சனி, 18 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் --- டிப்பணி


ப்ரபந்தானுஸந்தான க்ரம டிப்பணி
1.  ஸர்வதேஶ தஶா காலேஷு அவ்யாஹந ப்ராக்ரமா  என்றது ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும் நித்யமாகச்  செல்லுகிற  பராக்ரமத்தையுடைய  என்றபடி. ‘ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா’ என்றது இப்படித்  திருவத்யயனோத்ஸவ பக்த  விக்ரஹ ப்ரதிஷ்டாதிகளைக்  கோயில் முதலான  திவ்ய தேஶங்களில் செய்யும்படி நியமித்தருளின எம்பெருமானாருடைய  திவ்யாஜ்ஞை என்றபடி. ’வர்த்ததாம்  அபிவர்த்ததாம்’ என்றது ஸர்வ தேஶங்களிலும் நித்யமாக அபிவ்ருத்தி அடையக்கடவது என்றபடி.
வாழித்திருநாமத்திற்கு இங்கு ப்ரசுரிக்கப்படும் வ்யாக்யானம் ஸ்ரீ வாத்ஸ்யாஹோபிலாசார்யர் அருளிச் செய்தது.
’ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதி  வாஸர முஜ்வலா திகந்த வ்யாபிநீபூயாத்’ என்றது எம்பெருமானாருடைய திவ்யாஜ்ஞையானது ப்ரதி தினம் அபிவ்ருத்தையாய்க் கொண்டு திகந்தங்களிலும் செல்லக்கடவது என்றபடி. ’ஸா ஹி லோக ஹிதைஷிணி’  என்றது விதை முளையின் நியாயத்தால் அடியில்லா வினையடைவே சதையுடலம் நால் வகையும் சரணளிப்பான் எனத் தவிழ்ந்து பதவி அறியாதே பழம் பாழில் உழலுகிற ஜனங்களுக்கும் அந்தத் திவ்யாஜ்ஞையே திவ்ய தேஶ திவ்ய ப்ரபந்த நிர்வாஹாதிகளால் தத்வ ஹித புருஷார்த்தங்களைத்  தெளியும்படி செய்து ஹிதத்தைப் பண்ண வேணும் என்ற இச்சையையுடையது  என்றபடி.
’ஸ்ரீமந் ஸ்ரீரங்க ‘  என்றது பிரிவற்ற சேர்த்தியையுடைய பெரிய பிராட்டியையுடையவரே! ஆகையினால் நித்ய ஸ்ரீயான அழகிய மணவாளனே! என்றபடி. ஶ்ரியம்” என்றது இப்படிக்கொத்த  ஸ்ரீவைஷ்ணவ  ஸம்ருத்தி ரூபமான ஸம்பத்தை என்றபடி. ”அனுபத்ரவாம்’ என்றது அநீஸ்வர அத்வைதாதி  வாதிகளாலும் துர்ஜ்ஜனாதி காரிகளாலும்  உண்டாகிற  உபத்திரவம்  நமக்குப் பின்பு ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தில் கலசாதே  இருக்கும் படியாக என்றபடி.  ’அனுதினம் ஸம்வர்த்தய’ என்றது ’தொக்க அமரர்கள்   குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்’ என்னும்படி முளைத்த கொடி விளாக்கொண்டு படருமாப்போலே இஸ்ஸம்ருத்தியும் நித்யாபிவ்ருத்தமாம்படி பண்ணியருள வேண்டும் என்றபடி. அன்றிக்கே ‘ஸ்ரீமந்’ என்று ஸம்போதித்து ’ஸ்ரீரங்க ஶ்ரியம்’  என்று அந்வயிக்கவுமாம்.  அப்பொழுது অত্র্রৈৱ শ্রীরঙ্ক সুখমাস্ৱ  (அத்ரைவ ஶ்ரீரங்க ஸுகமாஸ்வ)’ என்கிற இடத்தில்போலே ஸ்ரீரங்க ஶப்தம் பகவத் பாகவத அதிஷ்டித திவ்ய தேஶ ஸாமாந்ய வாசகமாய் அந்த சம்பத்தின் ஆனுஷங்கிகமாய் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தையும் சொல்ல வேண்டும். இவ்விரண்டு யோஜனைகளையும்  நம் ஆசார்யர்கள் அருளிச் செய்வர்கள்.  
           

1 கருத்து:

  1. பெயரில்லா5:28 PM

    Swamin,
    sudenly you have changed the size of letter small and elders could find it difficult to read and may skip such material.if the original text is scanned and placed here and that contains a mixture of sizes of characters ,then nothing can be done. - veeraraghavan

    பதிலளிநீக்கு