வியாழன், 17 செப்டம்பர், 2009

இது நெருப்பு நரி உபயோகிப்போருக்காக

அடியேன் மீது உள்ள பிரியத்தால் என்றாவது ஒரு நாள் இவன் உருப்படியாக ஏதாவது எழுதுவானா என்று பார்ப்பதற்காக இந்த வலையில் எட்டிப் பார்க்கும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரில் பெரும்பாலானோர் உபயோகிப்பது நெருப்புநரி (அப்படித்தான் FireFox Browser தமிழ் "ஆர்வலர்களால்" அழைக்கப் படுகிறது) என்று என் 'கவுண்டர்' சொல்கிறார். அவர்களும் அடியேனைப் போலவே இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அள்ளிக்கொண்டு வரும் வைரஸ்களைக்கண்டு போதுமடா சாமி என்று விட்டு விலகியோ அல்லது வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு, அளவற்ற ஆட்ஆன்கள் வசதி உலவும் வேகம் ஆகியவற்றால் கவரப் பட்டோ  இந்த நெருப்புநரி உபயோகித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை. அது FireFox load ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் தாமதம். மிக எளிதில் வெறுப்பு அடைய வைக்கும். யாரோ ஒரு புண்ணியவான் அதற்கும் ஒரு தீர்வு கண்டிருக்கிறார். வீட்டை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் vacuum cleaner இங்கும் வந்துள்ளது. இதுவும் ஒரு ஆட்ஆன்தான். இதன் பெயரும் vacuum places improved.  FireFox -- tools --addons சென்று get addons linkல் இதைப் பெற்று நிறுவிக் கொண்டால் system trayல் வாக்குவம் க்ளீனர் வடிவிலேயே வந்து அமர்ந்து கொள்ளும். 
ஒருமுறை அதை க்ளிக் பண்ணிவிட்டு Browserஐ restart செய்து பார்த்தால் வித்தியாசம் தானாகவே தெரியும். இதை உபயோகிக்கும் முன்னால் அடியேன் ப்ரவ்ஸர் திறக்க ஒரு நிமிடத்துக்கு மேல் ஆகும். இப்போது 5 முதல் 10 நொடிக்குள் திறக்கிறது. 
      அப்புறம்  ஓபரா மினி பயன்படுத்துபவர்களுக்கு ஓபரா மினி 5.0 பீட்டா வெளியாகி உள்ளது. வழக்கம்போல் அட்டகாசமாக உள்ளது. http://mini.opera.com தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து பாருங்கள்.

        பாதியில் நிறுத்திவைத்த  கேசவ அய்யங்காரின் "திருவருட்சதகமாலை" (தயாசதகத்தின் தமிழாக்கம்) மற்றும் பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் "திருவரங்கத்தந்தாதி" க்கு வை.மு. கிருஷ்ணமாச்சார்யாரின் வியாக்யானம் இவை இங்கே தொடர உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக