செவ்வாய், 23 டிசம்பர், 2008

திருவருட்சதகமாலை


ஆத்தூர் சந்தானம் ஸ்வாமியின் பாதுகா சகஸ்ர மொழிபெயர்ப்பு மேலே உள்ளது.

திருவருட்சதகமாலை.


கமப்யநவதிம் வந்தே கருணா வருணாலயம்
வ்ருஷசைல தடஸ்தாநாம் ஸ்வயம் வ்யக்தி முபாகதம் .9.

செடித்தொட ரறுத்தெழு விழுத்தவர் வழுத்தும்
விடைக்கிரி தடத்தம ரடைக்கல மவர்க்கே
கொடைப்பெரு நடைப்புக ழுடைத்தனை விளக்கும்
படித்திக ழளப்பரு மருட்கடல் பணிந்தேன். .9.

{ கருணை யென்னும் குணத்தினால் நிரம்பிய வருணாலயம் என்கிற அளப்பரும் அருட்கடலாயும், திருவேங்கடமாமலையின் தடத்திலிருப்பவர்களுக்கு ஸ்வயம் வ்யக்தமாய் அணுகியவரும், இன்னார் இப்படிப்பட்டவர் என்று வருணிக்கக் கூடாதவருமான ஸ்ரீநிவாஸனைப் பணிகின்றேன்.}

அகிஞ்ச நநிதிம் ஸுதிமப வர்கத்ரிவர்கயோ :
அஞ்ஜநாத் ரீச்வரதயாம பிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.

கைம்முதலி லர்க்கொருக ரத்துறுநி திப்போல்
இம்மைநல னோடுதிரு வீடுநனி நல்கும்
அம்மைவரை யெம்மிறைவர் தம்மருளி னன்மைச்
செம்மைதெரி மும்மறையின் மெய்ம்மையிது ரைப்பேன். 10.

( கைம் முதலில்லாத பேதைகளும் வேறு கதியற்றவர்களுமான சரணம் அடைபவர்க்கு நிதி போன்றதும், அபவர்கமென்னும் மோக்ஷ புருஷார்த்தத்தையும் , திரிவர்க்கம் என்னும் அறம் பொருள் இன்ப புருஷார்த்தங்களையும் அளிப்பவளும், அஞ்ஜநம் என்கிற மாசு அடியோடு அல்லாதவளுமான அஞ்ஜநமலை யரசனுடைய தயையென்னும் தேவியைப் பல படியாகத் துதிக்க எண்ணுகிறேன். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக