வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

அந்த நாள்போலவே இந்நாளிலும்





நேற்றே இதுவும் சேர்ந்து வந்திருக்க வேண்டியது. ஆனால் நேற்று ப்ளாகின் விசித்திரமான சில சிக்கல்களால் அது முடியாமல் போயிற்று.

இந்நாளில் அட்டையில் படங்கள் எப்படி வந்தாலும் உள்ளே சில நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இங்கே மாதிரிக்கு ஒரிரு ஓவியங்கள். தந்தை வழியில் வெற்றிநடை போடுபவர் கைவண்ணம்!

3 கருத்துகள்:

  1. கல்கியின் கதைகளுக்கு உயிரோவியம் வரைந்த மணியம் அவர்களது செல்வன் என்று தெளிவாகவே சொல்வதுதானே! இதில் என்ன ரகசியம்?

    பதிலளிநீக்கு
  2. ஸ்வாமின்,
    அடியேனுக்கு இரண்டு விஷயங்கள் உறுதியாகத் தெரியும். முதலாவது அடியேன் வலைக்குள் வருபவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.(இளைஞர்கள் தப்பித்தவறி தெரியாமல் ஒருமுறை வந்தால் அப்புறம் எட்டியே பார்க்க மாட்டார்கள்.) இரண்டாவது அனைவருமே அடியேனைக் காட்டிலும் அறிவிலும், அனுபவங்களிலும் சிறந்தவர்கள். எனவே படங்களைப் பார்த்த உடனேயே யார் வரைந்திருப்பார்கள் என்ன பத்திரிகைக்காக வரைந்திருப்பார்கள் என்பதையெல்லாம் ஒரு நொடியில் (தாங்கள் யூகித்தது போல)கண்டுபிடிக்க வல்லவர்கள். எனவேதான் சொல்லவில்லை. இதில் ரஹஸ்யம் எங்கே வந்தது? ஆகாயம் நீலம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதா?

    பதிலளிநீக்கு
  3. அதுவுமல்லாமல், ம செ என்று தெள்ளத் தெளிவாகவே, ஓவியங்களின் வலது கோடியில் இருப்பதால், இதைக் கண்டுபிடிக்க ஷெர்லக் ஹோம்ஸ் தயவு தேவைப் படவில்லையே:-))

    ஐம்பதைத் தாண்டிய பெரிசுகளை விட, இன்றைய இளைஞர்கள் தான் நல்ல விஷயங்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள் , ஈடுபாட்டோடு செயல் படுகிறார்கள் என்பதும் அனுபவம்.

    பதிலளிநீக்கு