திங்கள், 20 ஜூன், 2022

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை

வினா 40.- இந்த ஹோமத்தைச்‌ செய்தவர்கள்‌ யார்‌?

விடை.- அஷ்டகன்‌, பிரதர்த்தனர்‌, வஸ்மனஸ்‌, சிபி என்ற நால்வர்கள்‌. இவர்கள் யயாதினுடைய பெண்‌ வயிற்றுப்‌ பேரர்கள்‌. (இவர்களது விஷயத்தை ஆரண்ய உத்தியோக பர்வங்களில்‌ விஸ்தாரமாய்ச்‌ சொல்லப்‌ போகிறோம்‌.)

வினா 41.- இப்பேரப்‌ பிள்ளைகள்‌ அப்பொழுது என்ன செய்தார்கள்‌?

விடை.- இவர்களில்‌ ஒவ்வொருவரும்‌ தாங்கள்‌ செய்த புண்ணியபலத்தில் ஒவ்வொரு பாகம்‌ யயாதிக்கும்‌ கொடுத்தார்கள்‌. ஆனால்‌ சிபி மாத்திரம்‌ தனதுபலன்‌ முழுவதையும்‌ கொடுத்தான்‌. இப்படிக்கொடுத்த தருமத்தின்‌ பலத்தால்‌ இவ்வைவரும்‌ ஸ்வர்க்கத்திற்கு திவ்ய ரதங்களில்‌ சென்றார்கள்‌. (சிபியின்‌ மஹத்வம்‌ஆரண்யபர்வத்தில்‌ சொல்லப்‌ போகிறோம்‌. ) பின்பு யயாதி ஸ்வர்க்கத்தில் ஸெளக்கியமாய்‌ இருந்தான்‌.

வினா 42.- இந்தப்‌ பூருவுக்குப்‌ பின்‌ முக்கிய அரசன்‌ யாவன்‌?

விடை... துஷ்யந்தன்‌ இவனைப்பற்றி முன்னமேயே சொல்லியாய்விட்டது.

வினா 43.- பரதனுக்குப்‌ பின்‌ முக்கியமான அரசன்‌ யாவன்‌?

விடை- ப்ரதீபன்‌ என்ற அரசன்‌, அவன்‌ கங்கோத்தரையில்‌ சிலகாலம்‌ தபஸ் செய்து கொண்டிருந்தான்‌.

வினா 44.- அப்பொழுது என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை. -- ப்ரதீபன்‌ இவ்வாறு தபஸு செய்து கொண்டிருக்கையில்‌ கங்காதேவி ஒருநாள்‌ ஒரு யெளவன ஸ்திரீ உருக்கொண்டு அவனது வலது தொடையில்‌ வந்துஉட்கார, அரசன்‌ கங்கையை நோக்கி "என்ன காரணத்தால்‌ நீ இங்கு வந்தாய்‌?" என்று கேட்டான்‌.

வினா 45.- அதற்கு கங்கை என்ன பதில்‌ சொன்னாள்‌?

விடை... "நான்‌ உன்னை விவாஹம்‌ செய்துகொள்ள வேண்டுமென்று வந்தேன்‌" என்றாள்‌.

வினா 46.- அதற்கு அரசன்‌ என்ன மறுமொழி சொன்னான்‌?

விடை... "அந்த எண்ணத்தோடு வந்தால்‌ நீ எனது இடது தொடையில்‌ உட்கார்ந்திருக்க வேண்டும்‌. நீ உட்கார்ந்த இடத்தில்‌ பெண்ணும்‌, மருமகளும்‌ உட்காருவார்கள்‌.ஆகையால்‌ நான்‌ உன்னை விவாஹம்செய்து கொள்ளமாட்டேன்‌, ஆனால்‌ எனது பிள்ளையை உன்னை விவாஹம்‌ செய்துகொள்ளும்படி செய்கிறேன்‌," என்றான்‌.

வினா 47.- இவன்‌ பிள்ளை பெயர்‌ என்ன?

விடை. - இவன்‌ பிள்ளைக்குச்‌ சந்தனு வென்று பெயர்‌. இவனது கைபட்டவர்களுக்கெல்லாம்‌ ஸுகமுண்டானதால்‌ இவனுக்கு இப்பெயர்‌ வந்தது.

வினா 48.- தெய்வப்‌ பெண்ணாகிய கங்கை இவனை விவாஹம்‌ செய்து கொள்ள விரும்புவானேன்‌?

விடை... முன்‌ காலத்தில்‌ இக்ஷ்வாகு வம்சத்தில்‌ மஹாவிசுவன்‌ என்றொரு அரசன் இருந்தான்‌. அவன்‌ மஹா கீர்த்திமான்‌. ஒருகாலத்தில்‌ தேவதைகள்‌ யாவரும்‌பிரம்மாவைத்‌ தரிசிக்க வந்திருந்த மையத்தில்‌, அங்கே இந்த அரசனும்‌ போய்ச் சேர்ந்தான்‌. கங்காதேவியும்‌ பிரம்மாவை தரிசிக்க அங்கு வந்திருந்தாள்‌. அப்பொழுதுஅகஸ்மாத்தாய்‌ ஒரு காற்று வீசி, கங்கையின்‌ மேல்வஸ்திரத்தை ஒதுக்கவே, உடனே ஸகல தேவதைகளும்‌ பரஸ்திரீகளை இந்நிலையில்‌ பார்ப்பது பாபஹேதுவென்று தமது தலையைக்‌ குனிந்து கொண்டார்கள்‌. இந்த மஹாவிசுவன்‌ மாத்திரம் மிகுந்த ஆவலோடு கங்கையைப்பார்த்தான்‌. கங்கையும்‌ அவ்வாறே செய்தாள்‌.

இதற்காகப்‌ பிரம்மா இவனை நீ மறுஜென்ம மெடுத்தபின்புதான்‌ என்‌ உலகத்திற்கு வரவேண்டும்‌' என்று சபித்தார்‌. பிறகு கங்கையைப்பார்த்து “நீயும்‌ பூலோகத்திற்குப்‌போய்‌ மறு ஜன்மமெடுக்கவும்‌ என்று சபித்தார்‌; பரஸ்திரீகளைக்‌ கண்ணெடுத்து நோக்கல்‌ பாபம்‌ என்று நன்றாய்த்‌ தெரிந்துகொண்ட அரசன்‌, உலகத்தில்‌ ப்ரதீபனதுபிள்ளையாகிய சந்தனுவாகப்‌ பிறந்தான்‌. இந்த ஸம்பந்தம்‌ முன்னமே இருந்ததினால் சந்தனுவை கங்கை விவாஹம்‌ செய்துகொள்ள ஒப்புக்கொண்டாள்‌.

வினா 49.- சந்தனுவை கங்கை எப்பொழுது எவ்வாறு விவாஹம்‌ செய்துகொண்டாள்‌?

விடை... சந்தனு ஒருநாள்‌ வேட்டைமார்க்கமாக கங்கைக்கரையில்‌ வந்தகாலத்தில்‌, தகப்பன்‌ சொன்னபடி கங்கையைக்‌ கண்டான்‌. உடனே தனக்கு பத்னியாக வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவளும்‌ பின்வருமாறு சொன்னாள்‌. “நான்‌ உங்களைக் கணவனாக ஒப்புக்கொள்ளுகிறேன்‌. அனால்‌ நான்‌ செய்யும்‌ சில விஷயம்‌தங்களுக்குத்‌ தகாதனவாய்த்‌ தோன்றிய போதிலும்‌ என்னைத்‌ தடுக்கக்‌ கூடாது. நீங்கள்‌ சொல்லியபடி யான்‌ நடக்கக்‌ காத்திருக்கிறேன்‌. என்னைச்‌ சிலவிஷயங்களில்‌ தடுப்பீர்களானால்‌, உடனே தங்களைவிட்டுப்‌ போய்விடுவேன்‌" என்றாள்‌. இதற்கு அரசன்‌ இசைந்து அப்பெண்ணை விவாஹம்‌ செய்துகொண்டான்‌.

வினா 50.. அப்படித்‌ தகாதனவாய்த்‌ தோன்றும்படியாக என்ன காரியங்கள்‌ இப்பெண் செய்துகொண்டு வந்தாள்‌?

விடை.- ஸகல விதத்திலும்‌ அரசனுக்கு விதத்திலும்‌ அரசனுக்கு ஹிதத்தையே இவள்‌ செய்துகொண்டு வந்தாள்‌. ஆயினும்‌, அவளிடத்தில்‌ பிறக்கும்‌ பிள்ளைகளைமாத்திரம்‌ உடனே அவள்‌ கங்காநதியில்‌ தூக்கி எறிந்துகொண்டு வந்தாள்‌. இந்தக் கொடிய காரியத்தை மாத்திரம்‌ இப்பெண்‌ தவறாது செய்துவந்தாள்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக