பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் I
யதுபஞ்சமசேஷத: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபாவ: II
ராகவனுடைய பாதுகைகளின் ப்ரபாவம் ப்ரஸித்தமானதற்குக் காரணம் பரதனேயன்றோ! அந்த பரதனை நான் வணங்குகின்றேன்.
நம்மாண்டவன் ஸாதித்தது: ஸ்ரீபரதாழ்வானால்தான் ஸ்ரீராமனுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதென்பது எல்லாவுலகுக்கும் தெரிந்தது. ஆகையால் ஸ்ரீபாதுகைகளிடத்தில் மஹாபக்தரான ஸ்ரீபரதாழ்வாரைத்தான் ஸேவிக்கின்றேன். ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் 25வது ச்லோகத்தில் அருளிச் செய்தபடி "பரத" என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது. அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்குத் தெரிந்தது. "பரத" என்பதால் தெரியப்படுத்தப்பட்டதில், பாவ, ராக, தாள என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும் மஹாபண்டிதரான நாதமுனிகளை ஸேவிக்கின்றேன்.
நானும் அந்த பாதாரவிந்தங்களை சேவிக்கிறேன்....
பதிலளிநீக்குஎல்லோருக்கும் துணை அந்தப் பாதாரவிந்தங்கள்தானே!
பதிலளிநீக்கு