புதன், 8 ஜூலை, 2009

திருப்பாதுகமாலை

17. செம்மணிப்பத்தி

581. தளிரணி யரங்காமல் தாள தேயிலங்

கொளுநல மாமலர்க் கோயி லாளெனக்

களிமிகு பதுமரா கங்க ளோங்குசீர்

வளரரு ளவன்பதா வனிவ ணங்குவன். 1

582. மதிமொழி கடந்தமன் னரங்க மாதவன்

பதுமமென் பூங்கழல் பவனி பூக்குமப்

பதமணி பாது முன் பதும ராகமின்

மதுவிரி மஞ்சரி வதிப ரப்புவாய். 2

583. அழகன தங்கிரி யடிக்கி ளர்ந்தநின்

தழையொளி மாமணி தான்வி டுஞ்சுடர்

தழலொரு போதவன் தங்கு வானெனும்

பழமொழி யுண்மையைப் பாது ணர்த்துமே. 3

584. பணியணை யரங்கமால் பாது னாதுசெம்

மணியொளி பிறங்கவன் குறங்கு மாட்டிடும்

கணமது கைடவர் கறையு றைந்துதாட்

குணநளி புலர்ந்தசெங் குங்கு மம்படும். 4

585. படரொளி பரந்தநின் பதும ராகநீர்

அடிநிலை! யுனைச்சர ணடைந்த நல்லவர்

கடுவினை வெறிச்சிரங் கடிந்த தன்னவே

வருபொழி குருதியின் வாரி யோர்வரே.. 5

586. பணை நகை பூக்குமான் மதனெரிக்கொழுந்

திணையென மாமணிக் கிளரி ராகமே

றணிதிரு வரங்கனா ரடிநி லாயுனை

மணிநகர் மான்விழி மாதர் நோக்குவர். 6

587. விரிநெடு தோடவாய் வீய மூள்தமம்

நெரிதர நாறுபூ நேய மேத்திடத்

தெரிநல மாமணிக் கேழ்தெ ளித்தலில்

அரிமணி யுதிக்குமுற் சந்தி பாது! நீ. 7

588. அடிநிலை! யாதியெம் மமுத ரங்கமால்

அடிமலர் விரிப்பெனப் பரப்புன் மாமணிச்

சுடரவை யெம்மிடர்ச் சோக நீரினைச்

சுடுமுட னூழிவாய்ச் சோதி யென்னவே. 8

589. தெரியிளங் கதிரவன் தேநி றந்தரும்

விரிவளச் செம்மணி வெயில்வி ளங்கலில்

இருமணிப் பாதுனே ரினிய மாலியில்

திருமலர்ப் பதநெடி திராக மேறுமே. 9

590. திருவுட னகிலமும் நிலைபெ றுத்திடும்

அருணிறை மாதவன் கீர்த்தி யாழியில்

பரவளி பாது! நின் பதும ராகமே

தருமொரு துகிரெனத் தானொ ராதவம். 10

591. நரவரி நறுங்கழ னள்ளொ ளிர்வரி

யுருவுடை நேமியின் சுடர்கி ளர்ந்தெனத்

தருமணி யரங்கன்செந் தாது பாது நின்

விரிகதி பாடல மணிவி ளங்குமே. 11

592. படரரி பதத்தெழு பகலொ ளித்திரள்

சுடர்தலி னாளுமுன் சோண மாமணி

அடிநிலை! யரங்கநா யகன டித்தலத்

தொடுவரி மாமல ரொடுங்க லற்றதே. 12

593. தனதரு ணோக்குமின் னயன மன்னுவோர்க்

கனுதின நவநவ நன்மை நல்கவே

இனிதமர் பதுமரா கத்தி மைத்தலில்

தனிநல மங்கலத் தேவு பாது! நீ. 13

594. அளிமன மகிழ்கொள் வரங்க நாயகன்

துளிரிள வடிக்குனைப் பாது ணர்த்திமுன்

வளமலி விடியலம் புயவ ரும்பெனக்

கிளர்துவர் மணியொளி தெளித்தி லங்குவாய். 14

595. உயர்த்தரு மறைப்பொரு ளுணர்ந்த மாதவர்

உயத்தம தகச்சவி யுயிர விப்பொருள்

இயைத்தரு மறையுட னிடப்பெ ருஞ்சுடர்

மயத்தெழு முனதுசெம் மணிக்கள் பாதுகாய்!. 15

596. பரஞ்சுடர் பதாவனி! பவனி போகமுன்

பரிந்துன துவர்மணி பயண மங்கலம்

புரிந்தென சுடரிலா வுதிக ளுந்துபால்

சுரநதவ னகச்சவி சொரிந்த போலுமே. 16

597. திருமக ணாயகன் சேம மல்குதாள்

திருமலர் மின்னகம் பாதுன் செம்மணி

பரவொளி படிந்தசெம் பஞ்சி லந்திவான்

தெரியிளம் பசுங்கதிர்ச் சீரி மைக்குமே. 17

598. அடிநிலை! சுடர்மிகுன் சோதி மாமணி

கடிதலெ னுளத்தமஞ் சால வேலுமால்

கடிதினி னொளிரிரா கத்தி லிரசமும்

மடிதலி தென்னவுன் னீதி மாயமே!. 18

599. பொதுளனி பதுமமா கரம்பு ரந்தமால்

பதமல ரொழுகுதீம் பிரச மாந்தியே

சதிரிளஞ் சோணமா மணியி ராகநேர்

கதிர்தரு சோதிநீ கண்ணன் பாதுகாய்!. 19

600. விரிதிரை யிரியநீள் திரித ருங்கலி

அரியம ரரங்கமொன் றணுகி டாதுநின்

விரியொளி யரத்தமா மணியெ ரிக்கிடங்

கரிபத நிலை! வளைந் ததற்க மைக்குமே. 20

601. அரியளி கேளிமல் கில்ல மாடுகால்

தருநறு மஞ்சுசெஞ் சாந்த ரக்கென

அரிபத நிலையுன்செம் மணிக்க ரத்தவன்

இருபத மலரினுக் கிராக மூட்டுவாய். 21

602. வளையரி மாநகர் வலம்வ ரப்புரர்

தெளிமலர் பாது! நின் தேறு செம்மணி

ஒளிதனி லுந்துசெவ் வந்தி வானிடைத்

தளிருடு மொய்யெழில் தந்தி லங்குமே. 22

603. மரவடி! யுனதுமா ணிக்க மிக்கமின்

குருமுடி கவித்தபூங் கங்கை பொங்கலை

விரியணி சடையன்சே கரத்து ருத்திரை

யிருபத வரக்கிளஞ் சேறு தேறுமே. 23

604. கேசவன் பதமலர்ச் செம்மை பொம்மமேல்

வீசடி நிலை! யுன்மா ணிக்க நீள்கதிர்

ஆசினி யிளங்கிளர் மணியி னாயிரத்

தேசுறு மடியவர் பிறப்பி ராவற. 24

605. பதநிலை! விஞ்சநீ கிஞ்சு கச்சவி

பதியொளி ருன்மணிப் பணிந்த பண்பினிற்

கதிரொளி கிளர்ந்தசெங் களம மஞ்சரிக்

கதிரெதிர் செஞ்சடைக் காந்தி யேந்துவன். 25

606. பரிவள நீரிடைப் பதம லர்த்தடை

வரிநடை யாடலுக் காட நீயெதிர்

மருவினை யுனதுசெம் மணிப தாவனி!

தரைமிசை வரையறை தவிர்த்த லர்த்துமே. 26

607. பதநிலை! நினதுமா ணிக்க ராகமே

றிதமதி நிலைமனர்க் கிராக நல்கிடுங்

கதிருட னெடுத்தலிற் கடுங்க ரில்கடாம்

விதிமுடி பதங்கமாய் வீங்கி நீறுமே. 27

608. மறைமகிழ் மணமடி நிலை!க மழ்தலில்

இறையிணை யடிமல ரினித வீழ்த்தலில்

செறியக விருளறக் செகுத்த லில்லொளி

நிறையுன துவர்மணிச் செம்மை யேலுமே. 28

609. கீதநா வரர்கண் மங்கை யிதழிற்செம் பஞ்சு வாயிற்

போதாமா மதத்தி ராகம் புனைசெவி தனில லங்கல்

கோதிலா வணக்க வுச்சி வகிரினேர் திலக மோதும்

பாதுகா தேவி! யுன்சீர்ப் பதுமரா கப்ப யப்பாம். 29

610. நெடுமா லடிநற் பிடிமா மணிகள்

தொடர்பா துகை! யுன் தொகையா மணிமின்

விடுமா படலத் தெரியூ ழியெழுந்

திடுசெஞ் சுடரா யிரமின் மினியாம். 30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக