வெள்ளி, 7 அக்டோபர், 2011

சீர்பாதக்காரர்களால் பெற்ற பாக்யம்.

DSC03204
திருவீதிப் புறப்பாட்டுக்குத் தயாராய்!
முன்னழகும், பின்னழகும்!
DSC03205ஸ்வாமி தேசிகனின் 744வது திருவவதார தினம் திருப்புல்லாணி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம ஸ்ரீ தேசிகன் சந்நிதியில் சென்ற வருடங்களைப் போலவே மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலையில் திருவீதிப் DSC03211புறப்பாட்டுக்குப் பின் ஸ்வாமி தேசிகனும் அவரது ஆராத்ய மூர்த்தியான ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவரும் வெகு விசேஷமான திருமஞ்சனம் கண்டருளினர். அதன்பின் நடந்த பெரிய சாத்துமுறை சமயத்தில், ஸ்ரீ ஆதிஜெகன்னாதப் பெருமாள், தாயார் அனுக்ரஹித்து அனுப்பி வைத்த மாலை, தீர்த்தம், பரிவட்டம், தளிகை ஆகியவற்றை கோவில் அதிகாரி ஸ்ரீ கண்ணன் தலைமையில் அனைத்து அர்ச்சக, பரிசாரக கைங்கர்யபரர்களும் கொணர்ந்து ஸ்ரீ தேசிகனுக்கு சமர்ப்பித்தனர். சாற்றுமுறை கோஷ்டிக்குப் பின் சுமார் 100 பேர்கள் அந்வயித்த அலங்கார ததீயாரதனம் நடந்தது. இவை பற்றியெல்லாம் சென்ற வருடங்களிலே விரிவாக எழுதி வீடியோக்களும் இணைத்துள்ளேன். அதனால் அவை பற்றி இந்த வருடமும் மீண்டும் எழுதவில்லை.
குறிப்பிட வேண்டியவை இரண்டு உண்டு. உத்ஸவங்கள் சிறக்க வேண்டுமென்றால், பாராயணம் நன்றாக இருக்க வேண்டும். அந்த வகையிலே நல்ல அதிகாரிகளான சென்னை ஸ்ரீ J.S. வாசன் ஸ்வாமியும், சென்னை ஸ்ரீ ஆராவமுதன் ஸ்வாமியும் மிக அழகாக பிரபந்த தேசிகப் பிரபந்த கைங்கர்யங்களையும், வடுவூர் பாடசாலை வித்யார்த்திகள் ராகவனும், பாலாஜியும் வேத பாராயண கைங்கர்யங்களையும் ஆத்மார்த்தமாகச் செய்து மகிழ்வித்தனர். ஸ்ரீ வாசன் ஸ்வாமிக்கு திருப்புல்லாணி பூர்வீகம். வங்கியின் மிக உயர்ந்த பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். ஸௌலப்யம் என்பதற்கு அகராதிகள் தேட வேண்டாம். அவருடன் பழகினால் போதும். அர்த்தம் புரிந்து விடும். அடியேன் மீது அளவற்ற பிரியம், திருப்புல்லாணி ஈடுபாடு இவை காரணமாக அவராகவே ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டு சிறப்பிப்பது கடந்த பல வருடங்களாக வாடிக்கையான ஒன்று.
அதே போல் சென்னை நங்கநல்லூர் ரங்கராஜன் ஸ்வாமியின் கைங்கர்யங்களும் அபாரமானவை. மூன்று நாட்களும் அவர் ஆசையுடன் தேசிகனுக்குச் செய்த கைங்கர்யங்களால் உத்ஸவம் எல்லாரும் மகிழும் வண்ணம் அமைந்தது.
அடியேனை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய மற்றொன்று.  அடியேன் பின்தொடரும் பல வலைப் பக்கங்களில் கண்ணன் பாட்டுக்கள் என்னை மிக மயக்கிச் சொக்க வைப்பது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த புல்லாணிப் பக்கங்களைத் தொடர்ந்து படிப்பவர்கள் சிலருக்கு ஞாபகமிருக்கலாம். இரண்டு மூன்று இளைஞர்களாக இணைந்து நடத்தும் அந்தத் தளத்தில் அடியேனைப் போன்று வளவள எழுத்தெல்லாம் இருக்காது. இன்றைய இளைஞர்களை எப்படிக் கவரலாம் என்பதில் அவர்கள் வித்தகர்கள். மிக கனமான சம்ப்ரதாய விஷயங்களைத் தான் அவர்கள் எழுகிறார்கள். ஆனால் அவர்கள் ஸ்டைல் காரணமாக அவர்களுக்கு ரசிகர்கள் அதிலும் 90%க்கும் மேல் இளைஞர் பட்டாளம்--ஏராளம். அந்த http://kannansongs.blogspot.com ன் ஆசிரியர்களில் ஒருவரான திரு ராகவன் எதிர்பாராமல் வந்து கலந்து கொண்டு மகிழ்வித்தார். இதுதான் அவரைச் சந்திக்கும் முதல் முறை.
காதுக்கு மிக இனிமையாக, கருத்துச் செறிவுள்ள ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவ, ஸ்வாமி தேசிகன் திருமஞ்சனக் கட்டியங்களை ஸ்ரீ வாசன் ஸ்வாமி கேட்பவர் எல்லாரும் நெஞ்சு நெகிழ்ந்து பரவசமாகும் வண்ணம் அனுபவித்து ஸேவித்த ஒரு பகுதி மட்டும் இங்கு வீடியோவாக! 

சீர்பாதக் காரர்கள் என்ன செய்தார்கள்? அவர்களால் பெற்ற பாக்யம் என்ன? காலை  7மணிக்குப் புறப்பாடு என்று ஏற்பாடு. அன்று விஜயதசமி என்பதால், பெருமாள் குதிரை வாகனப் புறப்பாடும் உண்டு. தேசிகன் புறப்பாடு ஆகி, திருமஞ்சனங்கள், சாத்துபடி ஆகி பெரிய கோவில் மரியாதை வரவேண்டும். எல்லாம் கோவில் உச்சி காலத்துக்குள் – 12.30க்குள் – முடிய வேண்டும். ஆனால், ஏற்றுக் கொண்ட சீர்பாதக்காரர்கள் எங்கோ சென்று விட, 9மணி வரையும் வராத நிலையில் தாமதம் தவிர்க்க இருப்பவர்களே திருவீதிப் புறப்பாட்டுக்கு ஏளப் பண்ணுவது என்று முடிவாகி, இந்த 61 வருடங்களில், முதல் முறையாய் அந்த பாக்யம் கிடைத்தது.  கண்டிப்பாய் அடியேனின் பாவங்களில் பெரும் பகுதி கழிந்திருக்கும். இதுவும் ஆசார்யன் ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹமே.


அனகாபுத்தூர் (வழுத்தூர்) ரங்காச்சாரி ஸ்வாமி சமர்ப்பித்த யஜ்நோபவீதங்களுடன்

















திருவீதிப் புறப்பாடு, திருமஞ்சனத்தில் சில காட்சிகள் காண




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக