வியாழன், 1 செப்டம்பர், 2016

अभीतिस्तव:

அபீதி ஸ்தவம்


சுலோக‌ம் 16
अनुक्षणसमुत्थिते   दुरितवारिधौ  दुस्तरे
          यदि  क्वचन  निष्कृतिर्भवति  साऽपि  दोषाविला |
तदित्थमगतौ  मयि  प्रतिविधानमाधीयतां
          स्वबुद्धिपरिकल्पितं  सपदि  रङ्गधुर्य  त्वया ||   


அநுக்ஷணஸமுத்தி²தே து³ரிதவாரிதௌது³ஸ்தரே
         யதி³ க்வசந நிஷ்க்ருதிர்பவதி ஸா
பி தோ³ஷாவிலா |
ததி³த்த²மக³தௌ மயி ப்ரதிவிதாநமாதீயதாம்
         ஸ்வபு³த்³திபரிகல்பிதம் ஸபதி³ ரங்க³துர்ய த்வயா ||

ரங்கதுர்ய -- ரங்கநாத!, அநுக்ஷண ஸமுத்திதே -- ப்ரதிக்ஷணமும் பெருகுகிறதும், துஸ்தரே -- தாண்டுவதற்கு அரிதானதுமான, துரிதவாரிதௌ -- பாபமாகிற கடல் விஷயத்தில், க்வசந -- (பிராயச்சித்த காண்டங்களில்) எங்காவது, நிஷ்க்ருதி -- பிராயச்சித்த விதி, யதி -- இருந்ததானால், ஸா அபி -- அந்தப் பிராயச்சித்தமும், தோஷாவிலா -- (ப்ரதிக்ஷணமும் பயங்கள் உற்பத்தியாகின்றன என்று முன் சொன்ன காரணத்தாலேயே) அசுத்தமாகவே, பவதி -- ஆகிறது, தத் -- ஆகையால் , இத்தம் -- இப்படி, அகதௌ -- வேறு கதியேயில்லாத, மயி -- என் விஷயத்தில், த்வயா -- உம்மால், ஸ்வபுத்தி பரிகல்பிதம் -- உம் புத்தியாலேயே ஆலோசிக்கப்பட்ட, ப்ரதிவிதாநம் -- ப்ராயச்சித்தம், ஆதீயதாம் -- செய்யப்பட வேண்டும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

கணந்தோறும் பெருகிவரும் கடத்தரிய வினைக்கடலைக்
கடப்பதற்கே நெறிவகுத்த கழுவாயைச் செய்தாலும்
அணைபோன்ற குற்றங்கள் அதுதனையும் குலைத்திடுமே!
ஆதலினால் கதியேதும் அற்றவனாய் நிற்கின்றேன்!
கணக்கிலாவென் தீவினைகள் கழிவதற்கே அரங்கா! நின்
கருத்தாலே தக்கதொரு கழிவாயைத் தோற்றுவித்து
எனையதிலே மூட்டுவித்து எவ்விதமாம் தடையுமற
எனையதனைச் செய்வித்து ஏற்றமுறச் செய்வாயே! 16.

அன்பில் .வி. கோபாலாசாரியார்

         ப்ரபத்தியை 'ஒருக்கால் அநுஷ்டித்தவனுக்கு நான் அபயப்ரதானம் செய்கிறேன்' என்றும், 'நீ ஒரு கைமுதலற்றவன்' என்றும் சொல்லுகிறாய். ஆனால் நீ ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தமான பிரபதனமென்னும் ந்யாஸவித்யையை அனுஷ்டித்தா லல்லவோ நான் உன்னை ரக்ஷிக்கலாம் என்றால், இந்த சுலோகத்தால் தான் அவனன்றி ஒன்றும் செய்ய முடியாத அகதி என்கிறார்.

         பிரபத்தி என்னும் பிராயச்சித்தத்தை அனுஷ்டிப்பதில் எவ்வளவோ தோஷங்கள் வரக்கூடும். உலகத்தில் ஒரு பாபத்துக்காக ஒரு பிராயச்சித்தத்தை ஆரம்பித்தால், இடையில் நேரும் தோஷங்களுக்காக வேறு பிராயச்சித்தங்கள்! இப்படி பிராயச்சித்தங்களின் தொடர்ச்சி  எல்லையில்லாமல் போய்க்கொண்டேயிருக்கும். ஸமுத்ரம் ஓய்ந்தவன்றுதான் எங்கள் பாபங்களும் ஓய்வது. ஆகையால் நான் செய்யப்போகும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும் உம்முடைய சுபமான ஸங்கல்பத்தால் நிர்தோஷமாயும், பூரணமாகவும் செய்து, நீர் காரயிதாவாய் (செய்விப்பவராய்) என்முகமாய் நடத்தி வைக்க வேணும். நாங்கள் செய்வது கிலமாயும் அபூர்ணமாயுமிருக்கும். (खिल) கிலமில்லாமல் பூரணமாகச் செய்வதில் நீர்தான் நிபுணர். निदानं तत्रापि स्वयमखिलनिर्माणनिपुण:  (நிதானம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண:) ப்ரபத்தி முதலிய உபாயங்களில் எங்களுக்கு அந்வயம் உம்மால்தான் ஏற்படவேண்டும். ஆகையால் அவ்வுபாயத்தைக் குறைவற நீரே செய்து வைக்கவேண்டும்.

         ரங்கதுர்ய -- ரங்கத்தின் ரக்ஷணபாரத்தை வஹிப்பவர் நீரல்லவா? அந்த ரக்ஷணப் பொறுப்பை நீர் ஏற்றுக்கொண்டு எங்கள் பயத்தைத் தீர்க்க வேண்டும் என்று தானே இப்போது செய்யும் பிரபதனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக