வினா 15.- இப் பரதனுக்கு முன் பிறந்த சில முக்கிய
அரசர்கள்பெயர் என்ன?
விடை... நகுஷன், அவன் பிள்ளை யயாதி முதலியவர்கள், யயாதி பிள்ளை பூரு,யது முதலியவர்கள்.
அவர்களில் பூரு
வம்சத்தில் சில தலைமுறைக்குப் பின் துஷ்யந்தன் தோன்றினான்.
வினா 16.- இவர்களுள் நகுஷனைப் பற்றிய விசேஷம் என்ன?
விடை.- இவன் இந்திரப் பட்டம் பெற்றதும், அகஸ்தியர் சாபத்தால் மலைப் பாம்பானதும், பீமஸேனனைப்
பிடித்துக் கொண்டதும், தருமபுத்திரரால் ஸந்தேகம் தெளிந்து சாபத்தி லிருந்து விடுபட்டதும்; ஆரண்ய
பர்வத்தில் விஸ்தாரமாய்ச் சொல்லப்போகிறோம்.
வினா 17.- யயாதிக்குப் பூரு, யது என்ற பிள்ளைகள் யாரிடத்தில் பிறந்தார்கள்.?
விடை... யயாதிக்கு சுக்ராசாரியர்
பெண்ணாகிய தெய்வயானை இடமாக யது முதலிய நான்கு பிள்ளைகளும், விருஷபர்வன் என்ற இராக்ஷஸ ராஜன் பெண்ணாகிய சர்மிஷ்டை இடமாக பூரு முதலிய
பிள்ளைகளும்
உண்டானார்கள்.
வினா 18.- சுக்ராசாரியார் தேவலோகத்தில் உள்ள
பிராம்மண உத்தமர் அல்லவா? அவரது பெண்ணை யயாதி
அடைய வேண்டிய காரணம்
என்ன?
விடை.- தேவகுருவாகிய பிரஹஸ்பதியின் பிள்ளை கசன் என்பவன் சாபத்தால் இப்படி நேர்ந்தது.
வினா 19.- கசன் சாபங்கொடுத்த காரணம் என்ன?
விடை. - கசனை தெய்வயானை "என்னைக்
கல்யாணம் செய்து கொள்” என்று கேட்க, அதற்கு அவன் "நீ என் குருவினது
பெண், எனக்கு நீ
ஸஹோதரியாக வேண்டும் ஆதலால் நான் உன்னை விவாஹம்
செய்துகொள்ளகூடாது" என்றான். அதற்கு அவள் "உனக்கு என் தகப்பனார்
சொல்லிய மந்திரம் பலிக்காமல்போகட்டும்”
என்று சபிக்க, கசன் “நீ தேவ பிராம்மண குலமாயிருந்தும்
பூலோகத் தரசனையே விவாஹம் செய்துகொள்ளக்
கடவாய்"
என்று மறு சாபங் கொடுத்தான்.
வினா 20.- கசன் சுக்ராசாரியராகிய அஸுர குருவினிடத்தில் என்ன கற்றுக்கொள்ள வந்தான்?
விடை... முன்காலத்தில் அஸுரர்களுக்கும்
தேவர்களுக்கும் யுத்தமுண்டாயிற்று. அப்பொழுது சுக்ராசாரியர்
தனக்குத்
தெரிந்த ஸஞ்ஜீவினி மந்திரத்தால், மாண்டு போன அஸுர ஸேனைகளை பிழைப்பித்து வந்தார்.
இந்த ரஹஸ்யத்தை அறிந்த தேவர்கள் தாமும் லாபமடைய எண்ணி, பிரஹஸ்பதியின் புத்திரனாகிய
கசனை சுக்ராசாரியர் விட்டிற்கு அனுப்பிவித்து
அந்த மந்திரத்தை கற்றுவரும்படி செய்தார்கள். ஆதலால் கசன்
சுக்ராசாரியர் வீடு சென்றான்.
வினா 21.- இவன் தேவர் பக்கத்திலிருந்தும் இவனைக் கஷ்டப்படுத்தாது அஸுரர்கள் சும்மா விருந்தார்களா?
விடை.- அஸுரர்கள் இவனை அநேகம் தடவை கொன்று சாம்பலாக்கியும், தெய்வயானைக்கு இவன்பேரில் லஇருந்த பிரீதியினாலே, சுக்ராசாரியரால் ஸுஜீவினி மந்திர மூலமாய், அநேகம் தரம் பிழைப்பு மூட்டப்பட்டான்.
வினா 22- கடைசியாய் சுக்ராசாரியரிடம் இருந்து மந்திரத்தைக் கசன் கற்றுக்கொண்டானா? எப்படி?
விடை.- இப்படிக் கசன் அடிக்கடி பிழைப்பு
மூட்டியதைப் பார்த்த அஸுரர்கள் கசனைக் கொன்று சாம்பலாக்கி
மதுவோடு
கலந்து சுக்ராசாரியருக்குக் கொடுத்துவிட்டார்கள். அதை அறியாமல்
சுக்ராசாரியரும் குடித்துவிட்டார். பின்பு தெய்வயானை கசனைக்காணோமே என்று
பரிதபிக்குங்கால், கசன் தனது வயிற்றிலிருப்பதை அஸுர குரு கண்டார்.
இப்பொழுது ஸஞ்ஜீவி மந்திரத்தைச் சொன்னால் கசன் பிழைத்து தன் வயிற்றை
கீறிக் கொண்டு வருவான் என்றும், அதனால் தாம் இறப்போம் என்றும்
தெரிந்துகொண்டார். ஆதலால் அவர்
கசனுக்கு மந்திரத்தை உபதேசித்து அவன் வெளியில்
வந்ததும் தம்மைப் பிழைக்கும்படி செய்வதே நல்வழி
எனத் தீர்மானித்தார்.
அப்படியே கசன் வெளியில்வந்து தன் குருவைப் பிழைப்பு மூட்டினான். இவ்வாறு
அஸுரரது கெட்ட எண்ணமே கசன் காரியத்தைப் பூர்த்திசெய்வித்தது.
வினா 23.- இப்படி அடாத காரியத்தையும் செய்ய உத்தேசித்து தனக்கு அநியாயமாய்ச் சாபமுங் கொடுத்த தெய்வயானைக்கு மறுசாபங் கொடுத்தபின்பு கசன் என்ன செய்தான்?
விடை... தெய்வ லோகம் சென்று தன்
பிதாவாகிய பிரஹஸ்பதிக்கு மந்திரத்தை உபதேசம் செய்து, அவர்
மூலமாய் தேவர்களுக்கு ஸுகத்தை
உண்டாக்கினான்.
விடை.- ஒருநாள் தெய்வயானையும் விருஷபர்வன்
என்ற அஸுரராஜன் குமாரியாகிய சர்மிஷ்டையும் சேர்ந்து ஒரு
திவ்விய தடாகத்தில் ஸ்நாநம் செய்யப்போனார்கள். அப்பொழுது காற்றடிக்க
இருவருடைய வஸ்திரங்களும் ஒன்றொடொன்று சேர்ந்துவிட்டன. அப்பொழுது
சர்மிஷ்டை ஸ்நாநம் செய்தெழுந்து, தெரியாமல் தெய்வயானையினது வஸ்திரத்தை
எடுத்துக் கட்டிக்கொண்டாள். உடனே இருவருக்கும் தர்க்க முண்டாய்க்
கடைசியில் அது சண்டையாய் முடிய, சர்மிஷ்டை தனது தாதியர் மூலமாய்
தெய்வயானையை ஒரு பாழுங் கிணற்றில்
தள்ளி விட்டுப் போய்விட்டாள். மறுநாள் அங்கு
வேட்டையாட வந்த யயாதி என்ற இராஜன் அக்கிணற்றி லிருந்து இந்தத்
தெய்வயானையை கையைப்பிடித்து கரை ஏற்றினான். உடனே தெய்வயானையும்
அவ்
வரசனையே மணம்புரிவதாகத் தீர்மானித்தாள்.
வினா 25.- சுக்ராசாரியர் தெய்வயானையால் நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டவுடன் என்ன செய்தார்?
விடை... உடனே அதிகோபத்தோடு விருஷபர்வன் இடஞ் சென்று அவன் பெண் செய்த அகிருத்தியத்தைச் சொல்லி தாம் ஊரைவிட்டுப் போவதாகச் சொல்லவே, அரசன் வேண்டிக்கொள்ளப் பிறகு தம் பெண் எண்ணப் படி சர்மிஷ்டையை அவள் ஊழியக்காரியாகச் செய்தால் தாம் ஊரைவிட்டுப் போவதில்லை என்றார். அதைக் கேட்ட அஸுரராஜன் அப்படியே செய்துவிட்டான்.
வினா 26.- சுக்ராசாரியர் யயாதியாகிய மாப்பிள்ளைக்கு என்ன சொல்லி அனுப்பினார்?
விடை.- 'என் பெண்ணே உன் பட்டமகிஷியாய் இருக்க வேண்டும். இந்த சர்மிஷ்டையை ஸ்திரீயாக வைத்துக் கொள்ளவே கூடாது. அவளை ஊருக்கு வெளியில் வைத்திருக்கவேண்டும். அவளை நீ பெண்சாதியாக்கிக் கொண்டாயென்று தெரிந்தால் உன்னைச் சபித்துவிடுவேன்' என்றார்.
வினா 27.- யயாதி மஹாராஜன் எப்படி நடந்துகொண்டான்?
விடை... ஊருக்குச்சென்று சில வருஷங்கள் தெய்வயானையோடேயே ஸுகமாய் இருந்தான். அப்பொழுது தெய்வயானையிடத்தில் யது முதலிய இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.
வினா 28.- யயாதிக்குப் பூரு என்ற பிள்ளை பிறந்ததாகச் சொல்லி யிருக்கிறோமே, அதெப்படி?
விடை... ஒருநாள் யயாதி தனிமையாய் தனது
உத்தியான வனத்திலிருக்கும்பொழுது சர்மிஷ்டை வந்து
அரசனை பலவந்தம் செய்ய
அதற்கிணங்கியதால் அவளிடம் பூரு முதலிய மூன்று பிள்ளைகள் உண்டானார்
கள்.
பூரு என்பவன் எல்லாப் பிள்ளைகளிலும் சிறியவன்.
வினா 29.. இது சுக்ராசாரியருக்குத் தெரியவந்ததா? எப்படி?
விடை. ஒருநாள் பூரு முதலிய பிள்ளைகள்
தெருவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட தெய்வயானைக்கு
அரசனது சாயை அந்த பிள்ளைகளிடத்தி லிருந்ததாகத் தோன்றியது உடனே
அச்சிறுவர்களை
யழைத்து “உங்கள் தகப்பன் யார் என்று கேட்க, அறியாத சிறுவர்கள் அருகிலிருந்த
யயாதியைக் காண்பித்து விட்டார்கள். உடனே தெய்வயானை அதிகக்
கோபத்தோடு சுக்ராசாரியரிடம் இந்த ஸமாசாரத்தைத் தெரிவித்தாள்.
வினா 30.. சுக்ராசாரியர் இதைக்கேட்டதும் என்ன செய்தார்?
விடை. - உடனே அரசனிடம் வந்து அவனுக்கு அன்று முதல் கிழத்தனம் வரவேண்டு மென்று சபித்தார். உடனே யெளவன வயதிலிருக்கும் யயாதிக்கு ஒரு ஸூகத்தையும் அநுபவிக்க முடியாமலிருக்கும்படி கிழத்தனம் வந்து விட்டது.
வினா 31.- யயாதி எவ்வளவு காலம் இந்தச் சாபத்தால் கஷ்டப்பட்டான்?
விடை.- இதிலிருந்து அதிக கஷ்டத்தை
அடையவில்லை. சுக்ராசாரியருக்குத் தயவு வரும்படி நடந்துகொண்ட
தனால் இதிலிருந்து
தப்புவிக்க கொஞ்சம் இடம் கொடுத்தார். அதாவது 'கிழத்தனம் வந்தபோதிலும், நீ அதை
ஒருவனுக்குக் கொடுத்து அவனது யெளவனத்தை
வாங்கிக்கொள்ளும் சக்தி உனக்கு வரட்டும்' என்று அஸுரகுரு அநுக்கிரஹித்தார். ஆதலால்
சிற்றின்பத்தின் ஆசை மாறாத அரசன் தனது கிழத்தனத்தை கொடுத்து
யெளவனத்தை வாங்கிக்கொண்டு அநேக காலம் ஸுகங்களை அநுபவித்தான்.
வினா 32.- யயாதியின் கிழத்தனத்தை யார் ஏற்றுக்கொண்டு தனது யெளவனத்தை அவனுக்கு கொடுத்தார்கள்?
வினா 33.- யயாதி அப்பொழுது என்ன செய்தான்?
விடை... யதுவிற்கு உன் வம்சத்தை
சேர்ந்தவர்கள் அரசராவதற்கு யோக்கியமில்லாதவர்களாகட்டுமென்று
சாபங் கொடுத்து, இதுபோன்ற சில சாபங்களை மற்றைய பிள்ளைகளுக்கும் கொடுத்தான். ஜனங்களுடைய
இஷ்டத்தை அநுஸரித்து பூருவுக்கு இளவரசு பட்டாபிஷேகம் செய்தான்.
வினா 34.- யயாதி யெளவனத்தோடு எவ்வளவு ஸுகானுபவம் செய்தான்?
விடை.- வெகுகாலம் ஸுகானுபவம் செய்தான்.
அதன் பின்பு கூட அவனுக்கு திருப்தி வரவில்லை. பின்பு தன்
புத்திரனாகிய பூரு என்பவன் கிழத்தனத்தை வாங்கிக் கொண்டு கவலையற்றிருப்பதைக்கண்டு
வியந்து,
யயாதி
யோசனைசெய்து அதன்பேரில் தன் கிழத்தனத்தை
வாங்கிக்கொண்டு பூருவினிடத்தில் தனது
யெளவனத்தைக் கொடுத்தான்.
வினா 35.- யயாதி அப்பொழுது என்ன யோசனை செய்தான்?
விடை. - ஆசைக்கோர் அளவில்லை. தேகத்திற்குக்
கிழத்தனம் வரவர, ஆசைக்கு யெளவனம் வருகிறது.
அநுபவித்து ஆசைதீருகிற
தென்பதே கிடையாது. நெய் விடவிடவிட எப்படி நெருப்பு
விருத்தியாகிறதோ, அது போல அநுபவம் ஆகஆக, ஆசையும் விருத்தியாகும். ஆதலால்
புத்திமான்௧ள் அதைக் கூடிய சீக்கிரத்தில்
நிவர்த்திக்கப் பார்ப்பார்கள் என்று
யோசித்தான்.
வினா 36.- பின்பு யயாதி என்ன செய்தான்?
விடை.- கிழத்தனத்தை ஏற்றுக்கொண்டு, தனது புத்திரனான பூருசெய்த ஸத்கிருத்யத்தை ஜனங்கள்
யாவருக்கும்
தெரிவித்து, அவர்களது
இஷ்டத்தையும் ஸம்பாதித்துக் கொண்டு பூருவுக்குப்
பட்டாபிஷேகம் செய்துவிட்டு வனம் சென்று தவம் செய்து கடைசியாக ஸ்வர்க்கத்தை
அடைந்தான்.
வினா 37.- இவன் ஸ்வர்கத்தை அடைந்த பின்பு அங்கு நடந்த விசேஷம் என்ன?
விடை. - ஸ்வர்க்கத்தில் கொஞ்சகாலம்
வாஸம் செய்தபிறகு இந்திரன், யயாதியைப் பார்த்து நீர் யாரைப்போல் தபோபலமுடையவர் என்று கேட்க, அதற்கு யயாதி 'ஒரு ரிஷியும் எனக்கு நிகரல்ல' என்று பெருமை பாராட்டினான். உடனே
இந்திரன் நீ செய்த ஸத்காரியங்களெல்லாம் இந்த மறுமொழியோடு க்ஷணித்துவிட்டன.ஆகையால் உன்னை எனது ஸேவகர்கள்
பூலோகத்தில் தள்ளிவிடுவார்கள், போகலாம்' என்று அவனை
அங்கிருந்து தள்ளும்படி
செய்தான்.
வினா 38.- அப்பொழுது யயாதி என்ன சொன்னான்?
விடை... யயாதி, அப்பொழுது. 'துள்ளின மாடு பொதிசுமக்கும்' என்ற பழமொழியின் கருத்தை உள்ளபடி அறிந்து கொண்டு, பரிதபித்து இந்திரனை நோக்கி 'எனக்கு கீழே விழும்படியான நிலைவந்தபோதிலும்
ஸத்துக்கள்
மத்தியிலேயே தங்கும்படி அநுக்ரஹிக்கவேண்டும்' என்று பிரார்த்திக்க, இந்திரனும் சரி என்று
ஒப்புக் கொண்டான்.
வினா 39.- யயாதி எங்கு வந்து விழுந்தான்?
விடை. - யயாதி பூமியிலே வந்து விழாமல் ஹோமப் புகையால் ஆகாயத்திலேயே நிறுத்தப்பட்டான்.
வினா 40.- இந்த ஹோமத்தைச் செய்தவர்கள் யார்?
விடை.- அஷ்டகன், பிரதர்த்தனர், வஸ்மனஸ், சிபி என்ற நால்வர்கள். இவர்கள் யயாதினுடைய பெண்
வயிற்றுப் பேரர்கள்.
(இவர்களது விஷயத்தை ஆரண்ய உத்தியோக பர்வங்களில் விஸ்தாரமாய்ச்
சொல்லப் போகிறோம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக