ஞாயிறு, 13 மார்ச், 2011

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்ஸவம்

திருப்புல்லாணியில் ஸ்ரீஆதி ஜெகன்னாதப் பெருமாளுக்கு பங்குனி ப்ரும்மோத்ஸவம் 11/3 அன்று அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி நேற்று 12/3ல் கொடி ஏற்றத்துடன் இன்று இரண்டாவது நாளாக சிம்ம வாகனத்தில் பெருமாள் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்.சென்ற வருடங்களில் நிறைய எழுதிவிட்டதாலும், அதே வர்ணனைகளை மீண்டும் அளிப்பது சலிப்படயச் செய்யும் என்பதாலும், கிட்டத்தட்ட சென்ற வருடப் படங்களைப் போலவே அமையப்போகும் படங்களால் அடுத்தவர்கள் மெயில் பெட்டியை நிறைக்க வேண்டாம் என்று நினைத்ததாலும் இந்த முறை ஏதும் விசேஷமாக இருப்பதை மட்டும் எழுதலாம் எனத் தீர்மானித்தேன்.
பலருக்கு நினைவிருக்கலாம். 2007ல், முன்னாலே பிரபந்த ஸேவை இல்லாமலும், வேதங்கள் பின் தொடராமலும் தன்னந்தனியாக பெருமாள் புறப்பாடு காணும் நிலையைப் பற்றி வருந்தி எழுதி, அந்நிலை மாற பிரார்த்திக்கவும் வேண்டியிருந்தேன். நினைவு படுத்திக்கொள்ள இந்தப் படத்தையும், இந்தப் படத்தையும் காணலாம்.
பலரின் ப்ரார்த்தனையின் விளைவாய் பெருமாள் திருவுளம் கொண்டு, கடந்த இரண்டு வருடங்களாக ஆண்டவன் ஆச்ரம வித்யார்த்திகள் பாராயணத்திற்கு இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த முறையும் திருப்புல்லாணியின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அபிமானத்தால், ஸ்ரீமத் ஆண்டவன் , திருச்சானூர் பாடசாலையிலிருந்து 15 வேத வித்யார்த்திகளை அனுப்பி வைக்க, ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் மதுராந்தகம் பாடசாலையிலிருந்து சலக்ஷண கனபாடி மன்னார்குடி ஸ்வாமியுடன் 15 வித்யார்த்திகளை அனுப்பி வைத்துள்ளனர். ஆக, மிக மிக நீண்ட காலத்துக்குப் பின், பெருமாள் மிக ஆனந்தமாக திருவீதிப் புறப்பாடு கண்டருள்கிறார்.  கோவிலுக்குள் கோஷ்டிகளும் அருமையாக உள்ளது. இது தொடர ப்ரார்த்திக்க வேண்டுகிறேன். இன்றைய புறப்பாட்டில் சில படங்கள் இங்கே.







2 கருத்துகள்:

  1. அண்ணா..எத்தனை முறை எழுதினாலும் திகட்டக்கூடிய விஷயமா..பகவத் விஷயம்.. உங்கள் மூலமாகத் தான் நாங்கள் ஜெகன்னாதனை தரிசிக்கும் பாக்யம் பெறுகிறோம்..தவறாமல் உற்சவ நிகழ்ச்சிகளை தருமாறு கேட்டுக்குறேன்.. பிரபந்த/வேத பாராயண கோஷ்டி க்ளிப்பிங்ஸ் முடிந்தால் வலையேற்றுங்கள்.

    அடியேன்
    இராகவன்.

    பதிலளிநீக்கு
  2. மூன்று குழுக்களாக செல்கிறார்களே. நீங்கள் இரண்டு பாடசாலைகளின் மாணவர்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறீர்கள். மூன்றாவது குழு யார்?

    பதிலளிநீக்கு