திவ்யஸ்தாநாத் த்வமிவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாதந்யாஸம் ப்ரதமமநகா பாரதீ யத்ர சக்ரே I
யோகக்ஷேமம் ஸகலஜகதாம் த்வய்யதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸுதாச்ரோத்ரஜந்மா முநிர் மேII
ஸ்ரீமத் நம்மாண்டவன் : ஓ பாதுகையே! பிரம்மலோகத்திலிருந்து ஸ்ரீரங்கநாதனை நீ திருவயோத்திக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்தாய். உன்னைப் போலவே ஸரஸ்வதிதேவியும் வரும்பொழுது முதலில் ஸ்ரீவால்மீகியினிடத்தில் காலை வைத்தாள். அதாவது -- முதலிலே வால்மீகிதான் உன்னைப் பற்றி கவனம் பண்ணினார் ஸ்ரீமத் ராமாயணத்துக்கு ஆதிகாவ்யமென்று பெயர். எல்லா லோகங்களுடைய ஸகல க்ஷேமமும் உன் அதீநமென்று அறிந்த வால்மீகி மஹரிஷியானவர், எனக்கு நல்வார்த்தையைக் கொடுக்க வேண்டும்.
A. லக்ஷ்மிநரஸிம்ஹன்: பாதுகே! ஸரஸ்வதியின் அருள் பெற்று, ஆதிகாவ்யமான ராமாயணம் இயற்றிய வால்மீகி மகரிஷி, உன் பெருமை பற்றிச் சுலோகங்கள் இயற்ற , அடியேனுக்கு உயர்ந்த சொற்களை வழங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக