வியாழன், 16 ஜூன், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 2

 ஶ்ரீ மஹா பாரதம்

ஆதி பர்வம்

முருகார்‌ மலர்த்தாம முடியோனை யடியார்‌ முயற்சித்திறந்‌ 
திருகாமல்‌ விளைவிக்கு மதயானைவதனச்‌ செழுங்குன்றினைப்‌ 
புருகூதன்‌ முதலாய முப்பத்து முக்கோடி புத்தேளிரு 
மொருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை யுறவுன்னுவாம்‌.  

வினா 1.- சந்திர வம்சத்தில்‌ பரதன்‌ என்ற ஓர்‌ அரசனிருந்ததாகச்‌ சொன்னோமே 

அவன்‌ யாருடைய பிள்ளை?  

விடை.- அதே வம்சத்தில்‌ உதித்த துஷ்யந்தன்‌ என்ற அரசனுக்கும்‌ கண்வரது 

தபோவனத்தில்‌ வளர்ந்துகொண்டு வந்த சகுந்தலைக்கும்‌ பிறந்த பிள்ளை.  

 வினா 2.- ரிஷியினுடைய பெண்ணை க்ஷத்திரியனுக்கு எப்படி விவாஹம்‌ செய்து கொடுத்தார்‌ 

விடை.- சகுந்தலை உண்மையில்‌ ரிஷிப்‌ பெண்‌ அல்லஅவள்‌ விசுவாமித்திரர்‌ 

இராஜாவாயிருந்து பிரும்மரிஷிப்‌ பட்டம்‌ பெற தபஸ்செய்யுங்கால்‌ அவரது தபஸைக்‌ குலைக்க வந்த மேனகை என்னும்‌ அப்ஸர ஸ்திரீக்கும்‌ விசுவாமித்திர ராஜாவுக்கும்‌ 

பிறந்தவள்‌.  

 வினா 3.- இவள்‌ கண்வர்‌ ஆசிரமத்தில்‌ வளரக்‌ காரணம்‌ என்ன

 விடை... இவள்‌ பிறந்ததும்‌மேனகை இக்குழந்தையை விசுவாமித்திரரிடம்‌ கொடுக்க அதைப்‌ பார்த்தவுடன்‌ விசுவாமித்திரருக்குத்‌ தம்‌ தபஸ்‌ கெட்டுப்போனது 

ஞாபகம்‌ வந்தது. உடனே அதிக கோபத்தோடும்‌ வெட்கத்தோடும்‌ அவர்‌ 

குழந்தையைக்‌ கவனியாமல்‌ போகமேனகையும்‌ தான்‌ வந்த வழியே போயினள்‌

ஆதலால்‌ குழந்தை தனிமையாய்க்‌ காட்டில் விடப்பட்டது. கண்வமஹாரிஷிகாட்டில்‌ 

சகுந்தமென்னும்‌ பறவைகளால்‌ போஷிக்கப்பட்டு வளரும்‌ இக்குழந்தையைக்‌ 

கண்டுஅதற்குச்‌ சகுந்தலை என்று பெயரிட்டுத்‌ தமது ஆசிரமத்தில்‌ கொண்டுவந்து 

வளர்த்து வந்தார்‌

 வினா 4.- துஷ்யந்தனுக்கும்‌இவளுக்கும்‌ எப்படி விவாஹம்‌ நடந்தது? 

 விடை. - துஷ்யந்தன்‌ ஒருநாள்‌ வேட்டைக்குப்‌ போனபோதுதனது பரிவாரங்களை 

ஓரிடத்தில்‌ விட்டுவிட்டு தனியே ரிஷி ஆசிரமங்களில்‌ சென்று அங்குள்ள ரிஷிகளை 

தரிசிக்கப்‌ போனான்‌. சகுந்தலை தனிமையாய்க்‌ கண்வர்‌ ஆசிரமத்திலிருப்பதைக் 

கண்டான்‌. அவளிடமிருந்தே அவள்‌ பிறப்பு முதலியவை களைத்‌ தெரிந்துகொண்டு

அவளைக்‌ காந்தருவ விவாஹமாக அங்கேயே விவாஹம்‌ செய்து கொண்டு

இரண்டொரு நாள்‌ அங்கேயே அவளோடு இருந்துவிட்டுதன்‌ ஸேனைகளை அனுப்பி அவளை சீக்கிரத்தில்‌ இராஜ்யத்திற்கு அழைத்துக்‌ கொள்வதாகச்‌ சொல்லிப்‌ போனான்‌.  

 வினா 5.- கண்வர்‌ இதை அறிந்தவுடன்‌ என்ன சொன்னார்‌

 விடை.- 'என்னைக்‌ கேட்காமல்‌ நீ செய்தபோதிலும்‌ நீ செய்தது நல்ல காரியம்‌ தான்‌

என்று ஸந்தோஷமாய்ச்‌ சகுந்தலை செய்த காரியத்தை ஒப்புக்கொண்டார்‌

 வினா 6.- அரசன்‌ பிறகு சகுந்தலையை இராஜ்யத்திற்கு அழைத்துக்‌ கொண்டானா

 விடை.- இராஜ்யத்திற்குப்‌ போனதும்‌ தனக்கும்‌ சகுந்தலைக்கும்‌ நடந்த விஷயங்களை எல்லாம்‌ அவன்‌ மறந்துவிட்டான்‌. ஆகையால்‌ அவன்‌ ஸுமார்‌ ஏழுவருஷமட்டும்‌ 

ஒருவரையும்‌ சகுந்தலையிடம்‌ அனுப்பவில்லை

 வினா 7.- இது வரையில்‌ சகுந்தலை பொறுத்துக்கொண்டு எவ்வாறிருந்தாள்‌?

 விடை... முன்பு அரசன்‌ விட்டுப்‌ போகும்போது அவள்‌ கர்ப்பமாயிருந்தமையால்‌கொஞ்சகாலத்திற்கெல்லாம்‌ மஹாபலம்‌தேஜஸ்‌ முதலியவைகள்‌ அமைந்த ஒரு புத்திரனையடைந்தாள்‌. அவனுக்கு ஆறு வயதாகும்‌ வரையில்‌ 

அவனது விளையாட்டுக்களையும்‌அவனது பல விசேஷங்களையும்‌ பார்த்துக்கொண்டே, அரசன்‌ ஆளனுப்புவதை அவ்வளவு ஆவலோடு எதிர்‌ பார்க்காதுசீக்கிரத்தில்‌ வந்து நம்மை இராஜ ஸேவகர்கள்‌ அரசனிடம்‌ கொண்டுபோவார்கள்‌ என்று இருந்தாள்‌

 வினா 8.- இக்‌ குழந்தை என்ன என்ன விளையாட்டுகள்‌ விளையாடியது?

 விடை. - காட்டிலுள்ள மிருகங்களைப்‌ பயமின்றித்‌ துரத்துவதும்‌தைரியமாய்‌ புலி 

சிங்கம்‌ முதலிய துஷ்ட ஐந்துக்களின்‌ குட்டிகளை எடுத்துக்கொண்டு தாய்‌ மிருகங்களை அதட்டி அடிப்பதுமே இக்‌ குழந்தையினது விளையாட்டாம்‌ஆகையால்‌ இக்‌ 

குழந்தைக்கு ஸர்வதமனன்‌ என்று பெயரிட்டார்கள்‌

 வினா?.- அப்படியானால்‌ சகுந்தலை அரசனைப்‌ பார்க்காமலே தனது காலத்தை 

கழித்தாளா? 

 விடை. இல்லை. இந்த ஸர்வதமனனுக்கு ஆறு வயது ஆனதும்‌கண்வர்‌ தமது 

சிஷ்யர்களைக்‌ கூப்பிட்டு இவளைக்‌ கொண்டுபோய்‌ அரசனிடம்‌ விட்டுவிட்டு வாருங்கள்‌ என்று கட்டளையிட்டார்‌

 வினா 10.- அரசன்‌ இவளை அங்கீகரித்துக்கொண்டானா?

 விடை.- அரசனுக்கு இவள்‌ விஷயமே மறந்து போய்விட்டமை யாலும்‌ அநேக 

காலமாய்விட்டபடியாலும்‌குழந்தையைப்‌ பார்த்துங்கூட அவனுக்கு ஞாபகம்‌ 

வராததால்‌நீ என்‌ பெண்சாதியல்லவென்று மறுத்துவிட்டான்‌  

 வினா 11.- அப்பொழுது சகுந்தலை என்ன செய்தாள்‌?

 விடை.- அரசன்‌ மறுத்ததையும்‌ரிஷியின்‌ சிஷ்யர்கள்‌ தன்னைத்‌ தனிமையாய்‌ விட்டுப்‌ போனதையும்‌ கண்ட சகுந்தலைதன்னால்‌ கூடியமட்டும்‌ அரசனை ஞாபகப்‌ படுத்த

தனது பிறப்பு தனக்கும்‌ அரசனுக்கும்‌ நடந்த விஷயங்கள்‌  முதலியவைகளைச்‌ சொல்லிப் பார்த்தும்‌அரசன்‌ ஒப்புக்கொள்ளாதது கண்டுமிகுந்த 

துக்கத்தோடு திரும்பிக்‌ காட்டுக்குப்‌ போக யத்தனித்தாள்‌

 வினா 12.- அப்பொழுது என்ன விசேஷம்‌ நடந்தது?

 விடை.- உடனே ஒர்‌ அசரீரிவாக்குண்டாயிற்று. அது சகுந்தலை துஷ்யந்தனது  மனைவி 

என்றும்‌ஸர்வதமனனே அவன்‌ பிள்ளையென்றும்‌யாவரும்‌ கேட்கும்படி சொல்ல

அரசன்‌ சகுந்தலையையும்‌குமாரனையும்‌ அங்கீகரித்துக்‌ கொண்டான்‌

 வினா 13.- இந்த ஸர்வதமனன்‌ யார்‌?

 விடை.- இவனே பின்பு பரதன்‌ என்று பெயர்‌ பெற்றான்‌. இவன்‌ வெகு நீதியாய்‌ இராஜ்ய பரிபாலனம்‌ செய்து வந்தான்‌. இவனது வம்சமே பரத வம்சம்‌ என்று சொல்லப்படும்‌

 வினா 14.- இவனால்‌ தான்‌ நமது தேசத்திற்குப்‌ பாரதவருஷமென்று பெயர்‌ வந்ததோ?

 விடை.- இல்லை. ஜடபரதர்‌ என்பவர்‌ ஒருவர்‌ இராஜ்யமாளுங்கால்‌ மிகச்‌ சிறந்த 

அரசராய்‌ இருந்தமையால்‌ அவர்‌ ஆண்ட நமது தேசத்திற்குப்‌ பாரதவருஷம்‌ 

என்று பெயர்‌ வந்தது. இவரது சரித்திரத்தை ஸ்ரீமத்‌ பாகவதத்தில்‌ பஞ்சம 

ஸ்கந்தத்தில்‌ காணலாம்‌

 வினா 15.- இப்‌ பரதனுக்கு முன்‌ பிறந்த சில முக்கிய அரசர்கள் பெயர்‌ என்ன?

விடை... நகுஷன்‌அவன்‌ பிள்ளை யயாதி முதலியவர்கள்‌யயாதி பிள்ளை பூரு, யது 

முதலியவர்கள்‌. அவர்களில்‌ பூரு வம்சத்தில்‌ சில தலைமுறைக்குப்‌ பின்‌ துஷ்யந்தன்‌ தோன்றினான்‌

வினா விடை தொடரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக