புதன், 19 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்

படம் நன்றி: ஸ்ரீ ஸ்ரீதர் (சித்ர தேசிகீயம்)
“மின்னுமின்னுபூச்சி போலேயிருக்கிற
வேடிக்கையென்னென்று பேசுவார்......
.....................புழுவென்று வீசுவார்)


நிகம பரிமளம் அருளிச் செய்தது.

இதுவுமது (விருத்தம்)
பிள்ளையினிடத்திற்பிள்ளைலோகாரியர்
பேரியற்பாஷியம்படித்தார்
பிரபலமதுதானப்படியிருக்கப்
பேசினாரவர்சீஷர்முன்பாய்த்
தெள்ளியமொழிநம்மையருமீட்டைச்
செய்துநம்பிள்ளையாங்குருமுன்
சீர்பெறக்காட்டவீயுண்ணிமாதவர்
செங்கையிற்றந்ததாமென்ன
விள்ளுவார்கோசமேகொண்டுபார்த்தல்
விதியதோவுபதேசமுறையே
வேண்டுமென்றார்சீஷர்தாம்வந்து
பிள்ளையில்லாவுடமையா
கொள்ளையாவிங்குளாரிடம்படிக்கக்
கூறுவீரென்றதையறிந்தே
குருமணிநிகமபரிமளமருள்செய்
குருகிருபாநிதியிவரே.
தரு - இராகம் - அடாணா - தாளம் -- ஆதி
பல்லவி
விள்ளுவாரெங்கள் துன்பத்தைத்தள்ளுவாரே
வேதாந்தப்பொருளையெல்லாம்
அனுபல்லவி
விள்ளுவார்த்திருக்குருகைப்பிரான்
பிள்ளானிட்டவாறாயிரப்படிப்பொருள்
உள்ளதைத்தமக்குபதேசமாக அப்
புள்ளாரவரிதையனுபவமாக (விள்)
சரணங்கள்
அமுதமயநிகமபரிமளமென் றுரைசெய்யுமென்பதி
னாயிரப்படிதிருவாய்மொழி வியாக்கியானமும்
அமலனாதிபிரானுக்குமுனிவாகனபோகமென்
றுண்டாக்கியதொன்றான வியாக்கியானமும்
சமரசமாங் கண்ணினுண் சிறுத்தாம்புக்கொரு வியாக்கியானமும்
சங்கிரஹத்திருவாராதனக்கிரம ஞானமும்
குமுகுமுவென்றேமணந் தருமல்லிகை புஷ்பவாசனை
கொண்டவாக்குத்தனமாகப்பிரசண்டவாரிதிநிதானமும் (விள்)
பிரபத்திசாஸ்திரத்திற் சங்கிரகமாய்வேணுமென்றங்குளபெரியோர்
பிரார்த்திக்கநியாசவிஞ்சதி நாட்டியே
பிரபந்தசாரமென்றுசொல்லியாழ்வார்களுடைநாளூர்திங்கள்
பேசிவந்தமுதமயமாய்ச் சூட்டியே
பிரபன்னருக்கு உண்மையாகவர்ச்சியாவர்ச்சியத்தெளிவுகொண்டு
பேர்பெறுமாகாரநியமப் பாட்டுமே
பிரபலமானசர்வாதிகாரமா நித்தியானுசந்தேயப்
பெருகுமந்திரமாகுநல்லதிருமந்திரச்சுருக்குங்கூட்டமே (விள்)
கேளுமையாதுவயச்சுருக்குசரமசுலோகச்சுருக்குடனே
கீதார்த்தசங்கிரஹப்பாட்டும் பாடினார்
தோளிலெக்கியோபவீதப்பிரதிஷ்டாவ்தாயகமான
சுலோகங்கள்செய்தருளிப்புகழ் தேடினார்
ஆளுமெம்பெருமான்கச்சிப்பேரருளாளர்
ஹயக்ரீவாராதனங் கூடினார்
மீளுமிந்தவைபவஞ்சொன்னபேர்பாடினபேர்கள்
வேண்டுவதெல்லாம்பெறவேயாண்டவர்கிருபை நீடினார் (விள்)
கட்டளைக்கலித்துறை
பாடிப்படித்துமனப்பத்திவேண்டுமிப்பாரிடத்தே
நீடித்தகீர்த்திசெய்வேங்கடநாதனைநெஞ்சில்வைத்தால்
நாடிக்கொள்யாவுங்கைகூடுங்கண்டீர்நன்னிலந்தனிலே
கோடிக்குள்ளே யொருஞானியுண்டாமென்று கூறுவதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக