அபீதி ஸ்தவம்
சுலோகம் 15
सकृत्प्रपदनस्पृशामभयदाननित्यव्रति
न च द्विरभिभाषसे त्वमिति विश्रुत: स्वोक्तित: |
न च द्विरभिभाषसे त्वमिति विश्रुत: स्वोक्तित: |
यथोक्तकरणं विदुस्तव तु यातुधानादय:
कथं वितथमस्तु तत् कृपणसार्वभौमे मयि || (15)
कथं वितथमस्तु तत् कृपणसार्वभौमे मयि || (15)
ஸக்ரு̆த்ப்ரபத₃நஸ்ப்ரு̆ஶாமப₄யதா₃நநித்யவ்ரதி
ந ச த்₃விரபி₄பா₄ஷஸே த்வமிதி விஶ்ருத: ஸ்வோக்தித: |
ந ச த்₃விரபி₄பா₄ஷஸே த்வமிதி விஶ்ருத: ஸ்வோக்தித: |
யதோ₂க்தகரணம் விது₃ஸ்தவ து யாதுதா₄நாத₃ய:
கத₂ம் விதத₂மஸ்து தத் க்ரு̆பணஸார்வபௌ₄மே மயி || (15)
கத₂ம் விதத₂மஸ்து தத் க்ரு̆பணஸார்வபௌ₄மே மயி || (15)
तथावितथमस्तु
என்று
பாடபேதம்
ஸக்ருத் ப்ரபதா
ஸ்ப்ருஶாம் -- ஒரு தரம் ப்ரபத்தி என்னும் உபாயத்தைத் தொட்டவர்க்கும், த்வம்
-- நீர், அபயதாந நித்ய வ்ரதீ -- அபயமளிப்பதை நித்ய வ்ரதமாக உடையவர்
(என்று நீர் உத்கோஷித்திருக்கிறீர்), த்வி -- இரண்டாம் தடவை, க ச அபிபாஷஸே --
பேசமாட்டீர், இதி -- என்று, ஸ்வோக்தித -- உம்முடைய உறுதியான பேச்சாலேயே,
விச்ருத -- (நீர்) ப்ரஸித்தர், யாது தாநாதய -- ராக்ஷஸர் முதலியவரும், தவ
-- உம்முடைய, யதோக்த கரணம் -- சொன்னவண்ணம் செய்வதை, விது -- அனுபவித்துளர்,
தத் -- அந்த குணம், க்ருபண ஸார்வபௌமே -- கார்ப்பண்ய பூர்த்தியுள்ள அகிஞ்சநரில்
முதன்மையான, மயி -- என் விஷயத்தில், கதம் -- எப்படி, விததம் அஸ்து --
பொய்யாக ஆகலாம். ?
அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி
ஒருமுறையே சரணமென உன்னிடமே உற்றவர்க்கு
அபயந்தனை அளிக்கின்ற அருஞ்செயலை விரதமென
நிரந்தரமாய்க் கொண்டுளதாய் நீதானே வெளியிட்டாய்!
நீயேதான் இருமுறைகள் நானுரையேன் என்றுரைத்துப்
பெரும்புகழைப் பெற்றுள்ளாய்! பகர்வதையே செய்பவனாய்
புவியிலுனை அரக்கர்களும் முதலானோர் அறிந்துள்ளார்!
ஒருபுகலும் அற்றவரின் ஒப்பற்ற தலைவனென
உறுமெனக்கு உன்விரதம் வீணாக ஆகிடுமோ? 15.
அபயந்தனை அளிக்கின்ற அருஞ்செயலை விரதமென
நிரந்தரமாய்க் கொண்டுளதாய் நீதானே வெளியிட்டாய்!
நீயேதான் இருமுறைகள் நானுரையேன் என்றுரைத்துப்
பெரும்புகழைப் பெற்றுள்ளாய்! பகர்வதையே செய்பவனாய்
புவியிலுனை அரக்கர்களும் முதலானோர் அறிந்துள்ளார்!
ஒருபுகலும் அற்றவரின் ஒப்பற்ற தலைவனென
உறுமெனக்கு உன்விரதம் வீணாக ஆகிடுமோ? 15.
அன்பில் ஏ. வி. கோபாலாசாரியார்
பெருமாளைத்தவிர தனக்கு வேறு கதியில்லை
என்று கூறிவிட்டு, இதில் தன்னிலும் க்ருபணனில்லை என்கிறார். தனக்கு வேறு கதியில்லாதது
போலவே பெருமாளுடைய தயைக்கும் தன்னைத்தவிர வேறு கதியில்லை. அதாவது தயையைக்
காட்ட தானே உத்தமமான பாத்ரம். முலைக் கடுப்பாலே கன்றுக்குப் பாலைக் கொடுத்தல்லது
பசு நிற்கவொண்ணாதாற் போலே ரக்ஷ்யனை ரக்ஷித்தல்லது தரிக்கமுடியாது
பெருமாளுடைய தயையினால்.உம் அபயப்பிரதான வ்ரதம் நித்யம். ஒரு தடவை உபாய
ஸ்பர்சம் ஒருவனுக்கு ஏற்பட்டால் அவனைக் காப்பாற்றும் வரையில் நீர் கடனாளியாய்
ஸஜ்வரராய் இருக்கிறீர். மனோரதத்தைப் பூர்த்தி செய்த பிறகே விஜ்வரராய் ப்ரமோதத்தை
(ஆனந்தத்தை) அடைகிறீர்.
ஸேதுக்கரையில் வந்து सकृदेव प्रपन्नाय (ஸக்ருதேவ ப்ரபந்நாய) "ஒருக்காலே சரணாக
அடைகின்றார்க்கும்" என்று தன் விரதத்தை உத்கோஷித்தார். அதையே இங்கு ஸக்ருத்
-- ப்ரபதந -- ஸ்ப்ருஶாம் என்று அநுவதிக்கிறார். सर्वभूतेभ्य: अभयं ददामि, एतत् मम व्रतम् (ஸர்வபூதேப்ய, அபயம்
ததாமி, ஏதத் மம வ்ரதம்) என்றதையும் இங்கு அநுஸரிக்கிறார். ததாமி என்பதில்
"லட்" (நிகழ்காலத்தைக் குறிப்பது) ஸார்வகாலிகம். ஆகையால் மூன்று
காலங்களையும் சொல்லுகிறது.இந்த விரதத்தை ஸ்வபாவிகமாக உடையவர். रामो द्विनाभिभाशते (ராம: த்வி:ந அபிபாஷதே) என்று உமது
வார்த்தை. உம்முடையது வெறும் பேச்சல்ல, ராக்ஷஸர்களுக்கும் அவர்களுக்குத் தலைவனான
விபீஷணனுக்கும் மெய்யரானீர். "அவர் ஸார்வபோமன்" என்றால் நானும்
அப்படியே. அடியேன் க்ருபண ஸார்வபௌமன். நீர் "யதோக்தகாரீ" என்று
ப்ரஸித்தரல்லவா? "யதோக்தகாரணம்" என்று நம்பெருமாள் திருநாமத்தையும்
நினைப்பூட்டுகிறார். என்னை ரக்ஷியாவிட்டால் திருநாமமே பொய்யாய்விடும். "தாஸேஷு
ஸத்யன்" "அடியவர்க்கு மெய்யன்" என்னும் திருநாமத்தைத் தரிக்கச்
செய்யும் என்று தேவநாயகன் துதி.
ஸ்ப்ருஶாம் -- ப்ரபத்தியில் ஸம்பந்தப்படும்
க்ஷணத்திலேயே அபயதானம் ஸங்கல்பிக்கப் படுகிறது. உபாய ஸ்வரூபம் க்ஷணஸ்பர்சமாயுள்ளது.
செய்யும் ப்ரபதநத்தில் தொட்டுக்கொள்ளும் அநுபந்திகளும் ரக்ஷிக்கப் படுகிறார்கள்.
விபீஷணாழ்வானோடு கூட வந்த நாலு ராக்ஷஸர்களும் ரக்ஷிக்கப் பட்டார்கள்.
அதற்கு இவர் செய்த ப்ரபத்தியில் அவர்களுக்கும் ஸ்பர்சம் ஏற்பட்டதே காரணம்.
(15)
Great read thaank you
பதிலளிநீக்கு