
ஸ்வாமி தேசிகன் பாதுகா சஹஸ்ரம் அருளியது.
வெண்பா
படியளந்த செங்கமலப் பாதத்தைச் சொல்ல
அடியேற்குமுண்டோ வறிவு -- நெடிதாம்
திருவடி நன்னிலைமேற் செய்குவேமென்ற
குருவடியைக் கையேநீ கூப்பு.
இராகம் – மணிரங்கு – தாளம் – சாப்பு
பல்லவி
வாதுகாட்டிமுன்னே – பாதுகாசகஸ்ரஞ்சொல்
வாதிசிங்கராமிவரே.
அனுபல்லவி
பேதமைதீர்க்குமரங்கநாதனருளுங்கோயிற்
பெரியவோலக்கத்திலே பெரியோரெல்லாருமெச்ச (வாது)
சரணங்கள்
பதகமலசஹஸ்ரமொருவர் தாமுமேவிண்
ணப்பஞ்செய்வேமென்றே யேற்று
அதுவேவிசாரமாகி யொருராத்திரிப்பொழுது
மடங்கலும்விழித்துப் பார்த்து
இதனுள்ளைஞ்ஞூறுசுலோகங்கவனம் பண்ணினாரவ
ரிவரோராயிரஞ் சேர்த்து
மதுரமயமாய்ச்சித்திர கவிதையலங்காரமாய்
மகத்துவஞ்சேர்பாதுகாசகஸ்ரமென்றருள் செய்தார் (வாது)
கவனஞ்சொல்லுவதென்றாற் சிறுபிள்ளைவிளையாட்டா
கடாக்ஷம்பெற்றிட வேணும்
தவம்பண்ணிப்பிறந்தவர் கவனஞ்சொல்லுவாரென்று
தானேயெவர்க்குந் தோணும்
தவறுசொல்லிதுவென்று தெரியாமற்பிதற்றுவர்
சாற்றுகவிகள் காணும்
புவனமெங்கெங்குமெச்சு முபயகவிப்பிரபந்தம்
பூட்டினார்வாதிசிங்கர் நாட்டினார்கீர்த்தியாக (வாது)
எழுத்துச்சொற்பொருள் யாப்பலங்காரமென
வைந்தாமிலக்கணநெறி காட்டி
அழுத்தமாய் மதுரமாய்ப் பிரபந்தகவிகள்
சொல்லுமவரேகவி கிரீட்டி
முழுத்திறமையில்லாத அரைவாயர்கால்வாயர்
முறுக்குவார்வீம்பு சூட்டிக்
கழுத்திற்கத்திக்கட்டியே சமர்த்திற்பாடும் வல்லமை
கவிராஜரெல்லாம் பணிகவிதார்க்கிககேசரி (வாது)
பன்றிபலகுட்டிகள் சடுதியிற்பெறுவதாற்
பலனென்ன அதினாலே
ஒன்றும்பெண்ணானையது பனிரண்டுவருஷத்துக்
கொருகுட்டி பெறல்போல
நன்றிதுவழகிய மணவாளப்பெருமாள்
நயினார்சொன்னது மேலே
யென்று வணங்கிச்சொல்ல வரங்கர்பிரமாத
மேறுங்கவிவாதிசிங்கேறென்றிடவேகொண்டார் (வாது)
விருத்தம்
தெரிசனத்தாரசூயையில்லாதிருக்கவென்ற
ஸ்ரீரங்கபதிசன்னிதியிலேநாளும்
வரிசையாய்ப்பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்
வடக்குவீதிப்பிள்ளையீட்டுக்கோசம்
பெரிதாகச்செய்ததனைப்பார்க்கவேண்டிப்
பிள்ளைலோகாசாரியரைக்கேட்டுவாங்கி
வரவெனவேசீடரிருவரையனுப்பும்
வழிசொல்வேன் பின்னடந்தமொழி சொல்வேனே
நாளை … நிகமபரிமளம் அருளியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக