சனி, 25 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 7

13. ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லும்

            உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உவப்புஇல் வலியார், அவர்பால் வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ, நான்முகன் ஏத்த, முன்நாள் அவர்நாள் ஒழித்த பெருமான்,

            காய்ந்து இருளை  மாற்றி கதிர் இலகு மாமணிகள் யெந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார். முரன் நாள் வலம் அழித்த மொய்ம்பன்.

           ஆவியைக்காண பரியாய், அரிகாண் நரியாய், அரக்கர் ஊளையிட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப, மீனி அம்புள்ளைக்கடாய் விறல் மாலியைக் கொன்று, பின்னும் ஆள்உயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் அமலன். செருக்களத்து அன்று திகைத்த அசுரரை உருக்கெட வாளிபொழிந்த ஒருவன் மதுசூதன அம்மான், காசினப் பறவை ஊர்ந்து பொன்மலையின் மீமிசை கார்முகில்போல், மாசின மாலி, சுமாலி, மாலியவான் என்று அங்கு அவர் படக்கனன்று எழும் காலநேமி காலன். கீழ்உலகில் அசுரர்களைக் கிழங்கிலிருந்து கிளராமே ஆழிவிடுத்து அவருடைய கருஅழித்த அமரர்கோன். கொழுப்பு உடைய செங்குருதி கொழித்து இழிந்து குமிழ்ந்து எறியப் பிழக்குடைய அசுரர்களைப் பிணம் படுத்த பெருமான்.

அரக்கர் அபயம் வேண்டுதல்

        நாங்கள் அஞ்சினோம்! தடம்பொங்கத் தம்பொங்கோ! அத்த, எம்பெருமான்! எம்மைக் கொல்லேல் அந்தோ! மாமணிவண்ணா! இரங்கு நீ எமக்கு, எந்தைப் பிரானே! வென்றி தந்தோம் மானம் வேண்டோம்! தானம் எமக்கு ஆகி இன்று தம்மீன் எங்கள் வாழ்நாள். நீர் எம்மைக் கொல்லாதே நின்று காணீர் கண்கள் ஆர் குன்றுபோல ஆடுகின்றோம் குழமணி தூரமே!எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர். இம்மையே  இடர்  இல்லை, இறந்தால் தங்கும் ஊர் அண்டமே கண்டுகொள்மின் சாற்றினோம் தடம்போங்கத் தம் பொங்கோ, கோலம் ஆக ஆடுகின்றோம் குழமணி தூரமே! குணங்கள் பாடி ஆடுகின்றோம் குழமணி தூரமே! கொல்லவேண்டா ஆடுகின்றோம் குழமணி தூரமே! கூத்தர்போல் ஆடுகின்றோம் குழமணி தூரமே! கூடிக்கூடி ஆடுகின்றோம் குழமணி தூரமே!

தண்துழாய் மாலைசேர் மாயவனையே மனத்துவை
ஆதிஆன வானவர்க்கும் அண்டம்ஆய அப்புறத்து
ஆதிஆன வானவர்க்கும் ஆதிஆன ஆதிநீ
ஆதிஆன வானவாணர் அந்தகாலம் நீஉரைத்தீ
ஆதிஆன காலம்நின்னை யாவர்காண வல்லரே.

14. பிரளயத்தில் காப்பாற்றியது   (நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்)

           மல்ஆண்ட தடக்கையால் பகிரண்டம் அகப்படுத்த கலைத்து, பனிப்பரவை திரைததும்ப, பார்ஆரும் காணாமே, பார் எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம், நெற்றிமேல் கண்ணனும் நிறைமொழிவாய் நான்முகனும், நீண்ட நால்வாய் ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும், உள்ளிட்ட அமரரோடும், வெற்றிப்போர்க்கடல், அரையன விழுங்காமல் தான்விழுங்கி உய்யக்கொண்டப்போர் ஆழியான், இளைக்கணைகண் இவர்க்கு இல்லையென்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி முனித்தலைவன் முழங்கு தனிசேர் திருவயிற்றில் அகம்படியில் வைத்து உய்யக்கொண்டவன்; பேய் இருக்கும் நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீது ஓடிப்பெருகுகாலம் தாய் இருக்கும் வண்ணமே தன் வயிற்றில் இருத்தி உய்யக்கொண்டான்! மைந்நின்ற கருங்கடல் வாய்உலகு இன்றி வானவர் யாமும் எல்லாம் நெய்ந்நின்ற சக்கரத்தான் திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்து, தேவரையும், அசுரரையும் , திசைகளையும், கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமுன் எம்பெருமான் உண்டு உமிழ்ந்தான் ; மூரிநீர் வேலை இயன்ற மரத்து ஆல்இலையின் மேலால் பயின்று அங்கு மாயக்குழவியாய் ஆலின்இலை தன்மேல் பையயோகு துயில்கொண்ட பரம்பரன், ஆலத்து இலையான், அரவின் அணை மேலான், நீலக்கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் ; பாலன்ஆகி ஞாலம் ஏழும் உண்டு, பண்டு ஆல்இலைமேல் சாலநாளும் பள்ளிகொள்ளும் தாமரைக்கண்ணன். ஞாலம் போனகம்பற்றி ஓர் முற்றா வுருவாகி அன்னவசம் செய்யும் அம்மான் ! ஆலமாமரத்தின் ஓர் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழு உலகமும் வாங்கி, பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் கொம்பு அமர் வடமரத்தின்  ஆல்இலைப் பள்ளிகொண்டுகந்த கருமாணிக்க மாமலை ; ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகனாய், ஏழ்உலகும் வரையும் எங்கும்முடி எண்திசையும் மண்டலமும் மண்டி அண்டம் மோழை எழுந்து ஆழிமிகும் ஊழிவெள்ளம் முன்அகட்டில் ஒடுக்கிய ஆதிமூர்த்தி பாலன் தனது உருவாய் ஏழ்உலகும் உண்டு நிலவொடு வெயில் நிலவு சுடரும் உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால் தலைதரு குழவியின் உருவினை ஆய்; ஆல்இலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர்! ஆல்அன்று வேலைநீர் உள்ளதோ, விண்ணதோ, மண்ணதோ, சொல்லு! நாமங்கைதானும் நலம் புகழவல்லளே! பூமங்கை கேள்வன் பொலிவு!

          பரந்த தெய்வமும் பல்உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி, கரந்து, உமிழ்ந்து, கடந்து, இடந்து, இலிங்கத்து இட்ட புராணத்தீரும், சமணரும், சாக்கியரும், வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் தெய்வமும் ஆகிநின்றான் ஆதிப்பிரான். எல்லாம் திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவன், மீட்டும் மண் உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன்! பார்ஆர் உலகும் பனிமால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு ஆராது என நின்றவன் ; பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத்தூண்; நளிர்மதிச் சடையனும், நான்முகக் கடவுளும் தனித்தனி இமையவர் தலைவனும், முதலாயவகை உலகமும் யாவரும் அகப்பட, நிலம், நீர், நீ, கால்சுடர், இருவிசும்பும், மலர்சுடர் பிறவும், சிறிது உடன் மயங்க, ஒருபொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து, ஓர் ஆல்இலைச்சேர்ந்த எம்பெருமாமாயனை அல்லது ஒரு மாதெய்வம் மற்று உடையமோ யாமே!

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
ஆய் உலகம் ஆய்
இன்பம் இவ்வெம்யரகு ஆகி, இனிந நல்வான்
சுவர்க்கங்களும் ஆய்
மன்பல உயிர்களும் ஆகி பல பல
மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று
ஏதும் அல்லல் இலனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக