புதன், 29 ஜூன், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 5

ஶ்ரீ மஹாபாரதம் முதல் பாகம்

வினா 101 முதல் வினா 120 வரை

 

வினா 101.- முன்‌ சொல்லியபடி ரஹஸ்யமாயிருந்த துரோணரது ஸாமர்த்தியம்‌ எவ்வாறு வெளிவந்தது?

விடை...  ஒரு நாள்‌ பாண்டவ கெளரவர்கள்‌ பந்து விளையாடத்‌ தொடங்கினார்கள்‌. அவர்கள்‌ பந்து கிணற்றில்‌ விழ, யாவரும்‌ திகைத்து நின்றனர்‌. அங்கு அப்பொழுது துரோணர்‌ தற்செயலாய்‌ வர அவரைச்‌ சூழ்ந்து கொண்டு, இவர்கள்‌ நடந்த விஷயத்தைத்‌ தெரிவித்தனர்‌. உடனே அவர்‌ துடைப்பக்‌ குச்சிகளில்‌ ஒரு அஸ்திரத்தை மந்திரித்துவிடப்‌ பந்து கரைமேல்‌ வந்து விழுந்தது. இதைக்‌ கண்டு ராஜ குமாரர்கள்‌ இவரது வல்லமையை பீஷ்மரிடம்‌ சொல்ல, அவர்‌ இவர்‌ யாரென்பதையும்‌, என்ன எண்ணத்தோடு ஹஸ்தினாபுரிக்கு வந்தார்‌ என்பதையும்‌ இவரிடமிருந்தே தெரிந்துக்கொண்டு அன்று முதல்‌ துரோணரையே ராஜ குமாரர்களுக்கு தனுர்வேத ஆசிரியராக நியமித்தார்‌.

வினா 102.- யார்‌ யார்‌ எவ்வாறு துரோணரிடம்‌ வில்வித்தை கற்றுவந்தார்கள்‌?

விடை.- இவர்களுள்‌ பாண்டவர்கள்‌ கெளரவர்களைவிட அதிசீக்கிரத்தில்‌ வித்தை கற்றுக்கொண்டார்கள்‌. பாண்டவர்களுள்‌ அர்ஜுனன்‌ ஒருவனே மிகுந்த கருத்தோடு இவ்வில்வித்தையைக்‌ கற்றுக்கொண்டான்‌.

வினா 103.- துரோணருக்கு யாரிடத்தில்‌ அதிகப்‌ பிரீதி? இது வரக்‌ காரணமென்ன?

விடை.- துரோணருக்கு அர்ஜுனனிடத்தில்‌ அதிகப்‌ பிரீதி. இவர்‌ பாண்டவ கெளரவர்களை ஏகாந்தத்தில்‌ அழைத்து, 'என்‌ மனதில்‌ ஒரு குறை இருக்கிறது; அதை நீங்கள்‌, தனுர்வித்தையில்‌ தேர்ச்சியடைந்த பின்னர்‌, பூர்த்தி செய்ய வேண்டும்‌' என்று அவர்களிடம்‌ சொல்ல, அர்ஜுனன்‌ ஒருவனே பூர்த்தி செய்வதாக உறுதி வாக்களித்தான்‌. மற்றையவர்‌ யாவரும்‌ மெளனமாயிருந்தனர்‌. இது பற்றி துரோணருக்கு அர்ஜுனனிடம்‌ பிரீதி உண்டாயிற்று.

வினா 104.- இவர்கள்‌ வில்வித்தை பயிலுங்கால்‌ யார்‌ யார்‌ இவரிடம்‌ வில்வித்தை கற்க வந்தது?

விடை.- ஸூர்ய புத்திரன்‌ என்று அப்பொழுது வழங்கி வந்த கர்ணன்‌, விருஷ்ணி, அந்தகாள்‌ முதலிய ராஜவம்‌சத்தவர்‌, ஏகலவ்யன்‌ என்ற வேட அரசன்‌ குமாரன்‌, ஆகிய இவர்களே.

வினா 105.- துரோணருக்கு அர்ஜுனனிடம்‌ பிரீதி. அதிகரிக்கக்‌ காரணம்‌ என்ன?

விடை.- ஒருநாள்‌ தமது பிள்ளையாகிய அசுவத்தாமனுக்கு புதிய ஆயுதங்கள்‌ கற்றுக் கொடுக்க வெண்ணித்‌, துரோணர்‌ மற்றையவர்களை வெளியிலனுப்புவதற்காக ஒவ்வொருவர்‌ கையிலும்‌ வாய்‌ குறுகிய கமண்டலுவைக்‌ கொடுத்துத்‌ தண்ணீர்‌ கொண்டு வரும்படி ஏவ, யாவரும்‌ அதைக்‌ கொண்டுவரப்‌ போயினர்‌. அப்பொழுது தனது பிள்ளைக்கு உபதேசிக்கத்‌ தொடங்கினர்‌. உடனே அர்ஜுனன்‌ அதிசீக்கிரத்தில்‌, நதிக்கும்‌ போகாது, வருணாஸ்திர மகிமையால்‌ தனது கமண்டலுவை நிறைத்துவந்து அசுவத் தாமனுக்குச்‌ சொல்லிக்‌ கொடுக்கப்பட்ட வித்தையைத்‌ தானுங்‌ கற்றான்‌. மேலும்‌ அரண்மனைப்‌ பரிசாரகனுக்கு இருட்டில்‌ அர்ஜுனனுக்கு சோறிடவேண்டாமென்று துரோணர்‌ கட்டளையிட்டார்‌. அதன்படி ஒரு நாள்‌ அர்ஜுனன்‌ சாப்பிடுகையில்‌ விளக்கணைய பரிசாரகன்‌ அவனுக்குச்‌ சோறிடவில்லை. இப்படிச்‌ செய்த போதிலும்‌ கையானது வாய்க்குச் சரியாய்ப்‌ பழக்கத்தினாற்‌ போவதை கண்ணுற்ற அர்ஜுனன்‌ வில்வித்தை யில்‌ அதிகத்‌ தேர்ச்சியடைய இரவிலும்‌ அதைப்‌ பழகத்‌ தொடங்கினான்‌. இதைக்கண்ட துரோணருக்கு அர்ஜுனனிடம்‌ யிருந்த பிரீதி அதிகரித்தது.


வினா 106.- இப்பிரீதியால்‌ துரோணர்‌ என்ன உபகாரம்‌ அர்ஜுனனுக்குச்‌ செய்தார்‌?

விடை... ஏகலவ்யன்‌ அர்ஜுனனைவிட தேர்ச்சி அடைவானோ என்ற ஸந்தேகத்தால்‌ துரோணர்‌ அவனை சிஷ்யனாக ஒப்புக்கொள்ளவில்லை. அவனோ துரோணரைப்‌ போல ஒரு பிம்பத்தை செய்துவைத்துக்கொண்டு தனது குரு பக்தி விசேஷத்தால்‌ அர்ஜுனனுக்கு துரோணர்‌ இரஹஸ்யமாய்ச்‌ சொல்லிக்கொடுத்த வித்தைகள்‌ எல்லா வற்றையும்‌ தெரிந்து கொண்டான்‌.

வினா 107.- ஏகலவ்யன்‌ அர்ஜுனனைவிட அதிகத்தேர்ச்சி யடையாதபடி எப்படி துரோணர்‌ தடுத்தார்‌?

விடை... துரோணரது அனுமதியின்பேரில்‌ பாண்டவ கெளரவர்கள்‌ காட்டுக்கு வேட்டைக்காகப்‌ புறப்பட்டார்கள்‌. அங்கு ஏகலவ்யனது சிலம்பக்‌ கூடத்தருகில்‌ போகுங்கால்‌ அவனைக்‌ கண்டு அவர்கள்‌ பின்‌ வந்த நாய்‌ குலைக்க, ஏகலவ்யன்‌ ஏழு பாணத்தால்‌ நாயின்வாயைக்‌ காயப்‌ படுத்தினான்‌. இந்த வித்தை அர்ஜுனனுக்கு மாத்திரம்‌ தான்‌ துரோணர்‌ சொல்லி இருந்தார்‌. இதைக்கண்டு அர்ஜுனன்‌ திகைத்து நீ யார்‌ என்று கேட்க, வேடன்‌ நான்‌ துரோணர்‌ சிஷ்யன்‌" என்றான்‌. இதை அர்ஜுனன்‌ துரோணரிடம்‌ சொல்ல அவரும்‌, இவன்‌ கூடவே ஏகலவ்யனிடம்‌ வந்து "எனக்குக்‌ குருதக்ஷிணையாக உனது வலதுகை கட்டைவிரலைக்‌ கொடு” என, ஏகலவ்யன்‌ உடனே யோசியாது கொடுத்துவிட்டான்‌. இதனால்‌ இவனுக்கு வில்லிழுக்க முடியாமலே போக, அர்ஜுனனை மிஞ்ச இடமில்லாமல்‌ போய்விட்டது.

வினா 108.- தமது சிஷ்யர்களை துரோணர்‌ எவ்வாறு பரீக்ஷித்தார்‌?

விடை. - ஒரு மரத்தின்பேரில்‌ ஒரு பட்சி உட்கார்ந்திருக்கக்கண்டு அதை வரிசையாய்‌ ஒவ்வொருவரையும்‌ குறி வைக்கச்‌ சொல்லி தன்‌ உத்தரவின்பேரில்‌ அம்பெய்யும்படி கட்டளையிட்டார்‌. ஒவ்வொருவனும்‌ குறிபார்த்தவுடன்‌, 'உன்‌ கண்ணுக்கு என்ன தெரிகிறது என்று துரோணர்‌ கேட்க, ஒவ்வொருவனும்‌ சுற்றுமுற்றுமுள்ள ஸகல வஸ்துக்களும்‌ என்கண்ணில்‌ படுகின்றன என அவர்களை அப்புறம்‌ போகச்‌ செய்தார்‌. கடைசியில்‌ அர்ஜுனனைக்கேட்க அவன்‌ “எனக்கு பட்சி மாத்திரம்தான்‌ தெரிகிறது, வேறொன்றும்‌ தெரியவில்லை" என, “அம்பு எய்‌” என்று துரோணர்‌ கட்டளையிட்டார்‌. உடனே பட்சி அர்ஜுனன்‌ அம்புபட்டுக்‌ கீழே விழுந்தது. இதனால்‌ துரோணர்‌ அர்ஜுனனது திறமையை யாவரும்‌ அறியும்படி வெளியிட்டார்‌.

வினா 109.- இதன்பின்பு என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- துரோணர்‌ தமது சிஷ்யரோடு கங்கைக்கு நீராடச்‌ சென்றார்‌. அங்கு அவரை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. தம்மைக்‌ காக்குந்திறமை தமக்கு இருந்தும்‌ சிஷ்யரைக்‌ கூவி யழைத்து முதலையைக்கொன்று தன்னை விடுவிக்கும்படி உத்தரவு செய்தார்‌. சிஷ்யர்கள்‌ யாவரும்‌ ஒன்றும்‌ செய்யத்தோன்றாது திகைத்து நின்றனர்‌. உடனே அர்ஜுனன்‌ ஐந்து பாணங்களைப்‌ பிரயோகித்து முதலையைக்‌ கொன்று ஆசிரியரை விடுவித்தான்‌. அப்பொழுது துரோணர்‌ ஸந்தோஷத்தால்‌ அர்ஜுனனுக்குப்‌ பிரம்ம சிரோஸ்திரத்தை உபதேசித்து அதன்பிரயோகத்தையும்‌ கற்றுக்கொடுத்தார்‌.

வினா 110.- இவ்வாறு பாண்டவ கெளரவர்கள்‌ அஸ்திரவித்தை, வில்வித்தை இவைகளில்‌ தேர்ச்சியடைந்த பின்பு துரோணர்‌ என்ன செய்தார்‌? என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை. - இவர்களது ஸாமர்த்தியத்தை யாவரும்‌ அறிவதற்காக பீஷ்மர்‌ முதலிய பெரியோர்களது எண்ணப்படி ஒரு பரீக்ஷை ஏற்படுத்தினார்‌. இதற்காக ஊருக்கு வெளியில்‌ மைதான ஸ்தலத்தில்‌ யாவரும்வந்து கூடினார்கள்‌. அப்பொழுது பாண்டவ கெளரவர்கள்‌ தமது ஸாமர்த்தியத்தை வெளியிட்டார்கள்‌. யாவரும்‌ இதைக்கண்டு வியந்தார்கள்‌. குந்தி காந்தாரி. திருதராஷ்டிரர்‌ இவர்களுக்கு, குழந்தைகள்‌ செய்யும்‌ அற்புத காரியங்களை விதுரர்‌ சொல்லிக்கொண்டு வந்தார்‌.

வினா 111.- இதில்‌ ஏதாவது சண்டை உண்டாயிற்றா?

விடை... முதலில்‌ பீமனுக்கும்‌ துர்யோதனனுக்கும்‌ விளையாட்டாயுண்டான வீர்யம்‌ உண்மையான சண்டையாகவே முடிந்தது. சப்தம்‌ அதிகரித்துப்‌ பரீக்ஷை அபாயகர மாவதைக்‌ கண்ட துரோணர்‌ இவர்களை விலக்கும்படி அசுவத்தாமனுக்கு கட்டளை யிட்டார்‌. உடனே அசுவத்தாமன்‌, பீமனுக்கும்‌ துர்யோதனுக்கும்‌ மத்தியில்‌ சென்று சண்டையை விலக்கினான்‌.

வினா 112.- இதற்குப்பின்‌ யார்‌ யார்‌ தமது திறமையைக்‌ காட்டினார்கள்‌?

விடை.- துரோணருடைய உத்தரவின்படி அர்ஜுனன்‌ தனது திறமையின்‌ விசேஷத்தை காட்டத்‌ தொடங்கினான்‌. உடனே அர்ஜுனனது திறமையை யாவரும்‌ வியந்து ஆரவாரித்தனர்‌. அர்ஜுனன்‌ காட்டிய விசித்திர வித்தை எல்லாவற்றையும்‌ கர்ணனும்‌ காட்டினான்‌.

வினா 113.- உடனே துர்யோதனன்‌ என்ன செய்தான்‌? இதனால்‌ என்ன விளைந்தது?

விடை.- உடனே துர்யோதனன்‌ ஸாரதியின்‌ புத்திரனாகிய கர்ணனை ஸ்நேஹம்‌ செய்துகொண்டான்‌. இப்படியானதும்‌ இவனுக்கு கர்வம்வர அர்ஜுனனைத்‌ தன்னோடு யுத்தம்‌ செய்யும்படி அழைத்தான்‌. அப்பொழுது இருவரும்‌ மிகுந்த ஆவேசத்தோடு சண்டைசெய்யத்‌ தொடங்கினார்கள்‌.

வினா 114.- இத்‌ தருணத்தில்‌ யுத்தம்‌ உண்டாக என்ன தடை ஏற்பட்டது? அது எவ்வாறு நிவர்த்திக்கப்பட்டது?

விடை... இத்‌ தருணத்தில்‌ கிருபாசாரியர்‌ எழுந்து கர்ணனை நோக்கி “நீ உன்‌ குலம்‌, கோத்திரம்‌ உனது வம்சோத்தாரகரான அரசர்களது பெயர்‌ இவைகளை வெளியிட்டால்‌ மாத்திரம்‌ தான்‌, அர்ஜுனன்‌ உன்னோடு எதிர்த்துப்‌ போர்‌ செய்வான்‌. நல்ல க்ஷத்திரியருக்கு தம்மைவிட தாழ்ந்தவரை எதிர்த்தல்‌ கெளரவக்‌ குறைவு" என்று எடுத்துரைத்தார்‌. கர்ணன்‌ ஒன்றும்‌ பதில்‌ சொல்லமாட்டாமல்‌ வெட்கி நின்றான்‌. அத்தருணத்தில்‌ துர்யோதனன்‌ தனது தோழனைக்‌ காப்பாற்றுவதற்காக கிருபரை நோக்கி, "அரச வம்சத்தில்‌ பிறவாதிருந்தபோதிலும்‌ மூன்று திறத்தார்‌ அரசரெனக்‌ கொண்டாடப்படுவார்‌. அவர்கள்‌, நல்ல குடிபிறந்தோர்‌, மஹா வீரர்‌, ளேனாதிபதிகள்‌ ஆகிய இவர்களே. இப்பொழுது இவன்‌ அரசனல்லவே, ஆதலால்‌ இவனை எப்படி எதிர்ப்பது என்று அர்ஜுனன்‌ யோசித்தால்‌, கர்ணனை இப்பொழுதே நான்‌ அங்கதேசாதிபதி யாக்குகிறேன்‌. இனிமேல்‌ போர்‌ நடக்க என்ன தடை" என்று சொல்லி கர்ணனுக்கு வந்த அவமானத்தை நிவர்த்திசெய்ய அவனுக்கு துர்யோதனனிடம்‌ இருந்த பிரீதி அதிகரித்துவிட்டது.

வினா 115.- இவ்வாறு கர்ணன்‌ அங்க தேசாதிபதியாய்‌ யாவரும்‌ வியக்கும்படி பாணவித்தைகளை காட்டினதும்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- அந்த ஸமயத்தில்‌ கர்ணனை எடுத்து வளர்த்த ஸாரதி, அந்த ரங்க ஸ்தலத்திற்கு வர, பார்த்தவர்கள்‌ நகைப்பரே என்று வெட்கமில்லாமல்‌, தன்னை வளர்த்த பிதாவாகிய ஸாரதிக்கு கர்ணன்‌ வந்தனை வழிபாடுகள்‌ செய்து, அவனைத்‌ திருப்தி செய்வித்துத்‌ தனது பெருந்தன்மையை வெளியிட்டான்‌. இதைக்கண்ட பீமன்‌ கர்ணனை ஸாரதி புத்திரன்‌ என்று பரிஹாஸம்‌ செய்ய துர்யோதனன்‌ கோபத்தோடு, க்ஷத்திரியருக்கு அடையாளம்‌ பலமே ஒழிய பிறப்பல்ல வென்று சொல்லிவிட்டு, வீட்டுக்குத்‌ தன்‌ பரிவாரங்களோடு சென்று அர்ஜுனனால்‌ தனக்கு உண்டான பயம்‌ கர்ணனது ஸ்நேஹத்தால்‌ நிவர்த்தியாக, ஸுகமாய்‌ வாழ்ந்தான்‌.

வினா 116.- இவ்வாறு பாண்டவ கெளரவர்கள்‌ கற்றுத்‌ தேர்ந்தபின்‌ துரோணர்‌ என்ன குரு தக்ஷிணை கேட்டார்‌?

விடை... பாஞ்சால தேசத்தரசனாகிய துருபதனை தேர்க்காலோடு கட்டித்‌ தம்முன்‌ கொண்டுவந்து விடவேண்டும்‌ என்று தம்‌ உள்‌எண்ணத்தை வெளியிட்டு குருதக்ஷிணை கேட்டார்‌.

வினா 117.- இவர்கள்‌ எவ்வாறு குரு தக்ஷிணை கொடுத்தார்கள்‌?

விடை.- முதலில்‌ கெளரவர்கள்‌ துருபதராஜன்‌ பட்டணத்தை முற்றுகை போட்டுக்‌ கடைசியில்‌ அவனைப்‌ பிடிக்கமாட்டாது, தோல்வியடைந்து ஓடத்‌ தலைப்பட்டார்கள்‌. இந்நிலையைக்கண்ட பஞ்சபாண்டவர்‌ ஐவரும்‌ உடனே பட்டணத்தைத்‌ தம்‌ ஸேனையால்‌ வளைத்துக்கொண்டு, கொடும்‌ போர்செய்ய கடைசியில்‌ அர்ஜுனன்‌ வெகு தந்திரமாய்‌ துருபதராஜனைப்‌ பிடித்து தேரோடு கட்ட, யாவரும்‌ துரோணரிடம்‌ இவ்வரசனைக்‌ கொண்டுபோய்‌ விட்டனர்‌.

வினா 118.- இப்படி வந்த துருபதனை துரோணர்‌ என்ன செய்தார்‌?

விடை... "இப்பொழுதாவது நான்‌ உனது ஸ்நேஹத்திற்குத்‌ தகுந்தவனாக உனக்குத்‌ தோற்றுகிறதா? நீ பயப்படாதே, உன்னை நான்‌ கொல்லமாட்டேன்‌" என்று சொல்லிக்‌ காட்டி, "நான்‌ அரசனாய்‌ இல்லாதகாலத்தில்‌ நீ எவ்வாறு என்னோடு ஸ்நேஹிக்க முடியும்‌? ஆகையால்‌ உன்‌ ராஜ்யத்தில்‌ பாதி என்னைச்சேர்ந்தது, மற்றப்பாதியை நீ ஆளலாம்‌” என்று சொல்லி அவனை இசையும்படி செய்து பின்பு கட்டவிழ்த்துவிட, அரசன்‌ அன்றுமுதல்‌ பாஞ்சால தேசத்தின்‌ பாதிபாகத்தை ஆண்டு வந்தான்‌.

வினா 119.- இப்படி துரோணர்‌ செய்தபின்பு துருபதன்‌ மனம்‌ எவ்வாறு இருந்தது?
விடை... துரோணரைக்‌ கொல்லத்தக்க ஒரு பிள்ளையையும்‌, தன்னை வெகு தந்திரமாய்‌ பிடித்துத்‌ தேர்க்காலோடு கட்டி வந்த அர்ஜுனனுக்குத்‌ தக்க ஒரு பெண்ணையும்‌ தான்‌ அடைய வேண்டுமென்ற எண்ணம்‌ துருபதனுக்கு. உண்டாக, அன்று முதல்‌ அவன்‌ இதற்கு வேண்டிய யத்தனங்கள்‌ செய்யத்‌ தொடங்கினான்‌.
வினா 120.- இவ்வாறு பாண்டவர்கள்‌ குரு தக்ூஷணை கொடுத்ததும்‌ என்ன நடந்தது?

விடை. - தர்மபுத்திரருக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம்‌ நடந்தது. இவர்‌ பாண்டுவை விடச்‌ சிறந்தவர்‌ என்று யாவரும்‌ புகழும்படி தர்ம நெறி தவறாது நடந்துவந்தார்‌. இக்காலத்தில்‌ பீமன்‌ பலராமரிடமிருந்து கதாயுத்த வகைகளைத்‌ தெரிந்துகொண்டு மஹா பலவானானான்‌. அர்ஜுனன்‌ துரோணரிடமிருந்து இன்னும்‌ புதிதாகிய அரிய அஸ்திரங்களை யறிந்து கொண்டு மிகச்சிறந்த வில்லாளியானான்‌. அப்பொழுது துரோணரது வேண்டுகோளின்படி அவர்‌ தன்னை எதிர்க்குங்கால்‌ தானும்‌ அவரை கூசாது எதிர்ப்பதாக அர்ஜுனன்‌ ஒப்புக்கொண்டான்‌. நகுலனும்‌ சிறந்த யுத்தவீரனாகப்‌ பிரகாசித்தான்‌. ஸஹாதேவனோ துரோணரிட மிருந்த தர்மசாஸ்திர விஷயங்கள்‌ யாவையும்‌ ஜயம்திரிபறக்‌ கற்றுக்கொண்டு சிறந்த புத்திமானானான்‌. பாண்டவர்கள்‌ தமது தகப்பனால்‌ வெல்லமுடியாத அரசர்களைக்கூட வென்று மஹா தேஜோவான்‌ களாய்‌ விளங்கினர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக