செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

Yet another great day at Therazhundur Ashramam.

இன்று உலகெலாம் கொண்டாடும் திருவாடிப் பூர நன்னாள். ஆண்டாளின் திருவவதாரத் திருநாள். அதே நாளில் தேரழுந்தூர் ஆமருவியப்பன் தீர்த்தவாரி உத்ஸவம் கண்டருளிய திருநாளாயும் அமைந்தது. அது நமது ஆச்ரமத்திற்கு ஒரு ஆநந்தத் திருநாளாயும் அமைந்து சிறந்தது.

காலை திருவீதிப் புறப்பாடு கண்டருளி, ஆமருவியப்பன் ஆண்டாளுடன் தீர்த்தவாரி உத்ஸவம் கண்டருள கஜேந்திர புஷ்கரிணி எழுந்தருளினார். அவருக்கு அந்த கஜேந்திர புஷ்கரிணி கரையில் அமைந்திருக்கும் நம் ஆண்டவன் ஆச்ரம வாயிலில் நம் ஆச்ரம ப்ரதான ஆராதகர் ஸ்ரீ உ.வே. கிருஷ்ணமூர்த்தி ஸ்வாமி பூர்ண கும்ப மரியாதைகள் சமர்ப்பித்து வரவேற்றார்.

139

130

131

133

ஸ்ரீமத் ஆண்டவனுக்குப் பெருமாள் மரியாதைகள் செய்யப் பட்டன.

134

135

136

137

அதன்பின் ஆலயத்தார் ஆமருவியப்பனையும், ஆண்டாளையும் நம் ஆச்ரம முகப்பிலேயே எழுந்தருளப் பண்ணினர்.

152

ஸ்ரீமத் ஆண்டவனும் தன் கண் பனி சோர திவ்ய தம்பதிகளை அணு அணுவாய் ஸேவித்து மகிழ்ந்தாயிற்று.

140

141

திவ்ய தம்பதிகளின் திருமேனி லாவண்யங்களையும் எடுத்துச் சொல்லி கூட இருந்தோரையும் அந்த அழகிலே ஈடுபட வைத்தாயிற்று.

142

143144145

தீர்த்தவாரி காண்பதற்காக செல்வர் அங்கு எழுந்தருளினார்.

146

149

அதன் பின் பெருமாளுக்கும், செல்வருக்கும் திருவாராதனங்கள் நடந்து செல்வருக்குத் திருமஞ்சனங்கள் நடைபெற்று செல்வர் தீர்த்தவாரி கண்டருளினார்.

151152

ஆச்ரமம் சிறக்க வந்த தேரழுந்தூர் ஆண்டவன், மோக்ஷ சாம்ராஜ்யத்தில் இன்று மிக மிக மனம் மகிழும் வகையில் அவர் பெருமை போற்ற அமைத்த ஆச்ரமத்தில் பெருமாளும் தாயாரும் எழுந்தருளிய சந்தோஷம்!

ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம திருவாராதனத்தில் இருந்த உயர்ந்த , பெரிய பாஞ்சஜன்யத்தை ஆமருவியப்பன் செங்கமலவல்லித் தாயாருக்கு சமர்ப்பித்து உள்ளம் பூரித்தாயிற்று.

153

தீர்த்தவாரி காட்சிகள் மற்றும் திருமஞ்சன வீடியோக்களை அடுத்த பதிவில் இடுவேன்.

படங்களை ஆல்பமாகப் பார்த்து மகிழ

 

1 கருத்து:

  1. adiyen geetha desikan from Chennai

    Neril sella mudiyavillai endra thapam therrthathu ashramathil acharyanudan amaruviappaninarbhuthamana sevai eppadi solluvathu engal krithangaiai
    dasn
    geethadesikan

    பதிலளிநீக்கு