ஸ்ரீ ஹயக்ரீவப்பெருமான் நிமந்திரணத்துக்கு
எழுந்தருளியது.
விருத்தம்
பொறுமைமிகுமிவருக்கேவரதநாதன்
புத்திரனாயவதரித்துவளருநாளிற்
சிறிதுபேர்தரிசினத்தார்தாமேகூடித்
திருவத்தியயனத்தில்விரோதஞ்செய்தார்
திறமையுள்ளவிவரறிந்துகலக்கமில்லாச்
சித்தசுத்தராயிருந்த தெளிவினாலே
உறுதிகொண்டுவெண்பரிமுகத்தர்தாமே
யுண்டிட்டாரமுதுசெய்யக்கண்டிட்டாரே.
தரு - இராகம் - கலியாணி -- தாளம் - ஆதி
பல்லவி
அமுதுசெய்யக்கண்டுகொண்டாரே
யருளாளரயக்கிரீவரைக்கண்டாரே.
அனுபல்லவி
திமிரந்தன்னைத்தீர்க்குந்தேசிகர்க்கேயுகந்து
திருத்தந்தையனந்தார்யர்திருவத்தியயனத்தில்வந்து (அமு)
சரணங்கள்
திருவத்தியயனத்தின்முதனாட்டானேயிவர்
ஸ்ரீவைஷ்ணவர்க ணிதானம்
வரணஞ்செய்திருக்கவேசிலர்களசூயையாலவ்
வைஷ்ணவர்களுக்குப் பரதானந்
தரவும்வாங்கிக்கொண்டவர் மோசஞ்செய்துபுசித்துத்
தாம்பூலந்தரித்து மஞ்ஞானம்
விரவியிருந்தவர்கடிருவத்தியானகார்ய
விக்கினஞ்செய்யக்கண்டந்தவேளை யெம்பெருமானும்
(அமு)
அந்தவேளையில் ஸ்ரீவைணவர்கிடையாமை
யாலேவிசாரங்கொண்டு தேடிச்
சிந்தைசெய்திவர்பின்புதெளிந்து நம்குல
தெய்வம்வரதரென்று நாடி
எந்தமயக்கிரீவருமிருக்கக்குறையென்னென்
றிதயத்தில்வைத்தங்கே நீராடி
வந்துதான்கேசவாதிநாமங்களையுஞ்சாத்தி
மற்றுந்திருவத்தியனகிர்த்தியத்தில்வந்து கூடி (அமு)
வகைகொண்டேமூவன்னமும்வரிதங்கேயயக்கிரீவர்
வந்தருள்வாரென்றன்பு மீறிச்
சகலபதார்த்தங்களும்பரிபாகமானதெல்லாந்
தளிகைதன்னிலே பரிமாறிச்
செகந்நாதரானவயக்கிரீவரைத்தியானித்தங்கே
திரைபரிமாறித்துதி கூறிச்
சுகமாய்வெளியில்வைஷ்ணவபிதுருமந்திரங்களைச்
சொல்லிக்கொண்டிருக்கின்ற நல்லவேளையிற் றேறி
(அமு)
கட்டியசோறுடன் கறியுந்தயிருமெல்லாங்
கலந்துடனுண்டார்வாசு தேவர்
ஒட்டியமுதுசெய்யு மோசையுமுறிஞ்சலி
னோசையுமாயிருந்திங் கிவர்
சிஷ்டராம்விதுரான்னம் புசித்ததுபோலேகொண்டார்
திருப்தியடைந்தார்பிதிரு தேவர்
சட்டமதாயிருந்து தாம்பூலாதிவகையுஞ்
சமர்ப்பிக்கலாலாமுதந் தந்தாரேயயக்கிரீவர் (அமு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக