வெள்ளி, 16 பிப்ரவரி, 2007

"விருப்பப்படி"

இப்போது நள்ளிரவு மணி 2.21. இப்போதுதான் சென்னையிலிருந்து வந்தேன். வரும் வழியில் புதுக்கோட்டையில் இறங்கி சர்மா சொலுஷன்ஸ் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்குச் சென்று அவர்கள் வெளியிடப் போகும் "விருப்பப்படி" எழுத்துரு மாற்றியை நேரடி செயல்விளக்கம் அறிந்து வந்தேன். பிரமிப்பு அடங்கவில்லை. எனவே அதே பிரமிப்புடன், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில் இதை எழுதுகிறேன். ஒரு வரியில் சொல்வதானால், தமிழில் கணிணி இனி எல்லாருக்கும் உரித்துக்கொடுத்த வாழைப்பழத்தைச் சாப்பிடுவதுபோல் என்பேன். 105 font familiesக்குள் எதிலிருந்து எதற்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். விசைப்பலகை நமக்கு எது பிரியமோ அதைப்பயன் படுத்தலாம். பிழைதிருத்தியோ ஒரு அற்புதம். அண்பு என நீங்கள் அடித்தாலும், அடித்துமுடித்து அடுத்த நொடியே அது அன்பு என மாறி அதன் பின்னேதன் நீங்கள் மேற்கொண்டு தொடரமுடியும். முழுவதும் சொல்வது நன்றாக இருக்காது. பிப் 28 வரை பொறுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு அருமையான மென்பொருள் நம் பயன்பாட்டுக்கு கிடைக்கும்.

மென்பொருள்தான் இப்படியென்றால், அதை உருவாக்கிக்கொண்டிருக்கும் திரு விஜய், திரு இப்ரஹிம் இருவரைப் பற்றி எப்படிச் சொல்வது என்றே புரியாமல் திகைக்கின்றேன்.GDநாயுடுவைப் பற்றி நிறையப் படித்துள்ளோம். அப்படி 10 நாயுடுக்கள் இன்று புதுக்கோட்டை சர்மாவிலே. திரு சுஜாதா போன்றோரெல்லாம் நீண்ட நாள் ஏங்கிகொண்டிருந்த ஒரு standardised Tamil keyboard and fonts utilityஉருவாகிவிட்டது. தமிழுக்கென்று எத்தனை எழுத்துருக்கள்?எத்தனை விசைப்பலகைகள்? எது சரியானது என்ற விவாதம் எப்போது முடியும்? தேவையில்லை உங்களுக்கு எந்த எழுத்துரு பிடிக்கிறதோ அதை உங்களுக்கு எந்த விசைப்பலகை பழக்கமோ அதில் அடித்துக்கொள்ளுங்கள் என்பது "விருப்பப்படி" வரவேற்கத் தயாராவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக