மிக நன்றாகவே தெரிகிறது. ஒர் எழுத்தும் அறியாதானாகிய அடியேன் வைணவம் வல்லார் நிறைந்திருக்கும் பேரவையில் அவ்வப்போது ஏதேதோ எழுதுவது நகைப்புக்கிடமாகும் என்று. ஆனாலும் சிறு குழந்தை உளறுவதை ரசிப்பதைப் போல் அடியேனையும் பொறுப்பார்கள் என்ற நம்பிக்கையும் அவ்வப்போது மனதில் தோன்றி தைரியம் ஊட்டும். தவிர '”உனக்கு ஏது சுய புத்தி ! கையில் கிடைக்கும் பழைய நூல்களைத் தானே இங்கு இடுகிறாய்! அதனால் உனக்குத் தெரியும் என யாராவது தவறாக நினைத்துவிடப் போகிறார்களே என அச்சம் எதற்கு ? நீ ஒரு அச்சுக் கோப்பவன்தானே ! “ஸ்ரீ ரங்கநாத பாதுகாவை அச்சிடுகிற நாராயணனுக்கு அதில் வருகிற சாஸ்த்ரார்த்தங்கள் எல்லாம் முழுதும் தெரியும் என யாராவது நினைப்பார்களா ! பழையவற்றை மீண்டும் அச்சிடும் உன்னையும் யாரும் நிச்சயம் படித்தவன் என தவறாகவே நினைக்க மாட்டார்கள் “ என மனசு ஊக்கமளிக்கும். அவற்றை ஏற்று பழையவற்றை மின்அச்சிடும் பணி தொடர்கிறேன்.
என்ன இவ்வளவு பீடிகை என்கிறீர்களா ? சிலருக்கு இவனுக்கு எல்லாம் தெரியும் என ஒரு மயக்கம் ஏற்பட்டு, அடியேன் ஸம்ஸ்க்ருதமோ, சாஸ்த்ரமோ ஸம்ப்ரதாயமோ அறியாத துர்பாக்யசாலி என்பது தெரியாமல், அடியேனிடம் தங்கள் கைக்காசைச் செலவழித்துக் கொண்டு தொலைபேசி யில் சந்தேகங்கள் கேட்டு நான் “திருதிரு" என விழிக்கும் நிலை அடிக்கடி அனுபவமாதலால் இது தேவையாகி அடியேன் சரணாக வேண்டியிருந்தது சரணடைந்தோரைக் கண்டிப்பாக நாராயணன் மட்டுமில்லை அவன் அடி போற்றுவோரும் ரக்ஷிப்பீர்கள்தாமே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக