அமலனாதிபிரான் அனுபவம்
(அனுபவிப்பவர் ஸ்ரீ உப.வே. அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமி)
ஸ்ரீமதே ஸ்ரீரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
அமலனாதிபிரான் அனுபவம்
(அன்பில் ஸ்ரீ உப.வே. கோபாலாசாரியார் ஸ்வாமி அனுபவம்)
தேவரிஷியான நாரதர் வீணாபாணி. அவருடைய வீணை அவருக்கு நித்யஸஹசரீ; நித்யமாக ஸஹதர்மசரீ. பகவத் குணங்களைப் பரவசமாகப் பாடி ஆனந்திப்பதே அவருடைய காலக்ஷேபம்;அவர் தர்மம். அந்தத் தர்மத்தில் 'வல்லகீ' என்னும் அவர் வீணை ஸஹசரீ. ஆத்மயாகம் செய்யும் ப்ரஹ்மவித்துக்களுக்க 'ச்ரத்தை பத்நீ' என்று சரணாகதியை விஸ்தாரமாக விவரிக்கும் வேதம் ஓதுகிறது. நாரதருடைய வீணை அவருக்குப் பத்நிபோல் ஸஹதர்மசரீ. அப்படியே நம்பாணனுக்கு அவர் யாழ் ஸஹதர்மசரீ. ஆழ்வார்கள் ரிஷிகள், த்ரமிடவேத த்ரஷ்டாக்கள்; வேதோபப்ரஹ்மணம் செய்தார்கள். அந்த ரிஷிகளில் நம் பாணர் நாரதரைப்போன்ற காயக தேவ ரிஷி. பாட்டினால் பகவானை ஸாக்ஷாத்கரிப்பவர் நாரதர். பாட்டினால் பரமாத்மாவினிடம் லயிப்பது ஸுலபம். 'வீணாவாதந தத்வத்தையறிந்த, ச்ருதி ஜாதிகளில் நிபுணராய், தாள ஞான முடையவர் அப்ராயேஸந(எளிதில்) மோக்ஷவழியை அறிவார் - அடைவார்' என்பர். நம் பாணர் இப்படி ஸுலபமாய் பரமாத்மாவினிடம் லயித்துப் பரவசமாகுபவர். பாட்டினால் கண்டு வாழ்பவர் நாரதர். இருவரும் பாட்டினால் கண்டு வாழ்கிறவரே. பாணர் துதி பாடுவர். पण-स्तुतौ (பண--ஸ்துதௌ) विपन्यव (விபந்யவ)(பாணிணி தாதுபாடம்) என்று பாடும் நித்யஸூரிகளைப் போல இவர் அரங்கனைப் பாடியே போந்தார். இவர் வீணாபாணி. யாழ்ப் பாணி. श्रीपाणिं निचुळापुरे' ( தனியன் சுலோகம்) என்றபடி பாணி என்றும் திருநாமம். வாத்யத்தோடு பாடிய ஆழ்வார் இவரொருவரே. வேணுகானம் பண்ணின க்ருஷ்ணன் ஒருவரே அவதாரங்களில வாத்யத்தோடு காயகர். வேதாந்தத்தையும் கீதையாகப் பாடினார். மற்றைய அவதாரங்களில் பாடவில்லை. வராஹரான ஞானப்பிரான் மூக்கினால் "குரு குரு" என்று சப்தித்துக் குருவானார். गुरुभिर्घोणारवैर् घुर्घुरै (குருபிர்கோணாரவைர் குருர்குரை). அபிநவதசாவதாரமான பத்து அவதாரங்களில் இவரொருவரே கண்ணனைப்போல வாத்யம் வாசித்த காயகர். "வீணையும் கையுமாய் ஸேவிக்கிற விவர்க்குச் சேமமுடை நாரதனாரும் ஒருவகைக்கு ஒப்பாவர்" என்று பிள்ளைலோகம் ஜீயர்.
அஷ்டாங்க யோகத்தில் ஸமாதியென்னும் லயத்தை அடைவதுண்டு. அந்த ஸமாதியில் கிடைக்கும் தர்சநம், தர்சந ஸமாநாகாரமே யொழிய முழு தர்சநமல்ல, தர்சநம் போன்ற மிக்க தெளிவான ஞானம். பாட்டினால் வரும் லயமும் ப்ராயேண அப்படியே. மோக்ஷத்தில் அடைவது உபய விபூதி விசிஷ்ட பரிபூர்ண ப்ரஹ்மத்தின் காட்சி இவர் அரங்கன் முன் அமலனாதிபிரான் பாடி அரங்கனருளால் அக்காட்சியைப் பெற்று முக்தரானார். இவர் அரங்கன் முன் பாடியதற்கு் தத்க்ஷணமே பரம புருஷார்த்த முத்தியே அரங்கன் அளித்த பரிசு. विशते तदनन्तरं (விசதே ததநந்தரம்) என்றபடி பரமாத்மாவிற்குள் நுழைந்து முக்திப் பேரின்பம் பெற்றார். இவர் முதலில் அரங்கனைப் பாட்டாலும் யோகத்தாலும் லயித்து் கண்டது தர்சந ஸமாநாகார மான தெளிந்த ஞானம். அந்தக் காட்சிக்கும், அரங்கனை நேரில் காணும் காட்சிக்கும் பேதமுண்டு. அரங்கனுடைய தர்சநம் இவருக்கு அரங்கனருளால்தான் கிடைத்தது என்பதை ஒருவரும் மறுக்கவொண்ணாது. இவர் வளர்ந்த குலம் அரங்கனருகில் செல்லக் கிடைக்கக்கூடிய குலமல்ல.
यमेवैष वृणुते तेन लभ्य: -- तस्यैष आत्मा विवृणुते तनूं स्वाम् (யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்) என்று கடவல்லியும் முண்டகமும் ஓதிவைத்தன. இந்த இரண்டு உபநிஷத்துகளும் இதே மந்த்ரத்தை ஓதின. "வேத புருஷன் இதை அபேக்ஷித்தான்" என்பது ஸ்ரீவசன பூஷணம். இந்த ச்ருதிக்கு நம் பாணநாதன் நேர் நிதர்சநம். அரங்கனே இவரைக் காட்சிதர வரித்துத் தனதருகே வருவித்துத் தன் காட்சியைப் பரிபூர்ணமாகத் தந்தான். தன் ஸ்வரூப விவரணம் செய்தான். அவன் "உவந்த உள்ளத்தனாய்" இவருக்கு விவரணம் செய்த திருமேனியை (தநுவை) இவர் உலகத்திற்குத் தன் பாடல்களால் விவரணம் செய்து இன்புற்று இன்பம் பயந்தார். अनुभूय हरिं शयानम् (அனுபூய ஹரிஸயானம்) (நாதமுனிகள் சாதித்த பாணன் தனியன் ச்லோகம்) என்றபடி தாம் அனுபவித்த இன்பத்தை உலகத்திற்குத் தம் பாடல்களால் சாச்வதமாக பயந்தார். "காட்டவே கண்ட" என்ற நம்பிகள் பாசுரத்தில் "பெருமாள் அருளால் வரித்து அவராகக் காட்டினதால்தான் கண்டார்" என்று यमेवैष(யமேவைஷ) ச்ருதியின் பொருள் ஸூசிக்கப் பட்டது. "ஆதி" என்பதற்கு "வலுவில் தாமாகவே முதலில் அழைத்தான்" என்னும் பொருளுரைக்கப் பட்டது. தான் முந்திக் கொண்டான். "தம்மை விஷயீகரிக்கைக்கு அடியானான்", "என் பேற்றுக்கு முற்பாடானானவன்" என்று பிள்ளையும் நாயனாரும் பணித்தார். "நல்லதோர் அருள்தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்" என்று பாடிய திருவரங்கம் காட்டும் அருள் இவர் வளர்ந்த குலத்திற்கு எட்டுவதல்ல. அரங்கன் அருளி பலாத்காரம் செய்யாவிடில் ஸந்நிதியில் கர்ப்பக்ருஹத்தில் ப்ரவேசம் இவருக்கு அக்காலத்தில் கிடைப்பது ஸாத்தியமோ? மநுஷ்ய யத்னத்தில் அஸாத்யமென்பது நிச்சயம். நந்தனாருக்குக் கிடைத்ததுபோல் இதுவும் கேவலம் தைவ யத்னம். பரமாத்மா தானே தன் காட்சியைத் தருகிறானென்பதை அரங்கன் தானே வற்புறுத்தி இவரை அழைத்துத் தந்து ஸர்வலோக ஸாக்ஷிகமாய் மூதலிப் பித்து அருளினார். இந்த ச்ருதியில் காட்டியபடி பரம புருஷன் தம்மை ப்ரியதமனாக வரித்துத் தம் திருமேனியைக் காட்டித் தந்தானென்பதை "என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்" என்று ஸூசித்தார் வாரம் = வரணீய வஸ்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக