரும்பியவனாய். கோபத்தினால் இரத்த மெனச் சிவந்த கண்களை உடையவனாயும் கொண்டு பின்வருமாறு கூறினான்.

நாராயண! ந ஜாநீஷே க்ஷாத்ரதர்மம் ஸநாதநம் |

அயுத்தம நஸொ பீதாந் அஸ்மாந் ஹந்த்ஸி யதேதர:1

பராங்முக வத பாபம் ய: கரோத்யஸுரேதர :

ஸ ஹந்தா ந கத: ஸ்வர்கம் லபதே புண்யகர்மணணாம் ||

ஹே நாராயண! நீ க்ஷத்ரியர்களின் யுத்ததர்மத்தை அறியாயா?அது மிகப் பழமையான தர்மமல்லவா? யுத்தத்திலிருந்து, யுத்தகளத்திலிருந்து பயந்து புறமுதுகிட்டு ஓடுபவர்களைத் தொடர்ந்து அடிப்பது பாபமன்றோ? யுத்தம் செய்வதிலிருந்து நிவிருத்தர்களாய் பயந்து ஓடும் எங்களை ஒன்றுமறியாதவனே போல் தொடர்ந்து கொன்று குவிக்கின்றாயே! புறமுதுகிட்டோடுபவர்களைக் கொல்பவன், புண்யாத்மாக்கள் அடைந்திடும் ஸ்வர்க்கத்தை ஒருபோதும் அடையமாட்டான்.

        சங்க சக்ர கதைகளைத் தாங்கிய உனக்கு யுத்தம் செய்ய வேண்டுமென்கிற ஆஸ்தை குறையாது இருந்தால், நான் இருக்கிறேன், இதோ, என்னிடம் உனது ஸாமார்த்யத்தைக் காட்டு என்றான்.

 

        இதைக்கேட்ட. பலசாலியும், உபேந்தரனுமான ஸ்ரீமந்நாராயணன், மால்யவானைப் பார்த்து, 'அரக்கர் தலைவ! -

யுஷ்மத்தோ பயபீதாநாம் தேவாநாம் வை மயாபயம்

ராக்ஷஸோத்ஸாதநம் தத் ததேததநுபால்யதே ||

ப்ராணைரபி ப்ரியம் கார்யம் தேவா நாம் ஹி ஸதா மயா

ஸோஹேம் வோ நிஹநிஷ்யாமி ரஸாதலகதாநபி ||

உங்களிடமிருந்து பயந்த தேவர்களின்பொருட்டு ராக்ஷஸர்களைக் கொன்று உங்களை ரக்ஷிக்கிறேன் என்று நான் அபயப்ரதானம் செய்துள்ளேன். அதைத்தான் இப்போது நான் செய்கிறேன். ப்ராணன்களனைத்தாலும் நான் தேவர்களின்பொருட்டு எப்போதும் ப்ரியத்தைச் செய்யக் கடமைப்பட்டவனாக உள்ளேன். ஆகையால் நீங்கள் பாதாள லோகம் சென்றாலும் தொடர்ந்து துரத்தியடிப்பேன்" என்று கூறினார்.

        சிவந்த தாமரைப்பூப் போன்ற கண்களையுடைய தேவ தேவனான ஸ்ரீமந் நாராயணன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது மால்யவான் பெரிய கதையினால் பகவானுடைய மார்பில் அடித்தான். மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த கதாயுதமானது ஓசை எழுப்பிய வண்ணம் பகவானது மார்பில் பதிந்து, கருமேகத்தில் பளிச்சிடும் மின்னலென விளங்கியது. பககவான் அதே கதையைத் தம் மார்பிலிருந்து எடுத்து மால்யவான் மீது வீசினார். அதனால் அடிபட்ட மால்யவான் நிலை குலைந்தாள். ஆச்வாஸமடைந்து, பிள் அவன் முட்கள் நிறைந்ததும், கறுத்த இரும்பிலானதுமான சூலாயுதத்தினால் பகவானின் மார்பில் அடித்ததோடல்லாமல் வஜ்ராயுதத்திற்கொப்பான தனது முஷ்டியினாலும் அங்கு அடித்துவிட்டு வில்லடி தூரம் பின் நோக்கி நகர்ந்தாள். அப்போது ஆகாசத்தில் 'நன்று நன்று' என்று சப்தம் உண்டாயிற்று. கருடனையும் ஓடிவந்து அடித்தான்.

        மிகுந்த கோபம் கொண்ட கருடன் தனது இறக்கைக் காற்றினால் மால்யவானை, உலர்ந்த புல்லைப் பெருங்காற்று தூக்கிச் சென்று தள்ளுமாப் போல் வெகு தூரத்திற்கு அப்பால் தூக்கிச் சென்று தள்ளினான். பக்ஷிராஜனுடைய பக்ஷக் காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட தமையனைக் கண்ட தம்பி சுமாலி தனது ஸைன்யத்துடன் லங்கையைக் குறித்துச் சென்றான். அதைக் கண்ட மால்யவானும் தன் ஸைன்யத்துடன் லங்கையை அடைந்தான்.

        ஹே கமலக்கண்ணனே! இவ்வாறு விஷ்ணுவினால் தோல்வியுற்ற ராக்ஷஸக் குழாங்கள் அவருக்குப் பயந்து அகங்குலைந்து லங்கையை விட்டுப் பாதாளலோகம் சென்று தந்தாம் மனைவி மக்களுடன் வஸிக்கலாயினர்.

        ஹே ரகுஸத்தம! ஸாலகடங்கரையின் வம்சத்தில் உதித்தவர்களான அரக்கர்கள் விஷ்ணுவால் விரட்டப்பட்டவர்களாவார்கள். உன்னால் அழிக்கப்பட்ட ராவணாதிகள் புலஸ்த்ய வம்சத்தில் உதித்தவர்கள். இவர்களை விடவும் அவர்கள் மஹாபலசாலிகள் தேவதைகளுக்கு விரோதிகளான ராக்கதர்களை வதைக்க வல்லவர், சங்க சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு ஒருவருமில்லை. ஸ்ரீராம!

 

பவாந் நாராயணோ தேவ: சதுர்பாஹு: ஸநாதந:|

ராக்ஷஸாந் ஹந்துமுத்பந்ந: ஹ்யஜேய: ப்ரபு வ்யய: [[

நஷ்டதர்மவ்யவஸ்தாதா காலேகாலே ப்ரஜாகர: |

உதபத்யதே தஸ்யுவதே சரணாகதவத்ஸல: ||

தேவரீரே நான்கு கைகளையுடையவரான ஸ்ரீமந்நாராயணன் என்பதை நாங்கள் அறிவோம், புராணபுருஷரான தேவரீர் ராக்ஷஸர்களை அழிப்பதற்காகவே ராமனாகத் திருவவதாரம் செய்துள்ளீர் இவ்வாறாகவே அவ்வோ ஸமயங்களில், தர்மம் நலிவுறும்போது அதை மறுபடி நிலைபெறச் செய்வதற்காகவும், கொடியவர்களை வதைப்பதற்காகவும், அடியார்களிடம் அருள்புரிந்து அவர்களை ரக்ஷிக்கவும் நீர் அவதாரம் செய்கின்றீர்,

        ஹே ஸ்ரீராமசந்த்ர! இவ்வாறாக முந்தைய அரக்கர்களின் உத்பத்தி உள்ளபடி என்னால் சொல்லப்பட்டது. இனி ராவணன் முதலானவர்களுடைய பிறப்பு, பலம் முதலியவைகளைக் கூறுகிறேன்.

        இவ்வாறு அவ்வரக்கர்கள் இலங்கையை விட்டோடி விட்டபடியால் அது சூன்யமாயிருந்தது. அங்குதான் குபேரன் தனது பரிஜனங்களுடன் குடிபுகுந்து வஸித்து வந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக