புதன், 17 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்

சுலோக‌ம் 8


சுலோகம் 8
कदाचिदपि रङ्गभूरसिक ! यत्र देशे वशी
       त्वदेकनियताशय: त्रिदशवन्दितो वर्तते |
ततक्षत तपोवनं तव च राजधानी स्थिरा
       सुखस्य सुखमास्पदं सुचरितस्य दुर्गं महत् ||
கதாசிதபி ரங்கபூரஸிக ! யத்ர தேஶே வஶீ
        
த்வதேகநியதாஶய: த்ரிதஶவந்திதோ வர்த்ததே |
ததக்ஷத தபோவநம் தவ ராஜதாநீ ஸ்திரா
        
ஸுகஸ்ய ஸுகமாஸ்பதம் ஸுசரிதஸ்ய துர்கம் மஹத் ||

ர‌ங்க‌பூர‌ஸிக‌ --ஸ்ரீர‌ங்க‌த்தில் வ‌ஸிப்ப‌வ‌ரே!, வ‌ஶீ - இந்திரிய‌ங்க‌ளை வ‌ச‌ப்ப‌டுத்திய‌ வ‌ரும், த்வ‌தேக‌ -நிய‌த‌ - ஆஶ‌ய‌ -- (தொண்ட‌ர‌டிப்பொடிக‌ள்போல‌) உம்மிட‌த்திலேயே நிலைநிறுத்திய‌ ப‌க்தியை யுடைய‌வ‌ரும், த்ரித‌ஶ‌ வ‌ந்தித‌ -- தேவ‌ர்க‌ளால் ந‌ம‌ஸ்க‌ரிக்க‌ப் ப‌டுப‌வ‌ருமான‌ (பெரிய‌வ‌ர்), ய‌த்ர‌ தேஶே -- எந்த‌ தேச‌த்தில், க‌தாசித‌பி -- ஒரு பொழுதாவ‌து, வ‌ர்த்ததே -- இருக்கிறாரோ, தத் -- அது, அக்ஷ‌த‌ -- இடையூறில்லாத‌, த‌போவ‌ந‌ம் -- த‌போவ‌ந‌ம், த‌வ‌ ச‌ -- உம‌க்கும், ஸ்திரா -- ஸ்திர‌மான‌, ராஜ‌தாநீ -- ந‌க‌ர‌ம், ஸுக‌ஸ்ய‌ (ச‌) -- ஸுக‌த்திற்கும், ஸுக‌ம் -- ஸுக‌மான‌, ஆஸ்ப‌த‌ம் -- இட‌ம், ஸுச‌ரித‌ஸ்ய‌ -- ந‌ல்லொழுக்க‌த்திற்கும், ம‌ஹ‌த் -- பெரிய‌, துர்க‌ம் -- அர‌ண் (கோட்டை)
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி
அரங்கத்தில் அன்புடனே அணைந்துறையும் பெருமானே!
அலைபாயும் புலன்களினை அடக்கியாளும் திறமுடைத்துன்
ஒருவனையே மனம்வைத்து ஒழுகுவதால் தேவர்களும்
ஒன்றுகூடி போற்றுகிற உத்தமமாம் உயர்வுடையோன்
ஒருபொழுதே வாழ்ந்திட்ட ஓரிடமே தடையின்றி
உயர்தவத்தைப் புரிவதற்கு உறுமிடமாம்! உன்னுடைய
உறுதியான தலைநகராம்! ஒப்பற்ற சுகத்தலமாம்!
உற்றபெரும் நல்வினைக்கோர் உரியபெரும் அரணாமே! 8.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         ய‌ம‌வ‌ச்ய‌தையில்லாம‌லே ந‌ர‌காநுப‌வ‌ம் வ‌ருகிற‌தே என்று காட்டி, நீர் இப்ப‌டி சாஸ்த்ர‌ ம‌ரியாதையைக் குலைக்க‌லாமோ என்று த்வ‌னிக்கும்ப‌டி முன் சுலோக‌த்தில் பேசினார். உம்மிட‌ம் பார‌மைகாந்த்ய‌முடைய‌ ஒரு ப‌க்த‌ர் ஏதோ ஒரு கால‌த்தில் ஒரு தேச‌த்திலிருந்தால் அந்த‌ தேச‌ம் ப‌க‌வானுக்கு ஸ்திர‌மான‌ ராஜ‌தானியாகும். த‌வ‌ம் செய்வ‌த‌ற்கு இடையூறில்லாத‌ த‌போவ‌ன‌மாகும். ந‌ல்லொழுக்க‌த்திற்கு அழிவ‌ற்ற‌ கோட்டையாகும் என்ப‌ரே. தொண்ட‌ர‌டிப் பொடிக‌ளிலும் உம்மிட‌ம் பார‌மைகாந்த்ய‌ முடைய‌வ‌ருண்டோ? अत्रैव श्रीरङ्गे सुखमास्स्व (அத்ரைவ‌ ஸ்ரீர‌ங்கே ஸுக‌ம் ஆஸ்ஸ்வ‌) என்ற‌ல்ல‌வோ இத்த‌கைய‌ வ‌டியார்க‌ளுக்கு உம்முடைய‌ ஆக்ஞை! "அச்சுவை பெறினும் வேண்டேன் அர‌ங்க‌மாந‌க‌ருளானே" என்று ப‌ர‌மப‌தத்து வைகுண்ட‌நாத‌னையும் ஒதுக்கி உம்மிட‌ம் நிய‌தாஶ‌ய‌ராய் இருந்த‌ன‌ர். "இங்கே ஸ்ரீர‌ங்க‌த்தில் ஸுக‌மாயிரு" என்று எங்க‌ளுக்குக் க‌ட்ட‌ளையிட்டுவிட்டு, நீர் இவ்விட‌மிருந்து வெளியேறுவ‌து த‌குதியோ? பெரிய‌ பெருமாள் ஓரிட‌மும் நீர் ஓரிட‌முமானால், எங்க‌ளுக்கு ஸ்ரீர‌ங்க‌த்தில் ஸுக‌மான‌ இருப்பு எப்ப‌டி ஏற்ப‌டும்?
         ர‌ங்க‌பூ ர‌ஸிக‌ -- பாற்க‌ட‌ல், ஸூர்ய‌ ம‌ண்ட‌ல‌ம், வைகுண்ட‌ம் எல்லாவ‌ற்றைக் காட்டிலும் உம‌க்கு ஸ்ரீர‌ங்க‌த்திலே (ர‌தி) இன்ப‌ம் இருக்கிற‌து. रतिं गतो यतस्तस्मात् "ர‌திம் க‌தோ ய‌த‌ஸ்த‌ஸ்மாத்" என்று ரிஷிக‌ள் பொருள் கூறினார்க‌ள். அர‌ங்க‌த்தில் அர‌ங்க‌னாகிய‌ நீர் ஸ‌பாநாய‌க‌ராக‌ வீற்றிருந்து காவ்ய‌ங்க‌ளை ர‌ஸித்து அர‌ங்கேற்றுவ‌து, रङ्गास्थाने रसिकमहिते रञ्ज्चिताशेषचित्ते (ர‌ங்காஸ்தாநே ர‌ஸிக‌ம‌ஹிதே ர‌ஞ்ஜிதாஶேஷ‌சித்தே).
         ர‌ங்க‌பூர‌ஸிக‌ -- ர‌ங்க‌பூமிக்கும் ர‌ங்க‌ந‌க‌ர‌வாஸிக‌ளுக்கும் உம்மிட‌ம் ர‌ஸ‌மிருப்ப‌து போல‌, உம‌க்கும் அவ‌ர்க‌ளிட‌ம் ர‌ஸ‌ம். இப்ப‌டிப் ப‌ர‌ஸ்ப‌ர‌ ர‌ஸ‌மிருப்ப‌தால் ர‌ஸ‌பூர்த்தி. ப்ர‌ஹ்மா வினால் ஸ‌த்ய‌ லோக‌த்தில் சில‌கால‌ம் ஆராதிக்க‌ப்ப‌ட்டு, அதை விட்டு அயோத்தி வ‌ந்தீர். அங்கு நீண்ட‌ கால‌மிருந்து அதை விட்டு ஸ்ரீர‌ங்க‌த்திற்கு எழுந்த‌ருளினீர். இனி ஓரிட‌மும் போக‌மாட்டீராத‌லால் இங்கே உம‌க்கு நிர‌திச‌ய‌ப்ரீதி என்று பாதுகா ஸ‌ஹ‌ஸ்ர‌த்தில் உம் பாதுகை என்னையிட்டுப் பாடுவித்தது. सत्याल्लोकात् परममहितात् स्थानतो वा रघूणां -- ஸ‌த்யால்லோகாத் ப‌ர‌மம‌ஹிதாத் ஸ்தாநதோ வா ர‌கூணாம் -- என்று கூறின‌து பொய்யாக‌லாமோ?
         ய‌த்ர‌ தேஶே -- எந்த‌ தேச‌த்தில், "ய‌த்ர‌" என்று ம‌ட்டும் ப்ர‌யோகித்தார். "ய‌த்ரைகாந்த்ய‌" என்ற‌ ஸ்தாந‌ விசேஷாதிகார‌ சுலோக‌த்தில்.
         வ‌ஶீ -- "இந்த்ரிய‌ங்க‌ளை எல்லாம் அட‌க்கின‌வ‌ர் எங்கே எங்கே வ‌ஸிக்கிறாரோ, அங்க‌ங்கே குருக்ஷேத்ர‌மும் நைமிச‌மும் புஷ்க‌ர‌முமுள‌" என்ற‌ சுலோக‌ம் ஸ்தாந‌ விசேஷாதி கார‌த்தில் எடுத்துக் காட்ட‌ப்ப‌ட்ட‌து.
         த்வ‌த‌தேக‌நிய‌தாஶ‌ய‌ -- ऐकान्त्यव्यवसितधिय -- ஐகாந்த்ய‌ வ்ய‌வ‌ஸித‌ திய‌ -- என்று அதிகார‌ ச்லோக‌ம்.
         க‌தாசித‌பி -- यस्य कस्यापि लाभ -- ய‌ஸ்ய‌ க‌ஸ்யாபி லாப‌ -- என்று அங்கு இர‌ண்டிட‌த்திலும் இர‌ண்டையும் अपि   அபி என்ப‌தைக் கொண்டு சேர்த்துக் கொள்ள‌ வேணும்.
         த்ரித‌ஶ‌வ‌ந்திதோ வ‌ர்த்ததே -- தேவ‌ர்க‌ள் இவ‌ருக்குப் ப‌லி ஸ‌ம‌ர்ப்பித்துப் பூஜிக்கிறார்க‌ள். तस्मै देवा बलिमावहन्ति த‌ஸ்மை தேவா ப‌லிமா வ‌ஹ‌ந்தி . "நித்ய‌ஸூரிக‌ளும் கோயிலில் வாஸ‌த்தைத் தேடி ம‌னுஷ்ய‌ர்க‌ளோடும் திர்ய‌க்குக‌ளோடும் சேர்ந்து தொழுகிறார்க‌ள்" என்று ப‌ட்ட‌ர் ஸாதித்தார். ப‌ர‌மைகாந்திக‌ளும், அவ‌ர்க‌ளைப் பூஜிக்க‌வும் உம்மை ஸேவிக்க‌வும் வ‌ரும் நித்ய‌ஸூரிக‌ளும் ஏமாறும்ப‌டி செய்ய‌லாமோ? "த்ரித‌ச‌வ‌ந்தித‌ராக‌ இருக்கிறார் " என்ப‌தால் அவ‌ர்க‌ளோடு தேவ‌ர்க‌ளும் வ‌ஸிக்கிறார்க‌ள் என்று காட்ட‌ப்ப‌டுகிற‌து. "த‌ஸ்மை தேவா ப‌லிமாவ‌ஹ‌ந்தி" பெருமாளை அவ‌ர்க‌ள் ஸேவிக்க‌ வ‌ருவ‌து ராக‌ப்ராப்த‌ம். இவ‌ர்க‌ளை வ‌ந்த‌ன‌ம் செய்து ப‌லி ஸ‌ம‌ர்ப்பிப்ப‌து வைத‌ம், சுருதி விதித்த‌ ஆக்ஞா கைங்க‌ர்ய‌ம்.
         ஸா ச‌ ராஜ‌தாநீ ஸ்திரா -- விதேய‌ம் முக்கிய‌மான‌தால் அதை அநுஸ‌ரித்து "ஸா" என்று ஸ்திரீலிங்க‌ம் உப‌யோகிக்க‌ப் ப‌டுகிற‌து. ராஜ‌தானிக்கே ஆப‌த்துக்க‌ள் அதிக‌ம். ச‌த்ருக்க‌ள் ப‌ல‌ர் இருப்பார்க‌ள். யுத்த‌மும் முற்றுகையும் வ‌ந்து கொண்டேயிருக்கும். ப‌ர‌மைகாந்தி வ‌ஸித்த‌ அல்ல‌து வ‌ஸிக்கும் ர‌ங்க‌ராஜ‌தாநீ ஸ்திர‌மாயிருக்க‌ வேண்டும். ராஜா வ‌ஸிக்கும் இட‌ம் ராஜ‌தாநியாகையால், ந‌ம்பெருமாள் வேறொரிட‌த்தில் இருந்தால் அதுவும் ராஜ‌தாநியாகிலும், அது ர‌ங்க‌ராஜ‌தானி யாகாத‌ல்ல‌வா?
         ஸுக‌ஸ்ய‌ ஸுக‌மாஸ்ப‌த‌ம் -- ஸுக‌மென்ப‌த‌ற்கே இது ஸுக‌மான‌ இருப்பிட‌ம். ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் ஸுக‌மும் இத்த‌னை ஸுக‌மாக‌ இருக்காது.
         ஸுச‌ரித‌ஸ்ய‌ துர்க‌ம் ம‌ஹ‌த் -- த‌ர்மம் உல‌க‌த்தைக் காக்கும் என்ப‌ர். த‌ர்ம‌த்திற்குப் ப‌ர‌மைகாந்தி வ‌ஸிக்கும் க்ஷேத்ர‌ம்தான் பெரிய‌ அர‌ண். இத்த‌னைக்கும் ஹாநி வ‌ர‌லாமோ? (8) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக