திங்கள், 9 மே, 2011

உடையவருக்கு ஒரு தாலாட்டு

அடியேன் மிக விரும்பித் தொடரும் ஒரு வலைப்பூ "மாதவிப் பந்தல்". அறிய வேண்டிய சம்பிரதாய விஷயங்களை இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் சொல்வதில் வல்லவர் அதன் ஆசிரியர் திரு கே.ஆர்.எஸ். அவர் தளத்திலிருந்து உடையவருக்கு ஒரு தாலாட்டு
மன்னுபுகழ் காந்தி மதி, மணி வயிறு வாய்த்தவனே
தென் பொருநல் மாறனடி, சேர்ப்பித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன்மா மதில்புடை சூழ் அரங்கநகர்க்கு அதிபதியே
என்னுடைய இன்னமுதே இராமனுசா தாலேலோ!

தாலே தாலேலோ, உன் முப்புரிநூல் தாலேலோ!
தாலே தாலேலோ, உன் முக்கோலும் தாலேலோ!
தாலே தாலேலோ, உன் முறுவல்நிலா தாலேலோ!
தாலே தாலேலோ, கண்வளராய் தாலேலோ!

உறங்காதே சக்கரமே, உடனிருந்து காத்திடுவாய்!
உறங்காதே வெண்சங்கே, பால்கொடுத்து ஊட்டிடுவாய்!
உறங்காதே கோபுரமே, குளிராமல் போர்த்திடுவாய்!
உறங்காதே காவேரீ, கால்வருடி விட்டிடுவாய்!

சங்கரனும் ராகவனும் சடுதியில் ஓடிவந்தோம்!
தங்கையவள் கோதையுடன் தமிழோதி ஓடிவந்தோம்!
திங்களொளி ராத்திரியில் தாலாட்ட ஓடிவந்தோம்
பங்கயத்தின் சிவப்பழகே பதறாமல் கண்ணுறங்கு!

கண்ணுறங்கு கண்ணுறங்கு, இலட்சுமணா கண்ணுறங்கு!
கண்ணுறங்கு கண்ணுறங்கு, இராமனுஜா கண்ணுறங்கு!
நீயுறங்கு நீயுறங்கு, நிர்மலனே நீயுறங்கு!
நானுறங்கு நானுறங்கு, நானிலமும் தானுறங்கு!

ஆரீ-ராரீ-ரோஓஓஓஓஓஓ!

முழுவதும் படிக்க, அந்த த் தாலாட்டை இசையுடன் கேட்க
http://madhavipanthal.blogspot.com/2011/05/bharatidasan-ramanujar.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக