ஞாயிறு, 22 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனை

 

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனை

தரு -இராகம் - சாவேரி - தாளம் - ஆதி

பல்லவி

தேசிகன்றிருவடி மறவாரே -- இந்த

செகத்தில்மறுபிறவிபிறவாரே.

அனுபல்லவி

காசினிபுகழ்வேங்க டாசலபதிதிருக்

கண்டாமணியவதாரங் கொண்டாரெங்கணிகமாந்த

(தேசி)

சரணங்கள்

பரிவாந்திருமலைமேற்

- கோயிலதனிற்சென்று

பலிபீடஞ்செண்பகப்பிரா காரம்

வரிசையுடன்வலஞ்செய்

- தாஸ்தானமண்டபத்தை

வணங்கித்தண்டுலங்கள்சம் பாரம்

திரவியசாலைகளச்சேவித்துமேவடக்குத்

திருமடப்பள்ளிமேவு வாரங்

கரசிகளானநாச்சி

- யாரைப்பணிந்துகொண்டே

யமுனைத்துறைவரையும் சேவித்தவேதசாரம் (தேசி )

ஸ்வாமிபுஷ்கரணியை

- வலமாகவந்துஜோதி

சொர்ணமண்டபத்தையுங் கடந்தார்

அவாறழகியமண

- வாளன்மண்டபத்துக்கே

அஞ்சலித்துஞ்செண்பக நடந்தார்

அவாமிகுந்துதெண்டன்

- சமர்ப்பித்துள்ளேயெழுந்

தருளிமடப்பள்ளிமேற் றொடர்ந்தார்

இவாறேநாச்சிமாரையுந்

- திருவடி பணிந்துகந்

தியாகசாலையைவந்தித் தெழுந்தாரன்புபடர்ந்தார் (தேசி )

அணிதிவ்யவிமானத்து

- நம்பெருமாளென்னு

மானந்தநிலயனைப் போற்றி

மணிமண்டபமுதலான

- மாஸ்தானமண்டப

வரிசைப்பிரகாரங்களை யேத்திப்

பணிகொண்டுங்கண்ணாலே

- யாரப்பருகியனு

பவித்துஞ்சேனாநாதனை வாழ்த்தி

மணியுருவாகிவந்தார்

- பின்னும்பாஷியகாரரை

வணங்கியவர்தம்மனு மதிபெற்றதிவ்யமூர்த்தி (தேசி)

வேங்கடாத்திரிதிருச்

- சேவடிதலைக்கொண்டு

வென்றுமாலையிட்டானிற் சென்றார்

தீங்கில்லாததெதிர்நிலைக்

- கண்ணாடிபோற்பெரிய

திருவடிநயினாரைப்பரவு கின்றார்

ஓங்குந்துவாரபாலர்

- சக்ரவர்த்தித் திருமக

னுடனிவர்களையெல்லாம்பணி கின்றார்

நீங்காதவன்பினாலே

- யானந்தவெள்ளந்தானே

நிறைந்தலர்மேன்மங்கை நாயகர்முன்னேநின்றார் (தேசி)

விருத்தம்

படியாய்க்கிடந்துன்பவளவாய்

காண்பேனேன்னும்படியேதானே

அடியேனென்றேகுலசேகரன்படி

யருகினின்றகலுகில்லேனென்

றிடுபாட்டையனுசந்தித்தெம்பெருமானே

யாராவமுதேயென்றே

அடிதொடுத்துமுடிவரைக்குந்

தரிசனஞ்செய்தார் வேதாந்தாசாரியர்தாமே

--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக