ஞாயிறு, 24 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 7

சிசுவின் உச்சி முகர மந்த்ரம்

    ஓ பாலகனே! நீ கல்லைப் போல உறுதியாகவும், ஸ்திரமாகவும் (நிலைத்தும்) இரு. நீ உன் சத்ருக்களிடத்தில் பரசுராமரின் கையில் உள்ள ‘பரசு" என்ற ஆயுதம் போல் (உன்னைப் பார்த்ததுமே சத்ருக்கள் அஞ்சும்படியாக) விளங்குக. மாசற்ற தங்க விக்ரஹம் போல் இருப்பாயாக. பசுக்கள் தான் பெற்ற கன்றை ஆசையுடன் ஒரு ஹூங்காரத்துடன் முஹர்ந்து பார்பதுபோல நானும்  உன் உச்சந் தலையை முகர்ந்து பார்க்கிறேன்.  - அஸ்மா பவ.
    அசௌ என்கிற இடத்தில் குழந்தையின் ஜனன நக்ஷத்திரத்தையே பெயராக்கி அழைக்க வேண்டும். அஸ்விநியானால் - ஆஸ்வயு, ரோஹிணிக்கு ரௌஹிணேய, ரேவதிக்கு ரைவத இப்படியே 27 நக்ஷத்திரத்திற்கும் அறிந்துகொள்ளவும்.
    தேனையும், நெய்யையும் கலந்து, அதில் தர்பத்தால் சுற்றப்பட்ட தங்கத்தைப் போட்டு பின்வரும் 4 மந்திரத்தால் சாப்பிடக் கொடுக்கவேண்டும்.
    1. மேதாந்தே :- உனக்கு ப்ரகாசிக்கும் ஸூர்ய தேவனும், விளங்கும் ஸரஸ்வதீ தேவியும், தாமரை மலர்மாலை அணிந்து அச்விநீ தேவர்களும் மேதைத்தன்மையை அநுக்ரஹிக்கட்டும். (கேள்வியினால் பெற்ற ஞானத்தை மறவாத புத்தி).
2-4 :- த்வயி மேதாம் :- உனக்கு மேதை, ஸந்ததி, தேஜஸ், பலம், இந்திரிய சக்தி, சரீர காந்திகளை அக்னி, இந்த்ரன், ஸூர்யன் ஆகிய தேவதைகள் ஏற்படுத்தட்டும்.
    பிறகு பின்வரும் ஐந்து மந்த்ரங்களால் சிசுவுக்கு ஸ்நாநம் செய்விக்கவேண்டும். தயிரையும் நெய்யையும் கலந்த உணவான ப்ருஷதாஜ்யத்தை ப்ரணவத்துடன் கூடிய பூ, புவ:, ஸுவ:, வ்யாஹ்ருதிகளினால் அருந்தச் செய்து, மீதியை ஜலத்தில் கரைத்து மாட்டுத் தொட்டியில் சேர்த்துவிடவேண்டும்.
    க்ஷேத்ரியைத்வா :- குணப்படுத்த இயலாத நோய்கள், நிருருதி முதலிய ரக்ஷஸ் - பிசாசங்கள், த்ரோஹி, வருண பாசம் (நீரினால் உண்டாகும் நோய்), மஹோதரம் என்னும் வயிற்றுக் கட்டி போன்றவற்றால் பாதிக்கப்படாமல் உன்னை காக்கின்றேன். உன்னை பாபமற்றவனாக்கி, வேத அத்யயனத்திற்குத் தகுதியுள்ளவனாகச் செய்கிறேன். ஆகாயமும் பூமியும் நன்மைகை; கொடுப்பவையாக அமையட்டும்.
    சந்தே அக்நி: :- ஜலம், அக்னி, செடி கொடிகள், பூமி, ஆகாசம், காற்று, அந்தரிக்ஷம் எனும் வான்வெளி, கிழக்கு முதலிய நான்கு திக்குகள் போன்ற அனைத்துத் தத்வங்களும் சுகத்தை அளிக்கட்டும்.
    யாதைவீ: :- இந்த்ரன், அக்நி, யமன், நிருருதி, வருணன், வாயு, ஸோமன், ஈசானன் ஆகிய எட்டு திக்குகளுக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலகா தேவதைகளின் திக்குகளை ஸூர்ய தேவன் கடாக்ஷத்தால் நிலைத்திருக்கின்றனர், அவர்கள் நாசமாகமல் நிலைத்திருக்கும் காலம்வரை நீயும் நீண்ட நிலைத்த ஆயுளைப் பெற்றவனாககச் செய்கிறேன். உன்னிடமுள்ள யக்ஷ்ம ரோகம் நிருருதியினிடம் போகட்டும்.
    அமோசி யக்ஷ;மாத் :- இதுவரை மந்த்ர பூர்வமாகச் செய்யப்பட்ட ஸ்நாநத்தினால் மந்திரத்தில் ப்ரார்த்திக்கப்பட்ட  அனைத்தும் கிடைத்துவிடும் எனவே, ரோகம், பாபம், த்ரோஹம், வருண பாசம், ரக்ஷஸ், பிசாசங்கள் போன்ற அனைத்திலிருந்தும் நீ விடுவிக்கப்பட்டவனாய் திகழ்கிறாய். தாரித்ரியமும் தொலைந்தது. சுகத்தையும் அடைந்து, புண்யலோகவாசியாகிவிட்டாய் (இக்குமாரன் ஆகிவிட்டான்).
    ஸூர்யம்ருதம் :- ஒரு ஸமயம் ஸூர்யன், இருளாலும், க்ரஹணீ ரோகத்தாலும் பீடிக்கப்பட்டிருந்தபோது தேவர்கள் எப்படி அவனை அதிலிருந்து விடுவித்தனரோ, அப்படி நானும் இக்குமாரனை, தீராத வ்யாதி, சாபம், த்ரோஹி, வருண பாசங்களிலிருந்தும் விடுபடச் செய்கிறேன்.
    இங்கு சாபமாவது - ஸஹோதரர்கள் தங்கள் ஸஹோதரிகளை ந்யாயமான (சீர்களைச் செய்து) அவர்களை கௌரவிக்காவிட்டால், ஸஹோதரிகளால் வழங்கப்படும் சாபம் குடும்பத்தை நாசம் செய்யும் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது.
    வேதத்தில் ராஹுவால் ஸூர்யனுக்கு இருளும், க்ரஹண ரோகமும் உண்டானதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
    ப்ருஷதாஜ்யத்தைச் சிசுவுக்கு அருந்தக் கொடுக்கும் மந்த்ரம், பூ லோக, புவர்லோக, ஸ்வர்கலோக அபிமான தேவதைகளுக்கும் இந்த அன்னம் கொடுக்கப்பட்டதாக ஆகவேண்டும். பரமாத்மாவுக்கும் அப்படியே.
    ஜாதகர்மாவை குழந்தையின் தகப்பன் செய்யாது, வேறொருவர் செய்வதாய் இருந்தால் ‘என் அங்கத்திலிருந்து நீ உண்டானாய்" என்னும் வேதவாக்யம், ‘உன் பிதாவின் அங்கத்திலிலுந்து நீ உண்டானாய்" என்று மாற்றப்படவேண்டும். அதுபோலவே, சிஷ்யனுக்காக குருவோ, வேறொருவரோ செய்யும் நாந்தியில், ‘அஸ்ய மாணவகஸ்ய" - ‘இந்த சிஷ்யனுடைய பித்ருக்கள்" என்று வேறுபடுத்தி  ப்ரயோகிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக