சனி, 24 மார்ச், 2012

வைத்தமாநிதி 22

நவநீத சோரம் முதலிய பால்ய லீலா வினோதங்கள்

.

“  தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள், உறிமேலைத் தடா நிறைந்த வெள்ளிமலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிவிட்டு கள்வன் உறங்குகின்றான், வந்து காண்மின்கள்; கை எல்லாம் நெய், வயிறு பிள்ளை பரம் இன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும், பேதையேன் என் செய்கேன் என் செய்கேனோ”

   “இந்நம்பி, பொய்ந்நம்பி, புள்ளுவன், கள்வன் பொதிஅறை, இந் நம்பியால் ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை, தந்தை புகுந்திலன். நான் இங்கு இருந்திலேன், தோழிமார் ஆரும் இல்லை; சந்தமலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி, பந்து பறித்து,துகில் பற்றிக்கீறி, படிறன் படிறு செய்யும் நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்; கெண்டை ஒண்கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்துத் தயிர் கடையக் கண்டு, ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை, விழித்துப் புக்கு, வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ, வாள்முகம் வேர்ப்ப, செவ்வாய் துடிப்ப, தண் தயிர் கடைந்து, தோய்த்த, தயிரும் நறுநெய்யும் பாலும் ஓர் குடம் துற்றிட்டான்”  என்று ஆய்ச்சியர் கூடி வயிறு அடித்து உரப்ப இவையும் சிலவே.

     ஆய்ச்சியர் பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பகர அசோதையும் இதற்கு எள்கி, தன் மகனை “வருக, வருக, வருக இங்கே, கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் அஞ்சனவண்ணா, அசலகத்தார் பரிபவம் பேசத் தரிக்ககில்லேன், பாவியேனுக்கு இங்கே போதராயே! கொண்டல்வண்ணா இங்கே போதராயே, கோதுகலம் உடை குட்டனேயோ! ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச கேட்கமாட்டேன், போதர் கண்டாய், போதரேன் என்னாதே போதர் கண்டாய், நேசம் இலாதார் அகத்தே இருந்து நீ விளையாடாதே! திருவில் பொலிந்த எழில்ஆர் ஆயர்தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ, கில்லேன் என்னாதே இங்கே போதராயே! தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று தாமோதரா இங்கே போதராயே! தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்! பிறர் மக்களை மையன்மை செய்து தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய், கேளார் ஆயர்குலத்தவர் இப்பழி, தன்னேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவாய், கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத்தயிர் சாய்த்துப் பருகினாய் பொய்யா! உன்னை புறம்பல பேசுவ, புத்தகத்துக்கு உள கேட்டேன், முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கியப்பால் ஆயர்கள் காவிற்கொணர்ந்த கலத்தோடு சாய்த்துப் பருகி, மெய்ப்பால் உண்டு அழுபிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்றாய், காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா! ஒத்தார்க்கு ஒத்தனவே அவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன், தம்பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தான்செய்வரோ! நந்தன் காளாய், அத்தா, உன்னை அறிந்துகொண்டேன், உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே, ஆரா இன்னமுது உண்ணத் தருவன் அம்மம் தாரேன்; நான் என்செய்கேன், பேய்ச்சி முலை உண்ட பிள்ளை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவன் சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய், மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம், அதனால் பிறர் மக்கள் தம்மை ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று இரப்பன்'; உரப்பகில்லேன்; நானும் உரைத்திலன், நந்தன் பணித்திலன், நங்கைகாள் நான் என்செய்கேன், தானும் ஒர் கன்னியும் கீழை அகத்துத் தயிர் கடைகின்றான்போலும், அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு; ஆண்மையும் சேவுகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன்” என்று அன்னநடை மடவாள் அசோதையும், மங்கைநல்லார்கள் தாம் வந்து முறைப்பட அங்கு கழறினாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக