51. ஸ்ரீபாதுகா ஸேவகத் திருநாமம்
ஸ்ரீதேசிகனுக்குப் பாதுகையின் தொடர்புள்ள பெயர் தமக்கு வாய்க்க வேண்டுமென்று ஒர் ஆசை. திருவரங்கனுக்கு அந்தரங்கரான அடியார்கள் தம்மைப் பாதுகா ஸேவகா என்ற பெயரைச் சொல்லி அழைக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றர். உண்மையில் தேசிகனைக் காட்டிலும் பாதுகைக்கு ஸேவை செய்தவர் யார்? அழகான பெயர். இனிய சொற்களின் சேர்த்தி. அக்ஷரவர்க்கங்களில் வலிய ஓசையுடைய இரண்டாவது நான்காவது எழுத்துக்களின் வாடையே இல்லாத பெயர். கூட்டெழுத்து ஒன்றுமில்லாத தனி எழுத்துக்களின் இணைப்பு. ஒசையும் இனியது. தேசிகனே பெற ஆசைப்பட்ட இத் திருநாமம் ஸ்ரீதேசிக தர்சந கோஷ்டியில் செல்வாக்குப் பெறாத காரணம் பாதுகையைத்தான் கேட்க வேண்டும். ஆனால் இரண்டு ஆசார்யர்கள் மட்டும் இத்திருநாமத்தைப் பெறும் பேறுடையர். முதலில் திருக்குடந்தை தேசிகனுக்குப் பகவத் விஷய ஆசார்யனான ஸ்வாமி. பின் ஸ்ரீமத் பெரியாண்டவன் திருவடிக்குப் பாதுகையாய் விளங்கிப் பல சாஸ்த்ரீய க்ரந்தங்களை அருளிச் செய்த ஸ்ரீமத் சின்னாண்டவன் ஸ்வாமி. இந்த இரண்டு ஆசார்யர்களே தேசிகன் ஆசைப்பட்ட திருநாமத்தைப் பெற்ற பாக்யவான்கள். இவர்களுக்கு முன்போ பின்போ ஒருவரும் இத்திருநாமத்தை ஏந்தியதாய்த் தெரியவில்லை.
52. பின்பு இத்திருநாமத்தைப் பற்றிய பிரஸ்தாபம்
பல்லாண்டுகட்கு முன் தேரழுந்துார் ஸ்ரீமத் ஆண்டவன் திரு விண்ணகரப்பன் திருவடிவாரத்தில் சில மாதங்கள் எழுந்தருளியிருந்து காலசேஷபம் ஸாதித்துக் கொண்டிருக்க நேரிட்டது. பல சிஷ்யர்கள் அப்பொழுது இங்கு வந்து காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தனர். அடியேனுடைய குடிசைக்கு எதிரில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் அமைந்தது அடியேனது பாக்யம். அடியேனுடைய ஆசார்யனும் திருத்தகப்பனாருமாகிய ஸ்ரீ நவநீதம் ஸ்வாமி அடிக்கடி ஆச்ரமத்துக்கு எழுந்தருள்வதையும் ஸெளஹார்த்த பரிவாஹமாக இரண்டு மஹான்களும் உரையாடுவதையும் கண்டிருக்கிறேன். ஸ்ரீமத் ஆண்டவன் அடியேனிடம் வர்ஷித்த கிருபையை நினைந்து அடிக்கடி அங்கு விடை கொண்டு அடியேன் நெருங்கி வர்த்திக்கும் பாக்யமும் பெற்றேன். கனிந்த திருவுள்ளத்தோடு பல நல்லுரைகளை அருளக் கேட்டுப் பெருநலம் பெற்றேன். பரந்யாஸத்தை விளம்பிக்காமல் அடியேன் திருத்தகப்பனர் ஸந்நிதியில் செய்துகொள்ளும்படி அடியேனை வற்புறுத்தி நியமித்து அவ்வாறே நடத்தச் செய்து திருவுள்ளம் குளிர்ந்த ஸ்ரீமத் ஆண்டவனுடைய மஹோபகாரம் எந்நாளும் மறக்க முடியாது. ஒரு நாள் 'பாதுகாஸேவக' என்ற தேசிகன் ஆசைப்பட்ட திருநாமம் உரிய செல்வாக்கைப் பெறாததை அங்கு விண்ணப்பித்துக் காரணத்தை அறிய விரும்பினேன். அப்பொழுது ஸ்ரீமத் ஆண்டவன் அருளிய விடை --'என்னுடைய ஆசார்யனுக்கு அந்தத் திருநாமம் அமைந்ததற்கு ஸந்தோஷித்து தினந்தோறும் அநுஸந்தித்து வருகிறேன். எனக்கு அந்தத் திருநாமம் வரப்ரஸக்தியில்லை. உலகில் தகப்பனர் பெயரைப் புத்திரன் வைத்துக் கொள்வதில்லையே! இனி வரப்போகும் என் ஜ்ஞாநஸந்ததியாரைப் பற்றி நான் இப்பொழுது எதுவும் சொல்வதற்கில்லை. மற்ற ஆசார்ய பரம்பரையைப் பற்றி நான் சொல்வதற்கில்லை' என்று மிக அழகாய் ஸாதிக்கும்படி இருந்தது. அருகில் இருந்த அந்தத் திருவடியைச் சார்ந்த ஒருவர் தேசிகன் அத்திரு நாமத்தை ஆசைப்பட்டது தம் கடைசிக் காலத்தில் என்று தெரிவதால் அப்பெயரை வைத்துக்கொள்ள அஞ்சக்கூடும் என்றார். அதற்கு அடியேன் தேசிகனுக்குத் தம் வாழ்நாள் முழுதும் அப்பாக்கியம் கிட்டாவிட்டாலும் கடைசிக் காலத்திலாவது ஒரு முறையாவது அழைக்கப்பட்டால் திருப்தி பெறுவதாகத் தான் திருவுள்ளம் என்று விண்ணப்பித்தேன். திருவுள்ளம் மிகவும் உகந்தபடி,
53. இப்பொழுதைய ஸ்ரீமத் ஆண்டவன்
இப்பொழுது ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யகம் செய்துவரும் மஹாபுருஷரான ஸ்ரீமத் ஆண்டவனைப் பற்றிச் சில விஷயங்களை விண்ணப்பம் செய்ய முற்படுகின்றேன். பூர்வாச்ரமத்தில் பால்யம் முதலே , ஸ்வாமியும் அடியேனும் மிக நெருங்கிப் பழகியவர்கள். விண்ணகரும் குடந்தையும் அடுத்து உள்ளது தானே! பின்பு நேர்ந்துள்ள பந்துத்வமும் உண்டு. அடிக்கடி அருளிச் செயல் கோஷ்டியில் சேர்ந்து கைங்கர்யம் செய்யப் பெற்றதும் உண்டு. கலியன் திருநெடுந்தாண்டகத்திலும் பெரிய திருமடலிலும் திருவிண்ணகரப்பனை ஸேவித்துத்தான் அமுதனைப் போற்றியதாகப் பெருமையோடு பேசுவேன். ஸ்ரீஸ்வாமி, கலியன் திருவண்ணகரனை ஸேவித்து விட்டு அவனுக்கும் மேல் பரமப்ராப்யனாக அமுதனைப் பேசிப் பிறகு செல்லவேண்டிய இடமில்லையென்று பிரபந்தத்தைத் தலைக்கட்டி விட்டதாய் ஸாதித்து அடியேன் வாயை அடக்கி விடுவதுண்டு. மேலும் ஒருநாள் கோஷ்டியில் ஸ்ரீமதாண்டவன் மேற்கூறிய இரண்டு எம்பெருமான்களையும் சேர்த்துக் கலியன் பாடிய பாசுரங்களில் திரு விண்ணகர்ப் பெயர் வரும்போது அடியேனுடைய கைகள் குவிந்து அஞ்சலி செய்துவிட்டு, அடுத்துத் திருக்குடந்தைப் பெயர் வரும் போது அடியேன் கைகள் இறங்கி விடுமென்றும் வேடிக்கையாக ஸாதித்தாயிற்று. அதற்கு அடியேன் விண்ணப்பித்தது -- விண்ணகர்ப் பேச்சு வரும்போது செயலற்று இருந்த ஸ்ரீமத் ஆண்டவன் திருக்கைகள் குடந்தைப் பேச்சு வரும்போதே ஆர்வத்துடன் எழுந்து குவியும் என்று தத்தம் பெருமானிடத்தில் உள்ள ஈடுபாட்டின் விளைவாக வரும் பாஷணங்கள் இவை. நித்ய விபூதியில் கூட பகவத் குணாநுபவத்தில் பிணக்கு உண்டே. ஸ்ரீமத் ஆண்டவனோடு சுவையான சம்பவங்கள் இவ்வாறு பல.
54. அருளிச் செயலில் நோக்கு மிகுதி
ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்துக்கு அருளிச் செயலிலும் பகவத் விஷயத்திலும் மிகுதியான நோக்கும் ஆதரமும் உண்டென்பது பலர் கண்ட உண்மை. ஸ்ரீமத் பெரியாண்டவனுக்குப் பெரும்பாலும் பகவத் விஷய காலக்ஷேபத்திலேயே பொழுது போக்கென்று கேள்விப்பட்டுள்ளோம். பின்பு தேரெழுந்தூர் ஸ்ரீமத் ஆண்டவன் ஸாதாரண வார்த்தைகளில் கூட ஆழ்வார் ஸூக்தியைப் பயன் படுத்திப் பகவதநுபவத்தில் மூழ்கி மனமுருகிக் கண்ணீர் விட்டுத் தமக்கு இயற்கையாய் அமைந்த இன்சொற்களைக் கொண்டு கேட்பவர்களின் உள்ளத்தை உருக்கி அனுபவத்தில் ஆழ்விப்பது அடியேன் உள்பட பலரும் கண்கூடாகக் கண்ட உண்மை. அந்த ஸம்ப்ரதாயத்தில் அந்த ஸ்தாநத்தை அலங்கரித்துக் கொண்டு அவ்வாசார்யனுடைய திவ்ய கடாக்ஷத்தாலேயே தாம் ஸத்தை பெற்ற உணர்ச்சியோடு எழுந்தருளியிருக்கும் இப்பொழுதைய ஸ்ரீமத் ஆண்டவன் பால்யத்திலேயே ஸாமாந்ய சாஸ்த்ராப்யாஸம் செய்து நம்மாண்டவன் ஸ்ந்நிதியில் அத்யாத்ம ஜ்ஞாநத்தையும் விசேஷமாகப் பெற்று ப்ரவசநம் செய்துகொண்டு விளங்கிய போதிலும் அருளிச் செயலிலும் பகவத் விஷ்யத்திலுமே வலத் திருக்கண்ணோக்கு அதிகமென்பதை உலகமே அறியும்.ஸ்ரீமத் ஆண்டவன் சேதநர்கள் நல்வாழ்வு பெறுதலையே குறிக்கோளாகக் கொண்டு தம்முடைய சிரமத்தைச் சிறிதும் பொருட் படுத்தாமல் ஆங்காங்குத் தாமே எழுந்தருளி ஆயிரக் கணக்கான வைதிகர் -- லெளகிகர் -- பண்டிதர்-- பாமரர் ஆகிய அனைவருக்கும் உள்ளத்துப் பதியுமாறு தமக்குப் பாதுகைகள் அருளிய பேச்சுத் திறனைக் கொண்டு அருளிச் செயலையே முதல் துணையாகக்கொண்டு செய்தருளும் உபந்யாஸங்களால் பலரும் ஞானம் பெற்று ஆத்ம காரியங்களையும் செய்துகொள்வது ஸம்ப்ரதாயத்துக்கும் ஸித்தாந்தத்துக்கும் பரம லாபம். தம் திருமேனி நலிவைப் பெரிதாகக் கொள்ளாது மற்ற ஆசார்யர்களால் கனவிலும் கருத முடியாத பற்பல புண்ய க்ஷேத்திரங்களுக்கும் புண்யகிரிகளுக்கும் புண்யதீர்த்தங்களுக்கும் புண்யவனங்களுக்கும் பாதயாத்ரையாக எழுந்தருளி ஒவ்வோரிடத்திலும் பல்வேறு மக்களுக்குத் தம் இனிய சொற்பொழிவுகளால் அறிவூட்டி உய்விக்கச் செய்தது இந்த ஸ்ரீமத் ஆண்டவனுக்கு உள்ள தனிச் சிறப்பு.
55. ஸ்ரீமத் ஆண்டவன் எழுபது திருதக்ஷத்ரப் பூர்த்தி
புரீமத் ஆண்டவன் யாத்திரை முடிந்து திருமயிலை ஆச்சிரமத்துக்கு எழுந்தருளும் வாய்ப்பு வந்துள்ளது. இவ்வாண்டின் பங்குனி மாதத்துப் புஷ்யத்தில் 70வது திருநக்ஷத்ர பூர்த்தி மஹோத்ஸவம் நெருங்குகின்றது. இதனை மிக்க விபவத்துடன் நடத்திக் கண்குளிரக் கண்டு மகிழப் பல சிஷ்யர்களும் ஆப்தர்களும் பாரிக்கின்றனர். நம் தர்சநஸ்தாபகரான எம்பெருமானாரின் 16வது ஷஷ்ட்யப்த பூர்த்தி மஹோத்ஸவமும் பிங்கள ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் வருகின்றது. யதிராஜருடைய மஹோத்ஸவம் அணுகும்போது அதை மிக்க விபவத்துடன் நடத்திய பின்பே யதிவரரான தமது மஹோத்ஸவத்தை நடத்த வேண்டுமென்று தம் திருநகஷத்ரத்தை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைத்து நடத்தும்படி தம் சிஷ்யர்களுக்கும் கமிட்டியாருக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் நியமித்தது எம்பெருமானார் திருவடியில் உள்ள பரம பக்தியின் விளைவேயாகும். திருநக்ஷத்ரமஹோத்ஸவம் முதலிய சுப காரியங்களில் அருளிச் செயலின் ஓசையே கேட்கக் கூடாது என்று ஸ்ரீதேசிக ஸம்ப்ரதாயத்தில் ஊன்றிவிட்ட விபரீத நிர்ப்பந்தத்துக்கும் பங்கமின்றி எம்பெருமானாரை உத்ஸவத்துக்கு அங்கமாகவும் புஷ்யத் திருநக்ஷத்ரத்தன்று சேரும் ஸ்ரீமத் பெரியாண்டவன் திருநக்ஷத்ரத்துக்கு அங்கமாகவும் அருளிச் செயலின் அநுஸந்தாநத்துக்கு வாய்ப்பை அளித்தது பாதுகையின் ஸங்கல்பம். இத்துடன் வேத வேதாந்த பாராயண கோஷ்டியையும் ஸ்ரீபாஷ்யாதி வித்வத் ஸதஸ்ஸையும் ஸ்ரீபாஷ்யகாரர் திருவீதியில் எழுந்தருளி அநுக்ரஹிப்பதையும் ஸ்ரீமத் ஆண்டவனுடைய 70வது திருநகஷத்ர பூர்த்தி மஹோத்ஸவத்தையும் தலத்துப் பெருமாளாகிய ஸ்ரீநிவாஸனும் அலர் மேல் மங்கையும் தலத்துத் தோன்றிய பேயாழ்வாரும் திருக்கோயிலின் உரிமையாளரான ஸ்ரீதேசிகனும் கண்குளிரக் கடாக்ஷித்து மகிழப் போகின்றனர். மற்றுமொரு விசேஷம். ஸ்ரீமத் ஆண்டவனுக்கு வழி படும் குலதெய்வமாகிய ஆராவமுதனும் தான் பெற்றெடுத்து வளர்த்த குழந்தையின் 70வது திருநக்ஷத்ர பூர்த்தி மஹோத்ஸவத்தைத் தானும் கண்டருள விரும்பித் திருவனந்தாழ்வான்மீது பிராட்டியுடன் அமர்ந்து தன் வைச்வரூப்யத்துக்கேற்ற திருக்கண்களைத் திருமயிலைக்குச் செல்லவிட்டு மஹோத்ஸவத்தைக் கண்டு களித்து ஸ்ரீமத் ஆண்டவனைப் பரிபூர்ணமாய் அனுக்ரஹித்துச் சதாபிஷேக மஹோத்ஸவத்தை இன்னும் மிக்க விபவத்தோடு நடத்துவதற்கு இப்பொழுதே ஸங்கல்பம் கொள்ளப் போகின்றான். (70வது பூர்த்தியன்று அமுதனது சித்திரைத் திருநாள் முன்ருவது உத்ஸவம்-சேஷவாகனமென்பதை நோக்குக.) ஆயிரக்கணக்கான சிஷ்யர்களும் ஆப்தர்களும் ஆஸ்திகர்களும் இம்மஹோத்ஸவத்தில் கலந்து திருவயிறும் திருவுள்ளமும் திருக்கையும் நிரம்பப்பெற்று மகிழப் போகின்ருர்கள்.
56. அடியேனது முடிவுரை
இம்மஹோத்ஸவத்தின் பகுதியாகச் சித்திரை மாதத்தில் வெளிவரப்போகும் பாதுகையின் விசேஷ மலருக்கு ஒரு வியாசம் வரைந்து அனுப்புமாறு கமிட்டியைச் சார்ந்த ஆப்தர்கள் நியமித்தார்கள். அவர்கள் நியமநத்தை ஏற்று நடப்பது அடியேன் ஸ்வரூபம். பாதுகா ஸம்ப்ரதாயத்தில் பாதுகைகளின் திருமுன்பே பாதுகையின் ஸங்கல்பத்தால் நடக்கப்போகும் இம்மஹோத்ஸவத்தில் வெளிவரும் பாதுகை மலருக்கு பாதுகையைப்பற்றியே வியாசத்தை வரைய விரும்பினேன். இந்த வியாஜத்தாலாவது ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தை ஸேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. அதை ஸேவித்து வரும்போது அடியேனுடைய சிற்றறிவுக்கு மிகச் சுவையாய்த் தோற்றிய அம்சங்களை வியாசமாக வரைந்தேன். உள்ளவுணர்ச்சிகளால் வியாசம் பெரிதாய் அமைந்து விட்டது. வியாசம் வரைபவருக்குச் சுதந்திரம் இருப்பது போல் மலர் அச்சிடும் நிர்வாகிகளுக்கும் வியாசத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளும் சுதந்திரம் உலகில் நடையாடுகின்றது. ஆனல் பாதுகாமயமாகவே அமைந்துள்ள இந்த வியாசம் அப்படியே வெளி வருமென்ற தைரியமும் உண்டு. அடியேனுடைய அறிவுக் குறைக்கு ஏற்றவாறு வியாசம் எழுதுவதற்கே அடியேனுக்கு உரிமை உண்டு. இதைப் பற்றிய குணதோஷங்களே ஆராய்ந்து முடிவு செய்ய இதைக் கடாக்ஷிiப்பவர்க்கே உரிமை உண்டு. அநந்த ப்ரணாமங்களுடன் இந்த வியாசத்தைக் கமிட்டியாரிடம் ஸமர்ப்பிக்கின்றேன்.
---------------حس محماسه ح----------
பாதுகா சாம்ராஜ்யம் நிறைவு பெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக