அபீதி ஸ்தவம்
சுலோகம் 14
भवन्ति मुखभेदतो भयनिदानमेव प्रभो !
शुभाशुभ विकल्पिता जगति देशकालादय: |
इति प्रथितसाध्वसे मयि दयिष्यसे त्वम् न चेत्
क इत्थमनुकम्पिता त्वदनुकम्पनीयश्च
क: ||
ப₄வந்தி முக₂பே₄த₃தோ ப₄யநிதா₃நமேவ ப்ரபோ₄ !
ஶுபா₄ஶுப₄ விகல்பிதா ஜக₃தி தே₃ஶகாலாத₃ய: |
இதி ப்ரதி₂தஸாத்₄வஸே மயி த₃யிஷ்யஸே த்வம் ந சேத்
க இத்த₂மநுகம்பிதா த்வத₃நுகம்பநீயஶ்ச க: ||
ப்ரபுவே -- என் ப்ரபுவே!,
ஶுபாஶுப விகல்பிதா -- சுபம் அசுபம் என்று பிரித்துப் பேசப்படும், தேஶகாலாதய
-- தேசம் காலம் முதலியவை, முகபேதத -- ஓரொரு பர்யாயமாக, பயநிதாநமேவ --
பயத்திற்கே காரணமாக, பவந்தி -- ஆகின்றன, இதி -- என்று (இப்படி), ப்ரதிதஸாத்வஸே
-- மிகவும் பரந்த பயத்தையுடைய, மயி -- என்னிடம், த்வம் -- நீர், ந தயிஷ்யஸே
சேத் -- தயவு செய்யாது போனால், இத்தம் -- இப்படி, க: அனுகம்பிதா -- வேறு
யார் தயை செய்வாருளர்?, த்வதுகம்பநீய: ச -- உம் தயைக்குத் தக்க பாத்ரம், க: --
(என்னிலும்) யாருளர்?
பாட பேதங்கள்
(1) प्रचुरसाध्वसे (2) इत्थमनुकम्पते
அன்பில் ஸ்ரீனிவாசன்
ஸ்வாமி
நல்லவையே தருமென்றும் தீயவையே தருமென்றும்
தேசத்தையும் காலத்தையும் திறம்படவே பிரித்தாலும்
எல்லாமே வெவ்வேறு வழிகளிலே தீமையையே
அளிக்கும்படி அமைந்தனவாய் அச்சத்தையே தருமென்றே
எல்லையிலா பயம்கொண்ட என்மீதே அரங்கா! நீ
இரக்கம்தான் கொள்ளாயேல் இவ்வாறு அருள்புரியும்
நல்லானும் வேறுளனோ?
நிலவுலகில் நின்னுடைய
நல்லருளைப் பெறும்தகுதி நிறைந்தவனும் வேறுளனோ? 14.
அன்பில் ஸ்ரீ ஏ.வி. கோபாலாசாரியார்
20-வது
சுலோகத்தில் தன் சரணாகதிக்குப் பலத்தைக் குறிப்பிட்டு ப்ரார்த்திக்கிறார்.
அதற்கு முன் பெருமாளுக்கு தயை உண்டாகி வளரும்படி தம் பயத்தையும் கோயில்
முதலிய திவ்ய தேசங்களில் திவ்யமங்கள விக்ரஹங்களை ஸதா ஸேவித்துக்
கொண்டிருப்பதே தனக்கு ஸுகத்தைத் தரும் என்பதையும், அதை அளிக்க பெருமாளைத்தவிர
வேறு கதி இல்லை என்பதையும் சொல்லி வருகையில் இதில் ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தின்
பதங்களையே அமைத்துப் பிரார்த்திக்கிறார். பெரியோர்கள் பாசுரத்தை அநுஸரித்துப்
பிரார்த்தித்தால், பெருமாள் திருவுள்ளம் சீக்கிரம் உகக்கலாம் என்று ஆசை. ஆளவந்தார்,
यदि मे न दयिष्यसे ततो दवनीयस्तव नाथ दुर्लभ: (யதி மே ந தயிஷ்யஸே ததோ தயநீய: தவ நாத துர்லப:) என் விஷயத்தில் நீர் தயை செய்யாவிடில், உமக்கு
தயை செய்யத் தக்கவனே கிடைக்க மாட்டான். உம்மலால் நான் நாதசூன்யன். என்னலால்
நீர் தயாபாத்ர சூன்யர், தைவத்தால் எற்பட்டிருக்கும் இந்த ஸம்பந்தத்தை நீர்
காப்பாற்ற வேணும். मा स्म जीहप: (மா ஸ்ம ஜீஹப:) நழுவ விடக்கூடாது என்றார். இவரும் பதினெட்டாவது
சுலோகத்தில் மாஸ்ம தஜ்ஜீஹபத் என்று அதையே கூறுகிறார்.
உலகத்தில் தேசம் காலம் முதலியவற்றில்
சிலவற்றை சுபமென்றும், சிலவற்றை அசுபமென்றும் பிரிப்பது வீணே. எல்லாம் பயத்தையும்
துக்கத்தையும் தருவதால், உண்மையில் எல்லாம் அசுபமே. ஸ்வர்க்கம் சென்றால்தேவர்கள்
இவனை "பசு" என்று எண்ணுகிறார்கள். அங்கு ஏறவிட்ட கர்மம் விசையற்றவளவிலே
கீழே விழுந்து விடுவோம் என்ற பயமுமுண்டு.
(14)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக