ஒரு வேண்டுகோள்! திருப்பாதுகமாலையைத் தொடர்ந்து ரஸித்து வருபவர்கள், இங்கே இடப்பட்டிருக்கும் இரட்டைப் பத்ததியில் 17வது பாடல் (777) முதல் வரி மட்டும் சீர் பிரிக்காமல் இருப்பது ஏன் என அடியேனுக்குத் தனிமடலோ அல்லது commentsலிலோ எழுத வேண்டுகிறேன். அது சரிதானா அல்லது அச்சேற்றும்போது நிகழ்ந்த பிழையா என அடியேனுக்கு விளங்கவில்லை.
23, சேடப்பத்ததி
751, சேட னேயிவ னென்றிடு யிர்நிலைநாட நன்கொர நன்தன்ப டைப்பினிற்
கூட வன்பத மூன்றுயிர்ப் பாதுகாய்!
சேட னென்றடி யேனுனை யோர்வனே, 1
752, சும்மா போக மதியாதே சுடரடி நிலையே! தொழுசேடன்
அம்மா தானே பெறுமோர்பே றாமரி பாத மலரணவும்
செம்மா போகம் பெறவென்றே சேவடி நிலைதா னானானென்
றெம்மா சிரியர் பெருமானா ரெமுனைத் துறைவரறைவாரால், 2
753, திருவளர் சேடத் திருவதுதான் திகழ வளங்கொள் சேடனென
விரியடி நிலை! யுன் னிறையுருவம் விரியவ னதனில் விரிவனெனில்
தெரியிரு விரிபத் திமையிலுனைச் சிரநல மலியத தரிநிலையோர்
பரியது விரியு முயர்வறுமப் பணிவிடை நலனுக் கவதியென, 3
754, படரிரு புவனம் பரித்தருளும் பழமறைப் பரனைப் பரித்துவளர்
சுடரிறை யவனைத் தாங்கவனிச் சுமையது சமையும் பரிவதிலே
உடனரு ணெடியோ னடிநிலை! நீ யொழுகொரு சேடப் படிவமதில்
தடவலி பொலியவ் வடிமைவளத் தலைமிசை யகிலந் தரித்தனையே, 4
755, திடவலி யடிமைப் படிவநலத் திறனெடு சேடத் திருவடிவம்
அடிநிலை! யுனதா மெனவுணரவ் வமலவுரைத்திரு வனனவனே
நெடுவன நடையிற் புகவகிலம் நிலைபெறு மிறைமைப் பரமதனை
இடிதன தருளின வலிமலிய விதுபரி யெனநின் னிறுவினனே, 5
756, தெரியுன தரிபா துருபிறவென் றணையொளி மிளிருஞ் சேடநலத்
திருவள நளிகொஞ் சளிமஞ்சத திறையவ னிறையுங் காலருகில்
ஒருகுல வதுவரு மையிலுரியோ னுயுமடி பேணும பாதுனையே,
அருமறை யவைநின் மதலையெனு மருமையி லருகின் னிலைகொளுமே, 6
757, நல்லார் பரதன் முடியுறையுந் தன்னோ ருருவப் பாதுனையே
சொல்லார் சேடத் திருவிளவல் லுனைநெடு சேணிற் கைதொழுதான்
வல்லார் மறைகொள் சீராம வடிவத் தரங்க னொருதனையே
எல்லார் பதியிற் பணிந்தவதி லென்னோ விந்தை விளம்புமினே, 7
758, மாறி மாறி விரிந்தொடுங்கு மகிலம் வனையும் முகிலுருவன்
மாறி லுன்ன லெனுமுந்நீர் தனிலெழு மொக்குள் மாபாகும்
ஈறி லும்பர் பம்பிமறைந் திலகவன் யோகுத் துயில்புரியு
மாறிலை யெனுமா பாரியுமாய்ப் பாதுக! நீதான் பாரிப்பாய், 8
759, பணியிறை மணிமா லடிநிலை! நீ பரவடி நலரோம் பொருநோன்பில்
பணையொளி மிளிரத் திருநோக்கும் பரியது புரியோர் பகனிலையிற்
றிணிமரு ளிருளுக் கிரவியேனுந் திடமிக நிகழுன் திருவெழிலிற்
பணியவை தமக்கோ ரிலக்கெனவப் பணியுந் தானே யாவாயே, 9
760, திரமேறு வெகுமுகமாய்த் திணிபோக வளங்கிளர
உரிதோலில் தெரியுமொளி விரியுமொரு தூய்மைதனில்
வருசேடத் தொன்மரபோ ரொருசேட னீயெனவே
திருநெடியோன் பாதுகையே! தொழுங்கிழமை திகழ்வாயே, 10
24, இரட்டைப்பத்ததி
761, தருமுறை யோதொரோ தம்மி தம்மெனும்பிரண்வ மண்டுமக் கலையி ரண்டெனத்
திருநிறை யப்பனீ ரப்ப தம்நிறை
தெரியரி பாதுகந் தேறி நண்ணுவன், 1
762, நீண்டசரா சரத்துயரம் நீக்குமுன துரிமையினில்
ஆண்டவனங் கிரிநிலையே! யான்றவுன தருந்தோற்றத்
தீண்டருளு மிரும்பொறையுந் தேறியசீ ரீருருவில்
ஆண்டுநிறை மங்கலநீ யடியேற்குப் புரிவாயே, 2
763, வானவரால் மானவரால் வருமல்ல லவ்விரண்டும்
தானிலதாய் மாதவனார் தாளடைந்தார்க் கருள்புரியும்
மேனிலைமல் கத்திறநல் வீறுமலி சாந்தியெனத்
தானடியோ மீருருவத் தாணிலைகாள்! தேறுவமே, 3
764, வருசுரரு மசுரருமாங் கணங்காடு மீர்மையினிற்
றெரியிதுவெந் தெய்வமிதெந் தெய்வமென வெதிராடுஞ்
செருவெதுவுஞ் சேராது செவ்வியமால் பாதுகைகாள்!
இருமைகொளும் பகிர்தனல விருமையினீ ரிசைவீரே, 4
765, ஒளியாலு மொலியாலு மடியார்க்குப் பொல்லாரை
அளியேறக் தாங்களையு கதிராழி வெண்சங்கம்
தெளியண்ணல் கரமேந்து மவையன்னான் திண்கழலில்
ஒளியொலிமல் கொருநலவீ ரடிநிலையாய்த் தோன்றியவே, 5
766, சீரியர்செந்நெறிநண்ணாப் பெருஞ்சோம்ப ரெம்போல்வார்க்
காரமுதத் தென்னரங்க மணவாளன் தாணிலைகாள்!
தேரியதோர் நல்வினையுஞ் சீரியதோ ராள்வினையுஞ்
சேரவரு நேரிருவர் நீவிரெனச் செறிவீரே, 6
767, நாதனிரு பாரிசமன் மாமகளு மண்மகளும்
பாதயுக மன்னுதிப் பாங்கிருநீ ரில்லீரேல்
ஓதுமணி பாதுகைகாள்! ஓங்குபிழை யேழையெமக்
கேதுகதி யீ துலகி லென்றிதுநன் றெண்ணுவமே, 7
768, அரவணைய னடியிணையி லமருமணி யடிநிலைகாள்!
விரிகொடிய பவபீதி விலக்குமிரு மேனியினீர்
அரிதுணர்பான் மையதெனமூ தருமறையின் முடியோதும்
பரமவர மென்னுமிரு பழங்கல்வி யாவீரே, 8
769, சென்னிமிசை யண்ணல்பதஞ் செவ்வியசீர்ச் செல்வர்களே!
முன்னமுறு சாபவழு முற்றவுமே யற்றொழிய
மின்னினிய நேமியனார் திண்சரனே பற்றிமகிழ்
தொன்னல்மல் கந்நேமிப் புள்ளிரட்டை நீரோதான், 9
770, மாவுறையு மார்வனடி மாநிலைகா ளூழ்வினையில்
மூவுலகு முற்றவுமே மூளுமடற் பேரிருடான்
மூவவறத் தென்வடநற் றொல்லயனஞ் செல்கதிரோன்
மேவியொளி யார்கதியா மீர்கதிநீ ராவீரே, 10
771, காரன்ன மேனியனார் காரவணப் பாதுகைகாள்!
ஒருங்கள் திருவுள்ளத் துற்றசமப் பண்புதனிற்
சீருந்து மச்சமநல் லச்சுதனா ரீருலகே
நீரிருவர் தாமன்ன நீதிநிலை நிகழ்வீரே, 11
772, மன்னுபத மானவனி மல்குநடை மாணிலக
மின்னுபதி யடிச்செல்வ மதிபொதியு மிதியடிகாள்!
சொன்னலவன் கேள்வியுட னுன்னுநல நினைவெனநீர்
துன்னுவணத் திவ்வணரா யோரிருவர் பொலிவீரே, 12
773, அப்பனணி யடிநிலைகா ளருணிகழும் விளையாட்டில்
எப்பொழுதும் பாரிதுசீர் வாழநடை யாடிவரும்
நற்பதனி னான்முனென நாடிவரு முமக்காதி
திப்பியவத் தம்பதியா ரேலுவமை சாலுவரே, 13
774, திருநெடியோ னினிதருளி லிருதாளிற் றோற்றுங்கால்
இருமையினீ தானவனுக் கிணையுருவ மேற்பாயே
அரியவனே தோன்றத்தா ளாயிரத்து நீயுமுடன்
விரிவுறுமா யிரவுருவத் தரிபாது! திகழ்வாயே, 14
775, முன்னிதுவாம் பின்னிதுவாம் படியெண்ண வொண்ணாது
மன்னிருமால் பதமதனில் மாறிவரு மொழுக்கத்து
முன்னரிதா ணிலை! யுலகந் தொழுதேத்து மிருசந்தி
யென்னவுனை யெண்ணுமறை மேலவர்க ளெண்ணுவரே, 15
776, தன்னருளிற் புவனங்க டானோக்கத் தாணிலைகாள்!
மன்னனரங் கேசனெடு பாதநடை தானாடப்
பொன்னலர்பூந் தாளவன தனுங்காது நோக்கிருநீர்
சொன்னபலை யபலையெனச் சொல்லத்தா னாவீரே, 16
777, இருளுலுயிரொளியுணராதிழுக்கினிலாழ்ந்துழதெளியோர்க்
கரியடியி லமர்நிலைகா ளம்முழுநன் மெய்யுணர்வில்
அரியதொரு பத்தியெழ வாங்குதவும் பாங்குதெரி
கருமமறி வென்னுமிரு நன்னிலைநீ ராவீரே, 17
778, பரியரியின் பதமதனைப் பாதுகைகள்! தாங்கிமறை
விரியுமும தேவனெறி வீறுலகிற் செந்நிறுவி
அருமைதனில் வருதமர்கட் கொருதமையே யறநல்கித்
தெரியுமும தோரரசி லீரரசின் சீர்புரிவீர், 18
779, நாரணனார் நற்கழல்க ணல்குதலி னான்மறைதேர்
சீரியர்தாம் வேண்டுவன சீர்மிகவே சேர்த்துமவை
பூரணமா வெந்நான்றும் பூங்கழல்காள்! புரந்தளியிற்
சேரலினீர் யோகமுநற் கேமமுநே ரெமக்காவீர், 19
780, கட்டிவி ளங்கரி தாளினி ரட்டை
நட்டவ சுச்சுடர் பாதினி ரட்டை
நட்டலி னண்ணுவர் புண்ணிய பாபக்
கட்டினி ரட்டைக ழற்றிடு மன்றே, 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக