புதன், 25 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப்
பிரகாசிகைக் கீர்த்தனை

தரு - இராகம் - புன்னாகவராளி - தாளம் - ரூபகம்
பல்லவி
தேசிகனே தூப்பில்வருந் திருவேங்கடத்தானே - எங்கள்
தெரிசனத்தைநிலைநிறுத்தச்செகத்தினில்வந்தானே.

அனுபல்லவி
பாசமதுபோலவரும் பரமதங்கள்பங்கஞ்செய்து
காசினியிலெங்குஞ்சொல்லுங்கவிதார்க்கிகசிங்கம்ஆன

சரணங்கள்
தாமரையடியிணைகட்கேற்ற
தண்டைசதங்கை சேர்த்தியுங்
கோமளமுழந்தாடிருத்தொடை
கொண்டவரையி னேர்த்தியுந்
தாமதின்மேலேபீதாம்பரத்தைத்
தகதகவெனச் சாத்தியும்
அபிராமமாயிசைந்தருளும்வேங்கட

நாயகர்தம்மைப் போற்றியுங்கண்ட (தேசி)
அலர்மேன்மங்கையுங்கண்டலங்காறை
யணிவியாக்கிரநகத் திறங்களும்
நலமிகுந்திடுங்கர்ணாசரியும்
நான்குதோளுங் கரங்களும்
பலவிதமானமணிகடகத்தின்
பாங்குந்தோள்வளை யுரங்களுஞ்
சொலுந்திருவாழிதிருச்சங்குகளுந்
துலங்குமனோ கரங்களுங்கண்ட (தேசி)
மந்தகாசத்துடன்கூடிய
வள்வதரமு நீள்தொடி
கந்தமுங்கிருபாகடாக்ஷங்களுங்
கபோலகங்களுங் கண்ணாடி
இந்துப்பிறையினெற்றியுமதி
விசைமுத்துநாடி மைவடிக்
குந்தளச்சுட்டிவரிசையுந்திருக்
கோரம்பச்சேவை யிப்படிக்கண்ட (தேசி)
மகரகுண்டலந்தொடுசெவிப்பூ
வாய்த்திடுமபி ஷேகமும்
வகைகண்டேதிருவடிமுதன்முடி
வரைக்குஞ்சேவிக்கும் யோகமும்

பகர்வர்மீளருமுடிதிருவடிப்
பரியந்தத்தின் வைபோகமும்
பகவனெம்பெருமானென்றேயனு
பவசனித்தப்ரதி யேகமுங்கண்ட (தேசி)

விருத்தம்
ததிபரத்துவஸவுலப்பியகாரணத்துவ
ஸ்வாமித்துவஸார்வஞ்ஞஸர்வஸக்தித்
வதிரக்ஷாவாத்ஸலியசௌசீல்யாதி
யனந்தகல்யாணகுணமிருக்கவேதம்
மதிவிளங்கிக்காருண்யமாகிநின்ற
மாகாகுணத்திலீடுகொண்டுவேங்கடாத்திரி
பதிதயாவிஷயமொருசதகஞ்செய்து
பரவினார்தூப்புனகர்வரவினாரே.

இதுவுமது

தசகமொருபத்தெனவேவிளங்குகின்ற
தயாசதகந்தலைக்கட்டப்பணிதல்கொண்டு
மிசைதிருவேங்கடமுடையான்கடாக்ஷஞ்செய்து
மெமதுகிருஷிபலன்பலித்ததென்றேயெட்டுத்

திசைபுகழ்வேதாந்தாசாரியராயிங்கே
தெரிசனப்பிரவர்த்தகராம்படியேசெய்தார்
அசையாதுதிருமலைமேல்வீற்றிருப்ப
ஆக்கினார்கலிதோஷம் போக்கினாரே.

தரு - இராகம் - ஆநந்தபைரவி - தாளம் - ஆதி
பல்லவி

பாதாரவிந்த வந்தனந்தானென்றன்
பலமேபுண்ணியபலமே.

அனுபல்லவி
தோதாரம்மனைப்பெற்ற மாதாவாகவிசைந்து
மேதானவதரி வேதாந்ததேசிகன் (பாதா)

சரணங்கள்

தடமலைமீதிலங்குள்ளவர்க்குப்பொரு ளோதி - எழுந்தருளியிருந்து
ஸர்வதந்திரஸ்வாதந்திரஸ்வாமிவெகு கியாதி
வடதிசைமதுரைசாளக்கிராம மாதி - யாந்திவ்யதேசங்களின்
வரிசைதரிசனமேதிருவுள்ளமாய் வந்தரீதி (பாதா)
கூடப்படித்தவித்தியாரணியருஞ்ஸன்னியாஸியாகித்தீர்த்த—யாத்திரைக்காகவே
கூடிப்புக்கராயப்பட்டணம்பெருமாள்கோயில்காத்த
நாடுக்கரசன்பண்ணினபிரமராக்ஷஸைதீரப்பார்த்த-- வித்தியாரணியரைவிட்டு
நடந்துபிருந்தாவனங்கோவர்த்தனஞ்செல்லவேற்ற (பாதா)
திருவாய்ப்பாடிமுதலாந்திவ்யதேசங்களுமயோத்தி -- திருப்பிருதிகண்டம்என்னுஞ்
சேர்ந்தகடிகைநகர்நைமிசாரண்யமதை யேத்தித்
திருத்துவாரகையின்மங்களாசாஸனஞ் சாத்திக் - காசிக்கெழுந்தருளி
ஜெயவிஷ்ணுபதிதன்னிலவகாசித்ததேசிகமூர்த்தி (பாதா)

விருத்தம்
திருப்புருஷோத்தமத்திலெழுந்தருளியங்கே
சேவித்துமேதீந்திரராம்பாஷ்யகாரர்
திருத்தியருள்கூர்மமுதலாந்தலங்கள்
சிங்காத்திரிபீடமஹோபிலமதெங்குங்
கருத்துடனேயெம்பெருமான்களைவணங்கிக்
கண்டுதிருவேங்கடத்தைத்தொழுதுபோந்து
திருக்கறுமவ்வெவ்வுளூரைப்பணிந்த
சீலர்தாம்தோதைபெற்றபாலர்தாமே.

இதுவுமது
பூசிகர்தான்றிருநின்றவூர்பணிந்து
புகழ்வல்லிக்கேணிநீர்மலைவிடந்தை
ஆசில்திருக்கடன்மல்லைதொழுதுகொண்டே
அணிபெரும்புதூரிலெதீந்திரரையேத்திக்
காசிமுதலாகியநன்னகரியெல்லாங்
கார்மேனியருளாளர்கச்சிக்கொவ்வாப்
பாசுரத்தையனுசந்தித்திசைந்தகாஞ்சிப்
பதிசென்றார்வேதாந்தநிதியென்றாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக