வெள்ளி, 23 மார்ச், 2012

வைத்தமாநிதி 19

உரலில் கட்டுண்டு மருதமரம் வீழ்த்தியது

ஆங்கு ஒருநாள்,
ஆய்ப்பாடி சீர்ஆர் கலை அல்குல் சீர்அடி
செந்துவர்வாய் வார்ஆர் வனமுலையாள்,
மத்து ஆரப் பற்றிக்கொண்டு,
ஏர்ஆர் இடை நோவ, எத்தனையோ போதும் ஆய்,
சீர்ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர்ஆர் நுதல் மடவாள் வேறுஓர் கலத்து இட்டு,
நார்ஆர் உறி ஏற்றி நன்கு அமையவைத்ததனைப்
போர்ஆர் வேல்கண் மடவாள் யசோதை போந்தனையும்,
வளர்க்கின்ற செய்த்தலை நீலநிறத்துச் சிறுபிள்ளை
பொய் உறக்கம் ஓராதவன்போல் உறங்கி,,அறிவு உற்று,
தார்ஆர் தடம்தோள்கள் உள்அளவும் கைநீட்டி,
ஆராத வெண்ணெய் விழுங்கி, அருகு இருந்த மோர்ஆர் குடம் உருட்டி,
முன்கிடந்த தானத்தே ஓராதவன்போல் கிடந்தானைக் கண்டு,
அவளும் வாராத்தான் வைத்தது காணாள்; வயிறு அடித்து,
”இங்கு ஆர்ஆர் புகுவார் ஐயர் இவர் அல்லால்,
நீர்ஆர் இது செய்தீர்?” என்று தாம் மோதிரக்கையால் ஆர்த்து
ஓர் நெடுங்கயிற்றால் ஊரார்கள் எல்லாரும் காண,
உரலோடே தீராவெகுளியள்ஆய், சிக்கென ஆர்த்து அடிப்ப,
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்,
துள்ளித் துடிக்கத் துடிக்க, அன்று
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் ஆப்புண்டு,
”இவன் வெண்ணெய் உண்டான்” என்று
ஆய்ச்சியர் கூடி இழிப்ப, ஏதலர் நகை செய்ய,
விம்மி அழுது, குரல் ஓவாது ஏங்கி நினைந்து
அயலார் காண இருந்தான்.
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு பாடும் மாயன்,
உரலினோடு ஆப்புண்டு இணைந்திருந்த எளியோன்,
தாமோதரன் உரலோடும் ஓடி, அடல்சேர் வலிமிக்க
கால்ஆர் இணை மருதுஊடு நடந்திட்டு,
தறிஆர்ந்த கருங்களிறேபோல் நின்று,
நடையால் நின்ற மருதமரம் சாய்த்து,
எண்திசையோரும் இமையவரும் வணங்கி ஏத்த
பொய்ம்மாய மருதுஆன அசுரரைப் பொன்றுவித்து
திருவில் பொலிந்த வழுஇல் கொடையான்
வயிச்சிரவணன் புதல்வர் சாபம் நீக்கினான்
செந்தாமரைக்கண்ணன்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக