அபீதி ஸ்தவம்
சுலோகம் 17
विषादबहुलादहं विषयवर्गतो दुर्जयात्
बिभेमि वृजिनोत्तरः त्वदनुभूतिविच्छेतः ।
मया नियतनाथवानयामिति त्वमर्थापयन्
दयाधन ! जगत्पते ! दयितरङ्ग ! संरक्ष माम् ॥
बिभेमि वृजिनोत्तरः त्वदनुभूतिविच्छेतः ।
मया नियतनाथवानयामिति त्वमर्थापयन्
दयाधन ! जगत्पते ! दयितरङ्ग ! संरक्ष माम् ॥
விஷாத³ப³ஹுளாத்³
அஹம் விஷயவர்க³தோ து³ர்ஜயாத்
பி³பே⁴மி வ்ருஜிநோத்தர: த்வத³நுபூ⁴திவிச்சே²த: |
மயா நியத நாத²வாந் அயம் இதி த்வம் அர்த்தா²பயந்
த³யாத⁴ந ! ஜக³த்பதே ! த³யிதரங்க³ ! ஸம்ரக்ஷ மாம் ||
பி³பே⁴மி வ்ருஜிநோத்தர: த்வத³நுபூ⁴திவிச்சே²த: |
மயா நியத நாத²வாந் அயம் இதி த்வம் அர்த்தா²பயந்
த³யாத⁴ந ! ஜக³த்பதே ! த³யிதரங்க³ ! ஸம்ரக்ஷ மாம் ||
வ்ருஜினோத்தர -- அதிக பாபமுடைய
(நான்), விஷாத பஹுளாந் -- துக்கமே அதிகமாயுள்ளதும், துர்ஜயாத் -- ஜயிக்க முடியாததுமான, விஷயவர்கத -- (சிற்றின்ப) விஷயங்களின் கூட்டத்தின் வலிமையினால்,
த்வதனுபூதி விச்சேத -- உம்மை அநுபவிப்பதற்குத் தடை ஏற்பட்டு விடுமோ
என்று, பிபேமி -- பயப்படுகிறேன், தயாதந -- தயைச்
செல்வம் நிறைந்தவரே, ஜகத்பதே -- லோகத்திற்கு
ஸ்வாமியே, தயிதரங்க -- ரங்கத்தில் ப்ரீதியை
உடையவரே, மயா -- என்னால், அயம் -- இவன், நியத நாதவாந்
-- கைவிடாத நாதனை உடையவன், இதி -- என்று, த்வம் -- நீர், அர்த்தாபயந் -- சொல்லிக்கொண்டு, மாம் -- என்னை, ஸம்ரக்ஷ:
-- நன்றாக ரக்ஷித்தருள வேணும்.
ஸ்ரீ அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி
செய்வினையோ
மிகப்பெரிதாம் தடையின்றி தொடர்கின்றேன்!
சகமிதிலே உறும்சுகங்கள் துயர்தனையே தருவனவாய்
செயிப்பதற்கும் அரியவையாய் திறமுளதை நானறிவேன்!
திருவரங்கைக் காதலுற்று தனியிடமாய்க் கொண்டவனே!
தயையென்னும் நிதியுடையாய் தரணிதனின் தனித்தலைவா!
நின்னுடைய அநுபவத்தில் தடையுறவே அஞ்சுகிறேன்!
நயந்துன்னை அடியேனே நாதனென வரித்ததனை
நற்பொருளாய்க் கொண்டென்னை நீதானே காத்தருளே! 17.
சகமிதிலே உறும்சுகங்கள் துயர்தனையே தருவனவாய்
செயிப்பதற்கும் அரியவையாய் திறமுளதை நானறிவேன்!
திருவரங்கைக் காதலுற்று தனியிடமாய்க் கொண்டவனே!
தயையென்னும் நிதியுடையாய் தரணிதனின் தனித்தலைவா!
நின்னுடைய அநுபவத்தில் தடையுறவே அஞ்சுகிறேன்!
நயந்துன்னை அடியேனே நாதனென வரித்ததனை
நற்பொருளாய்க் கொண்டென்னை நீதானே காத்தருளே! 17.
அன்பில் ஸ்ரீ ஏ.வி. கோபாலாசாரியார்
இந்த சரீரத்தின் முடிவில் மோக்ஷம் கிடைப்பது நிச்சயமாயிருந்தாலும், இங்கிருந்த நாள் உன் திருவடிகளில் பக்தி விச்சேதமின்றி இருக்க வேணும். பக்தியாவது இடைவிடாமல் ப்ரீதியுடன் உன் திவ்யமங்கள விக்ரஹத்தை தியானிப்பது. 'அப்படி அனுபவிக்கும் பேரின்பம் கிடைக்குமானால் வைகுண்டவாஸத்திலும் ஆசையில்லை' என்றல்லவோ எங்கள் துணிபு. ஆனால் அந்த பக்திக்கு விஷயங்கள் என்னும் ரூபரஸாதிகள் விரோதிகள். எங்கள் தியானத்திற்கு விஷயமான (ஆலம்பநமான) உம் திவ்யமங்கள விக்ரஹத்துக்கு ஆபத்து வந்தால் அதுவும் தியானத்திற்கு விரோதி. ஆகையால் விஷயங்களை அடியோடு விலக்க வேண்டும். இந்த விஷயமான உம் விக்ரஹத்தோடு நித்யயோகம் வேணும். உம்மை தியானிப்பதில் விச்சேதம் வந்தால் அதுவே எங்களுக்கு பயம். "உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாதபங்கயம் நண்ணிலாவகையே". அநாதிகாலமெல்லாம் விஷய ப்ரவணமாய் பகவதனுபவ விரோதியாகையாலும், "என்னுடைய சரீரே வர்த்தமானமாய் அத ஏவ அவர்ஜநீயமுமாய் ம்ருத்யு ஸத்ருஶயமுமாய் பயங்கரமுமாயிருந்த பஞ்சேந்திரியங்களாலும் விஷயங்களிலே என்னை ஆகர்ஷிப்பித்து" என்று பிள்ளான் பணித்தார்.
விஷாத பஹுளாத் -- துக்கமயமான; பகவான் ஆனந்தமயமாயிருப்பதற்கு எதிராக இவை துக்கப்ர சுரம்.
துர்ஜயாத் -- பெருமாளையும் வசப்படுத்தலாம் போலிருக்கிறது. விஷயங்களை ஜயித்து இந்திரியங்களை வசப்படுத்துவது அரிதாயிருக்கிறது.
வ்ருஜினோத்தர -- நான் உத்தரன் (உயர்ந்தவன்) ஆவது வ்ருஜினத்தாலேயே; 'க்ருபண ஸார்வபௌமன்', 'அபராத சக்ரவர்த்தி' என்றல்லவோ நான் பெருமையடைவது!
ஜகத்பதே! -- நீர் ஸ்வாமியாய், எல்லாம் உம்முடையதன்றோ? உம் ஸொத்தைக் கள்ளர் கொண்டுபோக விடலாமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக