எப்போ பார்த்தாலும் பெருமாள் இல்லைன்னா பழைய தமிழ் புத்தகம் காபி இதுதானே உன் ப்ளாக்கில் இருக்கிறது! என்னைப் போன்ற 65 வயது இளையர்களுக்குப் பிடித்த மாதிரி எதுவும் எழுதக்கூடாதா? என அடியேனுக்கு முன் அமர்ந்திருந்த பெரியவர் கேட்டார். சரி! ஏதேனும் போடுகிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டேன். நினைவுக்கு வந்தவர் நடிகர் வடிவேலு. ஏதேனும் சொல்லிவிட்டு மாட்டிக் கொள்வாரில்லையா அதுபோல நம் கதை ஆயிற்றே என்ற திகைப்பால் அவர் நினைவு வந்தது. அவரைப் பற்றி நினைவுக்கு வந்ததும், சினிமாவில்தான் எசகுபிசகாக ஏதேனும் செய்து அடி வாங்குவார், இப்போது நிஜத்திலும் அப்படி ஆகி விட்டதே என நினேத்துக் கொண்டே இணையத்தில் நுழைந்தேன். யாரோ ஒரு மகானுபாவர் எனக்காகவே இட்ட மாதிரி "மின்தமிழ்" குழுமத்தில் இந்த வீடியோவை இட்டிருந்தார். அப்பாடி வழக்கம்போல் காபி அடிக்க தோதாகிவிட்டது என மகிழ்ந்து இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். வீடியோவைப் பாருங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக