ஸ்வாமி தேசிகன் அருளிய ஸங்கல்ப சூர்யோதயம் முதலில் பார்த்தபோது -- சம்ஸ்க்ருதம் தெரியாததால் அப்படியே நூலை மூடி வைத்துவிட்டேன். பின்னர் ஶ்ரீரங்கநாத பாதுகாவில் ஒப்பிலியப்பன்கோவில் ஸ்வாமி மிக எளிய தமிழில் தொடராக எழுதியபோது படித்து அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் கிடைத்ததும் சேட்லூர் ஶ்ரீ ந்ருஸிம்மாச்சாரியார் அவரது வழக்கத்துக்கு மாறாக கிரந்தம் கலக்காமல் மூல நூலை எளிய தமிழில் மொழிபெயர்த்திருப்பதுமான நூலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது கையில் கிடைத்திருப்பதோ, அந்த நாளில் இதை நாடகமாக நடிக்கத் தோதான வகையில் சுருக்கி எழுதப்பட்ட 110 பக்கங்கே உள்ள நூல். இதுவும் மதுரை ஶ்ரீ GSR ஸ்வாமி கொடுத்து உதவியிருப்பது. அந்த நாள் வழக்கப்படி நெருக்கமாக பைண்ட் செய்யப்பட்ட புத்தகம். முடிந்த மட்டும் தெளிவாக வருடி சேமித்திருக்கிறேன். சில பக்கங்களில் வரிகளின் கடைசி எழுத்து விடுபட்டிருக்கிறது. இருந்தாலும் தமிழ் என்பதால் ஊகித்துப் படிக்க முடியும். விரும்புவோர் நகலிறக்க
https://www.mediafire.com/file/6lsyjm9q9tbceuk/Sankalpa_Suryodhayam_Drama.pdf/file
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக