புதன், 19 மார்ச், 2014

சரணாகதி தீபிகை (16-03-2014) டெலி உபந்யாஸம்

ஸ்வாமி தேசிகன் தனது சரணாகதி தீபிகையின் 50வது ச்லோகமான

यद्वा मदर्थ परिचिन्तनया तवालं
संज्ञां प्रपन्न इति साहसिको बिभर्मि |
एवं स्थिते त्वदपवाद निवृत्तये मां
पात्रीकुरुष्व भगवन् भवत: कृपाया : ||

யத்வா மதர்த்த பரிசிந்தநயா தவாலம்
ஸம்ஜ்ஞாம் ப்ரபந்ந இதி ஸாஹஸிகோ பிபர்மி|
ஏவம் ஸ்திதே த்வதபவாத நிவ்ருத்தயே மாம்
பாத்ரீகுருஷ்வ பகவந் பவத; க்ருபாயா;||

என்பதன் மூலம் சொல்ல வந்தது என்ன என்பதை நாட்டேரி ஸ்வாமி இந்த வாரம் மிக அற்புதமாக விவரிப்பதைக் கேட்டு மகிழ

https://www.mediafire.com/?445d002tiliz24q

வியாழன், 13 மார்ச், 2014

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்சவம்

தேதி

விசேஷம்

காலை

இரவு புறப்பாடு

மண்டகப்படிதாரர்

2014 ஏப்ரல் 5

முதல் திருநாள்

துவஜா
ரோஹணம்

சூர்ய ப்ரபை

வண்ணாங்குண்டு ஸ்ரீ ராமமூர்த்தியா பிள்ளை குடும்பத்தார்

ஏப்ரல் 6

இரண்டாம் திருநாள்

பல்லக்கு

சிம்ம வாகனம்

சிவகங்கை சமஸ்தானம்

ஏப்ரல் 7

மூன்றாம் திருநாள்

பல்லக்கு

ஹனும வாகனம்

ஸ்ரீ புருஷோத்தமராயர்

ஏப்ரல் 8

நான்காம் திருநாள்

பல்லக்கு அதன்பின் பெருமாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம்

பெருமாளும் இராமனும் இரட்டை கருட வாகனம்

ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம்

ஏப்ரல் 9

ஐந்தாம் நாள்

பல்லக்கு

சேஷ வாகனம்

திருவனந்தபுரம் சமஸ்தானம்

ஏப்ரல் 10

ஆறாம் நாள்

பல்லக்கு

யானை வாகனம் அதன்பின் பெருமாள் தாயார் திருக்கல்யாணம்

ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அமெரிக்கா

ஏப்ரல் 11

ஏழாம் திருநாள்

மாலை மஞ்சள் நீராட்ட புறப்பாடு பல்லக்கு

ஹம்ஸ வாகனம்

ஸ்ரீ பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தார்

ஏப்ரல் 12

எட்டாம் திருநாள்

பல்லக்கு

மாலை வேட்டைக்கு எழுந்தருளுதல்
இரவு குதிரை வாகனம்
திருமங்கை ஆழ்வார் ஆட்கொள்ளல் கட்டுப் பட்டயம் வாசித்தல்

திருப்புல்லாணி ஊராட்சி

ஏப்ரல் 13

ஒன்பதாம் நாள்

திருத்தேர்

தேர்த்தடம் பார்த்தல்

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்

ஏப்ரல் 14

பத்தாம் நாள்

தீர்த்தவாரி பெருமாள், இராமன், சக்கரத்தாழ்வார் ஸ்ரீஆதிஸேதுவுக்கு எழுந்தருளி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி அதன்பின் மூவரும் ஏக ஆசனத்தில் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஸந்நிதியில் திருமஞ்சனம்

திருப்புல்லாணி திரும்பி மட்டையடி உத்ஸவம்
அதன்பின் சந்திரப்ரபை வாகனம்

திருப்புல்லாணி ஸ்ரீ ஜே.எஸ். வாசன் & சகோதரர்கள்

ஏப்ரல் 15

விடாயற்றி

பெருமாள் உபய நாச்சியார்
களுடன்
ஸ்ரீ வானமா
மலை மடத்துக்கு எழுந்தருளி
விசேஷ திருமஞ்சனம்

புஷ்ப பல்லக்கு

ஸ்ரீ பத்மாசனித் தாயார் கைங்கர்ய சபை

 

               உத்ஸவத்தின் அனைத்து தினங்களிலும் ஸ்ரீமத் ஆண்டவன்
ஸ்ரீரங்கராமாநுஜ மஹா தேசிகன் ஸ்வாமி நியமனப்படி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் விசேஷ ததீயாராதனம் நடைபெறும்.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

saranagati deepikai --- upanyasam on 10thMarch 2014

The tele-upanyasam of Sri Natteri Rajagopalacharyar swami on Swami Desikan’s “saranagati Deepikai” deleivered on 10-03-2014 can be downloaded and enjoyed from this link

https://www.mediafire.com/?tdvs11q10f13n20

வெள்ளி, 7 மார்ச், 2014

Saranagati Deepikai (03-03-2014) tele-upanyasam

ब्रह्माण्ड लक्ष शत कोटि गणाननन्तान्

एक क्षणे विपरिवर्त्य विलज्जमानाम्|

मत्पाप राशि मथने मधु दर्प हन्त्रीं

शक्तिं नियुङ्क्ष्व शरणागतवत्सल त्वम्||

ப்³ரஹ்மாண்ட³ லக்ஷ ஶத கோடி க³ணாநநந்தாந்

ஏக க்ஷணே விபரிவர்த்ய விலஜ்ஜமாநாம்|

மத்பாப ராஶி மத²நே மது⁴ த³ர்ப்ப ஹந்த்ரீம்

ஶக்திம் நியுங்க்ஷ்வ ஶரணாக³தவத்ஸல த்வம்||

என்ற 48வது “சரணாகதி தீபிகை” ச்லோகம் 03-03-2014 அன்று ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் “சரணாகதி தீபிகை” டெலி உபந்யாஸத்தின் விஷயம்.

வழக்கமாக உபந்யாஸம் ஆரம்பிக்கும் முன்னர் ஏதாவது ச்லோகங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அவ்வகையில் இந்த வாரம் உபந்யாஸம் ஆரம்பிக்கும் முன்னர் ஒலித்த ஸ்ரீமத் ஆண்டவன் திருவாக்கில் ஒலித்த அபீதிஸ்தவம் ச்லோகத்தை இந்த வார உபந்யாஸத்தோடு இணைத்து அநுபவிப்பதை ரசிக்கலாம்.

ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் இந்த ச்லோகத்தை அடிக்கடி உதாஹரித்தாகுமாம்.

 

வழக்கம்போல மீடியாபையர் லிங்க்கிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ள

http://www.mediafire.com/listen/wyblrbrss775b7l/62_Saranagati_Deepikai_(03-03-2014).mp3

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ராமாநுஜ தயாபாத்ர தனியனின் ஏற்றம்

இன்று அடியேன் படித்துக் கொண்டிருக்கும் “ஸ்ரீவேதாந்த தேசிகன் தனியனும் அதன் ஏற்றமும்” (நூல்  கல்யாணபுரம் தேவஸ்தானம் ஸாமவேத வித்வான் ஸ்ரீ உ.வே. பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி – 13-09-2007ல் அவரது ஜன்ம நக்ஷத்ர ஸாந்தி மஹோத்ஸவ மலராக வெளியிட்டது) நூலிலிருந்து ஒரு பகுதி

ராமாநுஜ தயாபாத்ர தனியனின் ஏற்றம்

ஸ்ரீ தேஶிகன் விஷயமான 3 தனியன்களில் முதலான விஷயங்கள் மூன்று என அநுபவிக்கப்பட்டது. அவற்றுள் மூன்றாவதான ராமாநுஜ தயாபாத்ரம் என்னும் தனியனுக்கு இன்னும் ஒரு படி ஏற்றம் உண்டு.

ரஹஸ்யத்ரயங்களில் सदैवं वक्त्ता என்கிற ஏற்றம் பெற்றது த்வயம்.

ஆசார்யர்களுக்குள் மற்றொருவருக்கும் கிடைக்காததாயும் ஸ்ரீதேஶிகன் ஒருவருக்கே கிடைத்ததுமான பெருமை வேதாந்தாசார்யர் என்னும் பிருது. இதைப் பலபடிகளாலும் தாம் நிர்வஹித்தருளிய ப்ரகாரத்தை ஸ்ரீதேஶிகன் தாமே அருளிச் செய்திருக்கிறார். நமது ஸம்ப்ரதாயத்தில் உபய வேதாந்தங்களும் ப்ரமாணங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஸம்ஸ்க்ருத வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கிற ப்ரஹ்ம ஸூத்திரங்களின் வ்யாக்யாநமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்த ஸங்க்ரஹமான ஸ்ரீஅதிகரணஸாராவளியில்
तेन देवेन दत्तां वेदान्ताचार्यसंज्ञामवहित बहुवित्सार्थमन्वर्थयामि
என்று அநுஸந்தித்திருக்கிறபடியினால் ஸம்ஸ்க்ருத வேதாந்தங்களில் தாம் நிகரற்றவர் என்பதை வெளியிட்டருளினார்.

आचार्यप्रियचिकीर्षया प्रेरित: तत्प्रसादसन्धुक्षित तत्प्रबन्धानुसन्धान जनित ज्ञान भक्ति परिवाहरूपे स्तोत्रे

    என்கிறபடியே த்ராவிட வேதங்களின் அநுஸந்தாந பரிவாஹமான ஸ்ரீஸ்தோத்ர ரத்நத்திற்கு வ்யாக்னமிட்டருளி அதன் இறுதியில்
स्वकमिति हरिदत्तं यामुन स्तोत्र वृत्तया व्यवृणुत निगमान्ताचार्यकं वेङ्कटेश: 

என்றருளிச் செய்திருப்பதினாலே திரமிட வேதங்களில் தாம் நிலவர் என்பதை ஸ்தாபித்தருளினார். ஸ்ரீபாஷ்யத்திற்கு விஸ்தாரமான வ்யாக்யாநமான ஸ்ரீதத்வடீகையை यतिपतिभुवो भाष्यस्यासौ यथाश्रुतचिन्तित प्रवचनविधावष्टाविंशे जयध्वजपट्टिका  என்றும் , ஸ்ரீசதுஶ்லோகீ பாஷ்யத்தில் व्यासन शमन व्यक्त्तोस्तेया जयध्वजपट्टिका என்றும் அருளிச் செய்திருப்பதினாலும் உபய வேதாந்தங்களில் பாண்டித்யத்தை உடையவர் என்பது தெரிவிக்கப் பட்டதாகிறது. இப்படி உபய வேதாந்தங்களிலும் ஆசார்யனாய் விளங்கின போதிலும்

1. செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே. 2. பாணன் ஓதியதோர் இருநான்கு இரண்டுமான ஒரு பத்தும் பற்றாக உண்ர்த்துரைத்தோம் 3. சந்தமிகு தமிழ்மறையோன் என்றிவை முதலாக அநுஸந்தித்திருப்பதினாலே ஒரு விஶேஷம் பெற்றதாயிருக்கும் த்ராவிட வேதங்கள். ஸம்ஸ்க்ருத வேதாந்தங்களின் வ்யாக்யாநங்களான ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீகீதாபாஷ்யம், முதலிய க்ரந்தங்களும் பகவானுடைய மஹிமையையே ப்ரதிபாதித்தபோதிலும், பகவத் குணாதிகளை நேரில் அவ்யவஹிதமாக ஒன்றும் விடாமல் ப்ரதிபாதிக்கிற த்ரமிட வேதங்களின் வ்யாக்யாநங்களுக்குப்போலே அவற்றுக்கு பகவத் விஷயம் என்னும் திருநாமம் கிடைக்கவில்லை. எம்பெருமானாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்று, அந்த ஜ்ஞாநத்தினாலேயே அவனை உள்ளபடியே அநுபவித்து, அநுபவித்தபடியே பேசுகிற பேச்சுக்களான திருவாய்மொழியின் முதல் வ்யாக்யாநமாக எம்பெருமானாருடைய நியமனத்தினால்  பிள்ளான் பணித்தருளிய திரு ஆறாயிரப் படிக்கே அப்பெருமை. அதற்கு வ்யாக்யாநமான எழுபத்தி நாலாயிரப்படியின் காலக்ஷேப காலத்தில் அவதரித்த இத்தனியன் மற்றத்தனியன்களை விட ஓர் ஏற்றம் பெற்றிருக்கும்.

அன்றிக்கே, ஸ்ரீரங்கத்தில் தடைபட்டு நின்ற திருவத்யயனோத்ஸவத்தை ப்ரதிவாதிகளை நிரஸித்து அந்த மஹோத்ஸவத்தை நடத்தி வைத்த ஸமயத்தில் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் என்னும் தனியனுக்கு முன்பு அநுஸந்திக்கும்படி ஸ்ரீரங்கநாதனால் நியமிக்கப்பட்ட பெருமை வாய்ந்திருக்கும் இத்தனியன் என்றபடியாகவுமாம்.

மற்றும், பூர்வாசார்யர்கள் எல்லோரும் உபய வேதாந்தங்களிலும் நிலவர்களாகிலும் அவர்கள் ஸ்ரீதேஶிகனைப்போலே உபயவேதாந்தாசார்யத்வத்தில் அபிஷிக்தர்களாகவில்லை. ஏனென்றால் ---  ப்ரபந்நஜந கூடஸ்தரான ஆழ்வார் த்ரமிடோபநிஷத் த்ரஷ்டா என்கிற பெருமை பெற்றவர். யோகதசையில் ஸாக்ஷாத்க்ருதமாய் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு உபயவேதாந்தங்களையும் உபதேஶித்தருளினாலும் க்ரந்த முகமான உபகாரம் த்ரமிட வேதங்களாலேதான். தமிழ் மறைக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளலான ஸ்ரீமந் நாதமுனிகளும் திவ்ய ப்ரபந்தங்கள் விஷயமாய் க்ரந்த முகமாக உபகாரம் செய்தருளவில்லை. பெரிய முதலியாரும் த்ரமிடவேத த்ரஷ்டாவான ஆழ்வார் விஷயமாக ஒரு ஶ்லோகம் அருளிச் செய்திருந்தபோதிலும் திவ்ய ப்ரபந்தங்களின்ப்ரபாவாதிகளைப் பரக்க நிரூபித்தாரில்லை. தர்ஶந ப்ரவர்த்தகரான எம்பெருமானாருடைய திவ்ய ப்ரபந்தாநுஸந்தாந ஊற்றம் நூற்றந்தாதியில்

“மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி – பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்துறைய வைத்தாளும் – கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் – சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் சென்னி – இடம்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன் இணையடிப் போதடங்கும் இதயத்து – செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ்மாலையும் பேராத சீர்அரங்கத்து ஐயன் கழல் பணியும் –கொல்லி காவலன் சொல்பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் – பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து – அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் – தண்தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை --- எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை – மாறன் விளங்கிய சீர்நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று – தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப் பசும் தமிழ்தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண்வைத்த – திருவாய்மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னுமிடம்தொறும் நிற்கும் – பண்டரு மாறன் பசும் தமிழ் ஆநந்தம் பாய் மதமாய்”      (இராமாநுஜ நூற்றந்தாதி)

முதலியவைகளில் விஶேஷமாக ப்ரதிபாதிக்கப் பட்டிருந்தபோதிலும், க்ரந்தமுகமாக ஆழ்வார்களைப் பற்றியோ அவர்கள் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய த்ராவிட வேதங்களைப் பற்றியோ அவர் ஓரிடத்திலும் நிரூபிக்கவில்லை. எம்பெருமானாரால் உபய வேதாந்த ஸிம்மாஸனத்தில் அபிஷிக்தரான பிள்ளானும் த்ரமிடோபநிஷத்தின் அர்த்த விஶேஷங்களை ஆறாயிரப்படியில் பரக்க நிரூபித்திருந்தாலும் ஆழ்வார்களின் அவதாரப்ரபாவ விஷயமாய் ஒன்றும் நிரூபிக்கவில்லை. ஸ்ரீதேஶிகன் ஒருவரே தான் வேதாந்தாசார்யர் என்னும் தம்முடைய திருநாமத்திற்கேற்ப உபய வேதாந்தங்களின் அர்த்தங்களையும், அவற்றின் உத்கர்ஷத்தையும், ஆழ்வார்கள் த்ரமிட வேத த்ரஷ்டாக்கள் என்பதையும், அவர்களுடைய அவதார ப்ரபாவத்தையும் வெளியிட்டருளியவர். இப்படி உபய வேதாந்தங்களிலும் நிலவரான ஸ்ரீ தேஶிகனாலே
नित्यम् जाता शठारिपु तनो: निष्पतन्ति मुकात्ते|
प्राचीनानां श्रुतिपरिषदां पादुके पूर्वगण्या ||
  (பாதுகாஸஹஸ்ரம்)
என்று கொண்டாடப் பட்டிருக்கும் பெருமையையுடையவைகள் த்ராவிட வேதங்களே. இப்படிப்பட்ட ஏற்றமுடைய த்ரமிட ப்ரபந்தங்களின் தனியன் என்னும் பெருமை பெற்றது.

மேலும், ரஸங்களுக்குள் உத்க்ருஷ்டமான ஶாந்தி ரஸத்தை ப்ரதாநமாக ப்ரதிபாதிக்கிறபடியினாலும் ஸம்ஸ்க்ருத வேதங்கள்போல் த்ரைவர்ணிகர்களுக்கு மட்டுமன்றிக்கே ஸர்வாதிகாரங்களாய் நிற்கிறபடியினாலும் பெருமை பெற்ற த்ரமிட வேதங்களுக்குத் தனியன் என்கிற உத்கர்ஷம் பெற்றிருக்கும்.

அன்றிக்கே, ஶரணாகதியையும், அதன் அங்கங்களையும், அதற்கு இன்றியமையாததான பகவானுடைய கருணையையும் அர்ச்சாவதாரத்தையும் விஶேஷித்து ப்ரதிபாதிக்கிறது என்கிற பெருமையையும் பெற்ற “திராவிடவேதங்களின் தனியன்” என்கிற பெருமையும் வாய்ந்தது.

பின்பும் नाथे न: என்கிற ஶ்லோகத்தில் பாகவதர்களின் ப்ரஸாதமே நமக்கு உத்தேசமென்றும், आचार्यादिह देवतां समधिकामन्यां न मन्यामहे| என்கிற ஶ்லோகத்தின்படியே ஆசார்யனுடைய கடாக்ஷத்தையே நாடவேண்டும் என்பதையும் இது காட்டுகிறது. 

(இது சேட்லூர் ஸ்வாமி மணிப்பிரவாளத்தில் எழுதியதின் தமிழாக்கம் என்று நூலில் சொல்லப் பட்டுள்ளது)