ஞாயிறு, 18 மார்ச், 2007

தினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்

மிதப்ரேக்ஷாலாபக்ஷணபரிணமத்பஞ்சஷபதா
மதுக்தி: த்வய்யேஷா மஹிதகவிஸம்ரம்பவிஷயே
ந கஸ்யேயம் ஹாஸ்யா ஹரிசரணதாத்ரி க்ஷிதிதலே
முஹூர்வாத்யாதூதே முகபவநவிஷ்பூர்ஜிதமிவ II

ஸ்ரீமதாண்டவன் : ஒரு மரம் மிகவும் பெரியதாயிருக்கிறது. அது எவ்வளவு பெரும் காற்றடித்தாலும் கொஞ்சம்தான் சலிக்கிறது. அதை ஒருவன் வாயால் ஊதினான் ஆனால், அதைப் பார்த்த யாவரும் சிரிப்பார்கள். அதுமாதிரி எவ்வளவோ பெரிய கவிகளால் ஸ்தோத்திரம் பண்ணக்கூடிய உன்னைப் பற்றி எனக்கு ஒரு சமயத்தில் சில ஸங்கதிகள் தோன்றுகின்றன. அப்போது ஐந்து ஆறு பதங்கள் தான் தோன்றுகின்றன. அதைக்கொண்டு உன்னை ஸ்தோத்திரம் பண்ணினேனானால் அதைக் கண்ட எல்லோரும் சிரிப்பார்கள்.
ஸ்ரீலக்ஷ்மிந்ருஸிம்ஹன்: ஹரியின் திருவடியைக் காக்கும் பாதுகையே! அற்ப அறிவே உடைய எனக்குச் சில சமயங்களில் உன் பெருமை பற்றி 5 அல்லது 6 வார்த்தைகள் தோன்றுகின்றன. அதை வைத்துக்கொண்டு, பெரும் கவிகளால் மட்டுமே ஸ்தோத்திரம் பண்ணமுடியும் உன் பெருமை பற்றி, நான் காவ்யம் இயற்ற முனைந்துள்ளது -- ஒரு பெரும் மரத்தை, ஒருவன் வாயால் ஊதித் தள்ள முயற்சிப்பது போன்ற ஹாஸ்யமான செயல்.

நிஸ்ஸந்தேஹநிஜாபகர்ஷவிஷயோத்கர்ஷோபி ஹர்ஷோதய
ப்ரத்யூடக்ரமபக்திவைபவத்வையாத்யவாசாலித:I
ரங்காதீசபதத்ரவர்ணநக்ருதாரம்பைர் நிகும்பைர் கிராம்
நர்மாச்வாதிஷூ வேங்கடேச்வரகவிர் நாஸீரமாஸீததி II

ஸ்ரீமதாண்டவன்: ஏ பாதுகையே! நான் மிகவும் தாழ்ந்தவனென்றும், பாதுகைகள் அதிக உயர்ந்தவை என்றும் தீர்மானமாய்த் தெரிந்திருக்கிறது.ஆனாலும் பாதுகைகளிடத்தில் மிகவும் அதிகமான பக்தியுண்டாக, அதனால் தலை தெரியாத ஸந்தோஷமுண்டாய், ஒரு தைரியமுண்டாயிருக்கிறது. அதனால் தாறுமாறாய் பிதற்றிக் கொண்டு விளையாடுபவர்களுக்குள்ளே முதலாவதாக இருக்கிறேன்.
ஸ்ரீலக்ஷ்மிந்ருஸிம்ஹன்: ஸ்தோத்திரம் பண்ணப்படவேண்டிய பாதுகையின் மேன்மை, எனது அருகதையின்மை இரண்டுமே ஸந்தேகமின்றித் தெரிந்த விஷயங்களே. எனினும் உன் மீதுள்ள பக்தி மேலீட்டால், உன் மேன்மையை விவரிக்க முற்பட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக