ஞாயிறு, 19 ஜனவரி, 2020

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம் சதம் உத்தர பஞ்சாசத்


श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नमः
उत्तर-पञ्चाशत्
प्रच्छन्न-बाह्य-वर्गाणां प्रकटानाञ्च शासिता ।
जयत्युपनिषयूडालङ्कार-चतुरो गुरुः ।।

अवतारिका

पूर्वं प्रकट-प्रच्छन्न-बाह्यवर्ग-निराकरणागत-नामानि उक्तानि । इदानीं उपनिषत् सारभूत रहस्यत्रयार्थ-विशदीकरण-तद्विरोधि-निराकरणाभ्यां आगतानि नामानि आह ।

51. अवतार-रहस्यज्ञः 

अखिलहेयप्रत्यनीक-कल्याणैकतानस्य रहस्यत्रय-प्रतिपाद्यस्य साधुजन-संरक्षणदीक्षितस्य भगवतः श्रीमन्नारायणस्य अवतार-रहस्यं जानातीति अवताररहस्यज्ञः। तदुक्तं रहस्यत्रयसारे

'अवतारस्य सत्यत्वं अजहत्स्वस्वभावता । 
शुद्धसत्त्व-मयत्वं च स्वेच्छामात्र-निदानता ।।
 धर्मग्लानौ समुदयः साधुसंरक्षणार्थता । 
इति जन्मरहस्यं यो वेत्ति नास्य पुनर्भवः ।।

अत्र भक्तानां अवताररहस्य-ज्ञानं एकजन्मन्येव उपायपूर्ति जनयित्वा मोक्षहेतु भवति । तत् प्रपन्नानां शरण्यगुणविशेष-ज्ञानात् महाविश्वास-जननद्वारा साङ्गप्रपदनानुष्ठनोपयोगि भवति इति भावः ।।

அவதாரிகை

இப்படி முன் ஐம்பதாலே வெளிப்படையாயும், மறைவாயுமிருந்துள்ள பாஷாண்டிகளுடைய மதத்தை ஜெயித்து, அதனால் கிடைத்த புகழையுடைய திருநாமங்களைச் சொல்லி, மேல் ஐம்பதாலே மறை முடியின் ஸாரமான ரஹஸ்யத்ரயத்தினுடைய உண்மைப் பொருளை வெளியிடுகையாலும், அதின் விரோதிகளை விலக்குகையாலும் உண்டாகாநின்றுள்ள புகழ்பொருந்திய திருநாமங்களைச் சொல்லத் தொடங்கி குருவந்தனம் பண்ணுகிறார் ப்ரச்சந்ந என்பதாலே.

முன்சொன்னபடி இருவகையரான பாஷாண்டிகளுடைய கூட்டத்தை ஓட்டுமவராய் என்ற இத்தால் முன் ஐம்பதின் அர்த்தம் காட்டப்பட்டது. உபநிஷத்துக்களாகிய ஸ்திரீகளுடைய மயிர்முடியை அலங்காரஞ் செய்வதில் கைதேறினவராய் என்ற இத்தால் மேல் ஐம்பதின் அர்த்தம் ஸூசிக்கப்பட்டது. இப்படிப்பட்ட தேசிகன் மேன்மையோடிருக்கிறார்.

51. அவதார- ரஹஸ்யஜ்ஞ: –

அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர். அவதார ரஹஸ்யமாவது பகவானுடைய திருவவதாரங்களுடைய உண்மைப் பொருள். அதாவது – அவதாரம் பரமென்றும், வ்யூஹமென்றும், விபவமென்றும், ஹார்தமென்றும், அர்ச்சையென்றும் ஐந்துவகையா யிருக்கும். இவ்வைந்து ரூபமும், இந்திரஜாலம்போல பொய்யன்றிக்கே மெய்யானதென்றும் இவற்றில் ஈச்வரனுக்கு ஞானங்களினால் குறையில்லையென்றும், அவன் திருமேனி சுத்த ஸத்வமயமென்றும், இவையுண்டாகைக்கு ஈச்வரனுடைய இச்சையே காரணமென்றும், தர்மம் குறையில் ஆவிர்பவிப்பது என்றும், ஸாதுக்களைக் காப்பது முதலியவைகளே ப்ரயோஜனம் என்றும் – இப்படியாக பகவத்கீதையில் சொல்லப்படுமது. இதை அறிந்தவரென்றபடி. இங்கு பரரூபாதிகளுடைய லக்ஷணம் முதலியவைகளைப் பெரியோர்களைக் கேட்டறிந்திடுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக