இன்று பளபள வார்னிஷ் அட்டையில் யாராவது நடிகை படம் ஒன்றுடன், (அந்த நாளில் இந்தியாவைப் பற்றி மேலை நாடுகளில், கோவணம் மட்டும் கட்டிக் கொண்டு அலையும் ஆதிவாசிகள் நாடு என்று ஒரு எண்ணம் நிலவியதாமே, அதை உண்மையாக்க போனால் போகிறது என்று ஒரு கைக்குட்டையை ஆடையாக அணிந்த கோலத்தில்) வெளிவரும் பத்திரிகை களையே பார்த்து வரும் கண்களுக்கு ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று அந்த நாள் பத்திரிகைகளின் சில அட்டைப் படங்கள் இங்கே !
அழகு,கவர்ச்சி, வக்கிரம் எல்லாம் பார்க்கிறவன் கண்ணில் தான்! அந்தநாளில் மனிதனை மிக வக்கிரமாகக் கற்பனை செய்ய வைக்க கடைசி இரண்டு படங்கள் மாதிரி இருந்தால் கூடப் போதும்!
பதிலளிநீக்குவித்தியாசமான, மெல்லிய நகைச்சுவைக்கு, வந்தனம்.
அன்புள்ள திரு கிருஷ்ணமூர்த்தி,
பதிலளிநீக்குஅதுதான் ஒரு வித்யாசத்துக்காக என்று முதலிலேயே சொன்னேனே! வக்ரப்பார்வைகள் எப்போதும் உண்டு என்பதை யார் மறுக்கப் போகிறார்கள்! இந்தநாள் அரைகுறை ஆடைகளில் இருப்போரை ரசிப்போரையும் யார் தடுக்கப் போகிறார்கள்? நேற்று இன்னும் சிலவற்றைச் சேர்க்க முயன்றேன். ஆனால் சரியாக வராததால் அவைகளை இன்று இட்டிருக்கிறேன். அவை நேற்றே பதிவாயிருந்தால் ஒருவேளை உங்கள் விமர்சனம் வந்திருக்காது. ஒரு அறிமுகம் கிடைத்திருக்காது.